Monday 12 August 2013

நான் அரசுக்கு எதிரானவன் அல்ல - தனுஷ் விளக்கம்

சென்னை, ஆகஸ்ட் 12 (டி.என்.எஸ்) தலைவா ரிலீஸ் தடை குறித்து நடிகர் தனுஷ், டிவிட்டர் இணையத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அந்த சில பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டது. அப்படி பிரசுரிக்கப்பட்ட கருத்து, தனுஷ், தமிழக அரசுக்கு எதிராக பேசியது போல இருந்ததால் தனுஷுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகர் தனுஷ், "எனது டுவிட்டரில் தலைவா படம் பற்றி நான் கூறியிருந்த கருத்தின் ஒரு பகுதி மட்டும் ஒரு சில நாளிதழ்களில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

ஒருபகுதி மட்டும் பிரசுரிக்கப்பட்டதனால் அது வேறு அர்த்தத்தை தருகிறது.

தமிழக அரசுக்கு எதிரான கருத்துகளை நான் தெரிவிக்கவில்லை. நான் அரசுக்கு எதிரான்வன் அல்ல." என்று தெரிவித்துள்ளார்.