Google+ Badge

Wednesday, 23 July 2014

மாமிசம் விரும்பிச் சாப்பிட்ட இராமன்!!!


டி. பரமேசுவர அய்யர் எனும் ஆய்வாளர் ``ராமாயணமும் லங்கையும் என்றொரு ஆங்கில நூலை 1940 -இல் எழுதியுள்ளார். பெங்களூரில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்ட அந்நூலில், ராமனின் ``கல்யாண குணங்களைப்பற்றி சவிஸ்தாரமாகவே வெளுத்துக் கட்டியிருக்கிறார்.


``ராமன் தெய்வீகமானவன் என்ற கருத்து வால்மீகியின் கண்களுக்குத் திரையிடவில்லை, அவனுடைய மானுடத் தன்மையை மறைக்கவில்லை. வில் வித்தையை ராமன் மிகவும் விரும்பினான். வேறெவரையும் விடச் சிறந்த வில்லாளியாக விளங்கினான். அவன் மனம், அவன் தசைத் திரட்சிமிக்க உடல்கட்டு எல்லாமே இறைச்சிக்காக வேட்டியாடியதால் அமைந்தவையே! வில் வித்தை, வேட்டையில் வேட்கை. மாமிசம் தேவை என்பதற்காகச் செய்த வேட்டைகள், சீதையின் மேல் காதல் இவைய னைத்தும் அவனது எலும்புகளில் ஊறித் திளைத்திருந்தன (பக்கம் 129).


``கோசகல நாட்டின் எல்லையைத் தாண்டிய போது திரும்பி, அயோத்தியிருக்கும் திசை நோக்கி ராமன்தன் மதுரமான குரலில் கூறுகிறான் - எப்பொழுது நான் திரும்பி வந்து இந்தக் காட்டில் மீண்டும் வேட்டை ஆடப் போகிறேன்? இந்த வேட்டை ராஜரிஷிகள் சம்மதித்த தல்லவா? (அயோத்யா காண்டம் சர்க்கம் 49 பாடல் 25,26,27) இறைச்சி உண்பதற்கான ஆசையின் அடிப்படையில்தான் வேட்டையை விரும்பினான் ராமன்.

``விடை பெறும்போது தன் தாயிடம் கூறுகிறான் - காட்டில் 14 ஆண்டுகள் முனிவனைப் போல் இருக்கப் போகிறேன். தேன், பழங்கள், கிழங்குகள் முதலியவற்றை மட்டும் புசித்துக் கொண்டு இறைச்சியைச் சாப்பிடாமல் இருக்கப் போகிறேன் என்று கூறுகிறான் (அயோத்யா காண்டம், சர்க்கம் 20 பாடல்கள் 27,28,29), (நூலின் பக்கம் 130).

குகனிடமிருந்து விடைபெற்றுக் காட்டுக்குப் போகக் கங்கை நதியைக் கடக்கும்போது ராமனின் தர்மபத்தினி சீதை சங்கல்பம் செய்கிறாள் - பத்திரமாக நான் திரும்பி வந்தால் ஓராயிரம் குடம் (ஒயின்) மதுவும், இறைச்சி உணவும் உனக்குப் படைப்பேன் என்கிறாள். (அயோத்யா காண்டம், சர்க்கம் 52, பாடல் 89)

காட்டிற்குள்நுழைந்த அன்று, ராமன், லட்சுமணன், சீதை ஆகியோர் இரவுப் பட்டினி. விடிந்ததும் விடியாததுமாக ராமனும், லட்சுமணனும் வில், அம்பை எடுத்துக்கொண்டு வேட்டைக்குப் போய்விட்டனர். ஒரு காட்டுப் பன்றி, ஒரு சாம்பார் மான், ஒரு புள்ளிமான், , ஒரு பெரிய ருரு ஆகிய நான்கு விலங்குகளை வேட்டையாடிக் கொன்று, கொண்டு வந்து ஒரு மரத்தடியில் சமைத்துச் சாப்பிட்டனர். (அயோத்யா காண்டம், சர்க்கம் 52, பாடல் 102) சீதையும் சேர்ந்துதான் சாப்பிட்டாள். சுவையான இறைச்சியை அவளுக்குத் தந்து அவளை ராமன் திருப்திப்படுத்தினான் (அயோத்யா காண்டம், சர்க்கம் 96, பாடல் 1).


