Saturday 24 August 2013

செவ்வாய் தோஷம் நீக்கும் இறைவன் பூந்தமல்லி வைத்தீஸ்வரன்


நெரிசல் மிகுந்த சென்னை மாநகரத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கும், திருவள்ளூருக்கும் பயணிக்கும் அனைவரும் பூந்தமல்லியைக் கடக்காமல் இருக்க முடியாது. ‘பூவிருந்தவல்லிஎன்ற அழகிய பெயரைத் தாங்கிய இந்தப் புராதன நகரத்தில் உறையும் சிவன், வைத்தீஸ்வரன் என்னும் திருநாமத்தைத் தாங்கியிருக்கிறார்மனதுக்கு இனிமையான சூழலையும், விசாலமான பிரகாரத்தையும் கொண்ட இந்த திருத்தலத்தைஉத்தர வைத்தீஸ்வரன் கோயில்என்று அழைக்கிறார்கள்.

இந்த ஆலயத்தின் மூலவராக வைத்தீஸ்வரனும், தையல்நாயகி அம்மனும் வீற்றிருக்கிறார்கள். இந்த தலத்தில் அங்காரகன் (செவ்வாய்) வருகை தந்து, சிவனை வழிபட்டதாகப் புராணம் உண்டு. இதற்கு அடையாளமாக அங்காரகனின் பாதம் காணப்படுகிறது. இந்த தலத்திற்கு வந்து வழிபட்டால் செவ்வாய் தோஷம் தீரும் என்று நம்பப்படுகிறது. மேலும் செவ்வாய்க்கிழமைகளில் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. சென்னையில் உள்ள நவக்கிரகத் தலங்களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது.
கோயில் கோபுரம் கிழக்கு நோக்கியும், கோயிலும், மூலவரும் வடக்கு நோக்கியும் இருக்கின்றன. ஆலயத்தின் வடக்கு பிரகாரத்தில் பாண லிங்கம் ஒன்று வாசலைப் பார்த்து நிற்கிறது. உள்பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர், துர்க்கை, தக்ஷிணாமூர்த்தி, பிரம்மா, சுப்பிரமணியர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. ஆதி சங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ சக்கரம், சுப்பிரமணிய சக்கரம், சண்முக சக்கரம் ஆகிய மூன்று சக்கரங்களும் காட்சியளிக்கின்றன. 

கோயில் பிரகாரத்தில் உள்ள அழகிய சிற்பங்கள் ஆலயத்தின் ஆயிரம் ஆண்டுப் பழமையைப் பறைசாற்றுகின்றன. இங்கு தாழ பனை மரம் தல விருட்சமாகும். ஆலயத்தின் கிழக்கு வாயிலில் வினை தீர்த்தான் குளம் உள்ளது.

மாசி மாதத்தில் 21 முதல் 25ஆம் தேதி வரை சூரிய வெளிச்சம், வைத்தீஸ்வரன் மீது நேரடியாக விழுவது கண்கொள்ளாக் காட்சியாகும்சிவராத்திரி, பிரதோஷம், மாதப் பிறப்பு ஆகிய நேரங்களிலும் பக்தர்கள் திரண்டு வைத்தீஸ்வரனை வழிபடுகிறார்கள். அமைதியான முறையில் ஆண்டவனை துதித்து அருள்பெற வைத்தீஸ்வரனை வணங்க வாருங்கள்
.

No comments:

Post a Comment