அதோடு போகவில்லை அவர்களின் மாமிச மோகம்! நீர்க்கோழி (கி.)களில் இறைச்சி அதிகமாக இருக்குமாம். ஆகவே அவையும் மீன்களும் மிகவும் பிடிக்குமாம். கபந்தன் என்பான் லட்சுமணனிடம் கூறுகிறான் - தெள்ளிய ஆற்று நீரில் பம்பா ஏரியில் மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. அவற்றை உன் கூரிய அம்பை எய்துக் கொன்று ருசி பாருங்கள், ராமனுக்கு ரொம்ப ஆசையான உணவு இது என்கிறான் (நூலின் பக்கங்கள் 131, 132).


இத்துடன் முடியவில்லை. ``இறைச்சிப் படலம்! விருந்தினர்களுக்கு, அவர்கள் வேண்டாத விருந்தாளியாக இருந்தாலும், இறைச்சிச் சாப்பாடு போட்டிருக்கிறார்கள். தனியே இருந்த சீதையின் குடிலுக்கு மாறு வேடத்தில் ராவணன் வருகிறான். அவனை வரவேற்றுப் பேசி சீதை கூறுகிறாள் - சவுகரியமாக இருங்கள், என் கணவர் விரைவில் வந்து விடுவார். காட்டுப் பொருள்கள் (புஷ்கலம், வன்யா) கொண்டு வருவார். மான்கறி கொண்டு வருவார்; இஷ்னுமான் (முதலை முட்டை சாப்பிடும் விலங்கு) காட்டுப் பன்றிகளைக் கொன்று அவற்றின் இறைச்சியைக் கொண்டு வருவார் (ஆரண்ய காண்டம், சர்க்கம் 47, பாடல்கள் 22,23).

யமுனை நதியின் தெற்குக் கரையில் உள்ள ஆலமரத்தைத் தாண்டி காட்டினுள் சென்று வேட்டையாடி ஏராளமான (எண்ணெய்) மான்களை வேட்டையாடி வந்தனர் (அயோத்யா காண்டம், சர்க்கம் 55, பாடல் 32) (நூலின் பக்கங்கள் 139, 141). இராமன் கறி தின்றதை, ஏதோ ஓரிடத்தில் எழுதினார் என்றில்லாமல் பலப்பல இடங்களில் குறித்துள்ளார் வால்மீகி எனும்போது (வால்மீகியும் வேடர்தான், இறைச்சிப் பிரியர்தான்) ராமன் இறைச்சியையே விரும்பி உண்ணும் இளைஞன் என்பது வலியுறுத்தப் படுகிறது. இந்த லட்சணத்தில் `ராமன எதோ சுத்தப் சுயம்பிரகாசம் என்பது போலச் சிலர் இங்கே பேசுகிறார்கள், இன்றைக்கும் பேசுகிறார்கள் என்றால், இவர்களை என்ன பெயரிட்டழைப்பது?

-------"சார்வாகன்" அவர்கள் 20-12-2007 "விடுதலை" இதழில் எழுதியது.

முத்தான சிந்தனைகள்!!!

01. வாழ்வில் நமக்கு பலமுறை இரண்டாவது வாய்ப்பு கிடைக்கும், சில சமயம் பத்தாவது வாய்ப்புக் கூட கிடைக்கும், வாய்ப்பை இழந்துவிட்டோமென்று யாருமே நம்பிக்கை இழக்க வேண்டாம்.

02. வாழ்வின் இனிமையான பாகம் இனித்தான் வரவிருக்கிறது, எப்போதுமே இனித்தான்.. இது தனது 95 வது பிறந்த நாளில் நீதிபதி சர். எம். மல்லாக் கூறியது.
03. நான் இன்னும் வேலை செய்கிறேன். என் கைகள் கலப்பையிலும் என் முகம் எதிர் காலத்திலும் இருக்கிறது. மாலை நிழல் நீளுகிறது ஆனால் காலை என் இதயத்தில் இருக்கிறது.
04. முன்னேற்றம் என்ற கோடு உங்களுக்கு பின்னால் போய்விடவில்லை அது இன்னமும் உங்களுக்கு முன்னாலேயே கிடக்கிறது கலங்க வேண்டாம்.
05. கவலையோ குழப்பமோ இன்றி ஒவ்வொரு நாளையும் வரவேற்று, தனக்கு விதிக்கப்பட்ட செயல்களை செய்து, சந்தோஷமாக, பயமற்று வாழுங்கள். நல்ல நண்பர்களை உருவாக்குங்கள், நல்ல நினைவுகளை எண்ணி மகிழுங்கள், காலம் மறைவதை புறக்கணியுங்கள், எதிர் காலத்தை மட்டும் பாருங்கள் வாழ்வில் சிறந்தது இனிமேல்தான் வரப்போகிறது.
06. வயதான காலத்தை அரவணைத்து நேசியுங்கள். அதை எப்படி நேசிப்பது என்று உங்களுக்கு தெரிந்தால் அதில் சந்தோஷம் மிதமிஞ்சி இருக்கிறது. மெதுவாக கடந்து செல்லும் வருடங்கள்தான் ஒரு மனித வாழ்வில் மிக இனிமையானவை. அவை இறுதியை அடைந்துவிட்டாலும் அதன் சந்தோஷங்கள் மாறுவதில்லை.
07. இலையுதிர் காலம் என் தலையில் இருக்கிறது ஆனால் வசந்த காலம் என் இதயத்தில் இருக்கிறது.
08.
வயது என்பது மனதின் தன்மை
உங்கள் கனவுகளை நீங்கள் தொலைத்துவிட்டால்
நம்பிக்கை இழந்து விட்டால்
எதிர் காலத்தை நீங்கள் எதிர்பார்க்காவிட்டால்
உங்கள் இலட்சிய தாகம் அடங்கிவிட்டால்
நீங்கள் வயதானவர்தான்.
ஆனால் வாழ்வில் இருந்து சிநந்ததை நீங்கள் எடுத்து
விளையாட்டாக உங்களால் இருக்க முடிந்தால்
அன்பாக இருந்தால்
எவ்வளவு வருடங்கள் கடந்தாலும்
எத்தனை பிறந்த நாள் போனாலும்
உங்களுக்கு வயதாவதில்லை.
09. சந்தோஷத்தை தேடுபவர்களுக்கு மூன்று முக்கிய தேவைகள் உண்டு. . சுய அடையாளம் காணல் . சுய வழிகாட்டல் . சுய வெளிப்பாடு. வாழ்வு நாற்பது வயதில் தொடங்குகிறது சில சமயங்களில் அது அறுபது வயதுக்குப் பிறகுதான் உண்மையாகவே தொடங்குகிறது. ஆகவேதான் ஒவ்வொருவரும் முடி நரைக்கும் காலத்திலாவது தமது சுய வெளிப்பாட்டைக் காட்ட வேண்டும்.
10. நமது புருவங்களில் சுருக்கம் ஏற்படலாம். இதயத்தில் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நமது மனதிற்கு வயதாகக் கூடாது.
11. உங்கள் நரை முடி குறித்து வெட்கப்படாதீர்கள் அதை ஒரு கொடிபோல பெருமையாக அணியுங்கள். ஏனென்றால் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் இந்த நரைமுடியை பார்க்காமலே பலர் புவியில் இறந்துவிட்டார்கள். இதைப் பார்க்கும்வரை உங்களுக்கு வாழக் கிடைத்தது எத்தனை சிறப்பு என்று எண்ணுங்கள்.
12. மூளை நன்கு வளர்ந்து மூளையில் உள்ள வெண்ணிற செல்கள் நரை முடியாக வெளியே வருகின்றன அது பெருமைக்குரியதே.
13. இளமை என்பது வாழ்வின் பாகமல்ல அது ஒரு மனோநிலை. இளமை என்றால் பயத்தை தைரியம் வெற்றி கொள்ளும் மனோநிலை.
14. வருடங்களை கடப்பதால் ஒருவனுக்கு வயதாவதில்லை. தங்கள் இலட்சியங்களை துறப்பதால்தான் ஒருவனுக்கு வயதாகிறது.
15. உங்கள் நம்பிக்கையைப் போலவே இளையவராக இருக்கிறீர்கள், சந்தேகத்தைப் போலவே முதியவராக இருக்கிறீர்கள், தன்னம்பிக்கையைப் போலவே இளைஞராக இருக்கிறீர்கள், பயத்தைப் போலவே முதியவராக இருக்கிறீர்கள், விசுவாசத்தைப் போலவே இளைஞராக இருக்கிறீர்கள்.
16. முதுமை என்பது எப்போதுமே உங்களை விட 15 வயது அதிகமாக இருப்பது என்று எண்ணிக் கொள்ளுங்கள்.
17. ஒரு மனிதனின் மதிப்பு அவன் வாழ்ந்த வருடங்களின் எண்ணிக்கையாலோ அல்லது செய்த வேலையாலோ அளக்கப்படுவதில்லை. ஒரு மனிதனின் மதிப்பு அவன் உருவாக்கிய நடத்தையால்தான் அளக்கப்படுகிறது.
18. வாழ்வின் அந்திம காலத்தை நம்பிக்கையோடும் சந்தோஷத்தோடும் அணுகுங்கள். வாழ்வின் இறுதியை ஆர்வத்தோடு அணுகுங்கள், சோகத்தோடு அல்ல. ஏனெனில் வாழ்வின் இறுதிதான் சிறப்பானது, கடவுளை நம்புங்கள்.
19. உன்னிடம் எந்தத் திறமை இருந்தாலும் முட்டாளிடமிருந்து உன்னைப் பிரிக்கும் தெய்விக பொறியை வரவேற்று அதை வளர்த்துக் கொள். ஆனால் உன் வாழ்வின் குறிக்கோளாக உலக வெற்றியை கருதாதே.
20. வழி நீண்டதாகவும், கடினமானதாகவும் இருக்கலாம் ஆனால் போராட்டத்தையும், வலியையும் வரவேற்பாயாக. ஏனெனின் வாழ்வின் வலியில் இருந்துதான் ஞானமும், புரிதலும் வருகின்றன.
21. வலியை கற்றுக்கொள் கணக்கிடாதே..! வேதனையை எதிர் கொள் எதிர்க்காதே.
22. கடவுளின் சரியான திட்டப்படிதான் முழு வாழ்வும் இருக்கிறது. முழுவதும் பார், முழு வடிவமைப்பையும் பார். வாழ்வதும் கற்பதும் எவ்வளவு இனிமை எண்ணிப்பார்.
23. இருப்பது எல்லாமே என்றென்றும் நீடிக்கும் என்று கடந்த காலம் கூறுகிறது. உலகம் மாறும் ஆனால் ஆன்மாவும் கடவுளும் மாறாது. சாம்பலை விட்டுவிடு நெருப்பில் தங்கம்தான் மிஞ்சுகிறது.
24. புயலுக்கு பறவை சாயாமல் சரி செய்வதைப்போல
காலப் புயலில் உன்னை சரி செய்து கொள்
பயத்தை நீக்கு வாழ்க்கைக் கப்பலை நேராக செலுத்து
கப்பலுக்கு ஏற்ற துறைமுகம் அருகே வந்துவிட்டது
ஒவ்வொரு அலையும் சந்தோஷத்தில்….
25. மிகச் சிறந்த மதுவை எதிர் பாருங்கள் அது கடந்த காலத்தில் இல்லை கடவுள் நல்ல மதுவை இறுதியில்தான் வைத்திருப்பார்.
26. வாழ்வை எண்ணத்தாலும் செயலாலும் அளக்க வேண்டும், காலத்தால் அல்ல.
27. உன் தலைவிதி எதுவானாலும் நன்றியுள்ள சந்தோஷமான இதயத்தை கடவுளிடம் திருப்பித்தர தயாராக இரு.
28. உனக்கு வயதாகும் ஆனால் வாழ்வின் துடிப்பை இழந்துவிடாதே.. ஏனெனில் தெருவின் இறுதி வளைவுதான் சிறந்த வளைவு.
29. ஒவ்வொரு வருடமாக வாழ்வை வாழ்..
எதிர் காலத்தை நோக்கி தளராத இதயத்துடன் இரு
இலட்சியத்தை விட்டு விலகாதே
பயணம் கரடு முரடாக அல்லது வழுவழுப்பாக இருக்கட்டும்
நீ மட்டும் சந்தோஷத்தை இழந்துவிடாதே.
30. ஒவ்வொரு பெரிய போராட்டம் அல்லது தோல்வி இவற்றிலிருந்து ஒரு புதிய விடியல், வாழ்வின், உயிரின் மறுபிறப்பு தோன்றி முன்னேற்றத்தின் சக்திவாய்ந்த அலை மனிதனை மேலும் மேலும் உயர்த்தியே வருகிறது.