Google+ Badge

Sunday, 29 September 2013

இறந்தவர்களின் படங்களை பூஜை அறையில் வைக்கலாமா?


   இறந்தவர்கள் படங்களை பூஜையில் தெய்வ படங்களுடன் மாட்டக் கூடாது. இறந்தவர்கள், தெய்வமாக இருந்து நம்மை காப்பாற்றுவார்களே தவிர அவர்கள் தெய்வம் அல்ல. அதனால் இறந்தவர்கள் படங்கள் தனியாக வைத்து பூஜை செய்வது நல்லது.

   தெய்வங்களுக்கு பொதுவாக நாம் எந்த மலரால் அர்ச்சனை செய்கிறோமோ அதற்கு ஏற்ற பலன் இப்பிறவியில் மட்டுமேயன்றி, மறுபிறவிக்கும் அது பயன் தரும். அலங்காரத்திற்காக பயன்படும் எதுவுமே பூஜையறையில் வைக்கக்கூடாது. ஒரு படம்வைத்து பூஜை செய்தாலும் அது உருப்படியாக இருக்க வேண்டும். தூசி, ஓட்டடை படிந்து சுத்தம் செய்யாமல் வைத்திருக்கக் கூடாது. பழைய படங்கள், உடைந்த பொம்மைகள் மற்றும் கறைபடிந்த உடைந்த கண்ணாடியுடன் இருக்கும் படங்கள் கண்டிப்பாக பூஜையறையில் வீட்டிலேயே இருக்கக் கூடாது. சிலபேர் முப்பாட்டனார் காலத்தில் உள்ள படங்கள், கடையில் விற்கும் சக்கரம், இயந்திரங்கள், உறவினர், நண்பர்கள் கொடுத்தார்கள் என்று பூஜையறை முழுவதும் படங்களை ஒட்டி அது பாதி கிழிந்த நிலையில் இருக்கும். அப்படி இருக்கும் படங்களை நாம் கடலில் போடுவது நல்லது. 


  வீட்டில் பூஜையறையில் ஒற்றை குத்து விளக்கு ஏற்றக் கூடாது. காமாட்சி அம்மன் விளக்கு, மண் அகல் மற்றும் இரண்டு குத்து விளக்குகள் ஏற்றினால் நல்லது. மூன்று அடுக்கு வைத்த விளக்கு மிகச் சிறப்பானது. விளக்கு பூஜை செய்பவர்கள். ஒரு குத்து விளக்கில் ஐந்து முகமும் ஏற்றி பூஜை செய்யலாம். விளக்கு பூஜை செய்பவர்கள் ஒரு முகம் மட்டும் ஏற்றி செய்வது அவ்வளவு உகந்தது அல்ல. வீட்டில் பூஜை அறையில் எப்பொழுதும் ஒரு செம்பு தண்ணீர் இருப்பது நல்லது. அதே போல் கற்பூரம் ஆரத்திக்குப் பதிலாக நல்லெண்ணெய் தீபம் ஏற்றி ஆரத்தி செய்வது நல்லது. எக்காரணத்திலும் கடலெண்ணெய் தீபம் ஏற்றக் கூடாது.

    பூஜை அறையாக இருந்தாலும் சரி, சுவரில் தெய்வ படங்கள் வைத்து பூஜை செய்தாலும் சரி, எதுவாக இருந்தாலும் சுத்தமாக மனத் தூய்மையுடன் செய்தால் தெய்வம் நம்மில் குடிகொள்ளும். சுத்தமாக வீட்டை வைத்திருந்து பூஜை செய்தாலே எல்லா நலனும் நம்மைத் தேடிவரும்.

செவ்வாய் மண்ணில் தண்ணீர் : கியூரியோசிட்டி விண்கலம் கண்டுபிடிப்பு
செவ்வாய்க் கோளில் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் அமெரிக்காவின் ஆளில்லா விண்ணுளவி கியூரியோசிட்டி சேகரித்த மண் மாதிரிகளில் குறிப்பிடத்தக்க அளவு நீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விண்ணுளவில் உள்ள உபகரணங்கள் மண் மாதிரியின் ஒரு பகுதிகளை சூடாக்கிய போது பெருமளவு H2O ஆவியாக வெளியேறியுள்ளது. இது குறித்த தகவல்கள் சயன்ஸ் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.
செவ்வாயின் செந்தூசியில் 2% நீர் இருப்பதாக கியூரியோசிட்டி ஆய்வாளர் லோரி லெசின் மற்றும் அவரது குழுவினர் கூறுகின்றனர். இது எதிர்கால விண்வெளி வீரர்களுக்கு மிகவும் பயனுள்ள மூல வளமாக இருக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.


செவ்வாய்க் கோளின் முன்னைய சுற்றுச் சூழலில் உயிரினங்கள் வாழ்ந்துள்ளதா என்பதை அறிவதே கியூரியோசிட்டியின் இந்த ஆய்வின் முக்கிய நோக்கம் ஆகும்.
கியூரியோசிட்டி விண்கலம் 2012 ஆகத்து மாதம் 6 ஆம் நாள் செவ்வாயின் நிலநடுக்கோட்டுப் பகுதியில் உள்ள பள்ளம் ஒன்றில் தரையிறங்கியது. இத்தளவுளவி குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு செவ்வாயில் தங்கி அங்கு முன்னர் வாழ்ந்திருக்கக்கூடிய உயிரினங்கள் பற்றி ஆராயத் திட்டமிடப்பட்டுள்ளது.

Friday, 27 September 2013

மகாலட்சுமியின் பிறந்த வீடு தெற்கு ஈராக்…..!

     கி.மு.3000 ஆண்டுகளுக்கு முன்பு தெற்கு ஈராக்கில் அஸ்ஸிரியா என்ற அரசு இருந்து வந்தது. இங்குள்ள மலைப் பகுதி வரை ஆட்சி செய்த போது (கி.மு.884-860) அசுர் நாசிர்பால் வழியில் பிரபல அரசர்கள் திக்லாத் பிலிசர், சரகன், சென்ன செரிப் ஈசராதன், பாணிபால் ஆகியோர் வந்தனர். அங்கே வருணர் வழிபடப்பட்டு லட்சுமி தேவி மகளாக வந்தார். நம்மசச்புராணம் வருணன் நாட்டின் தலைநகர் ஸீசா என்கிறது. வருண தேசம் உள்ள பாரசீகமே பாற்கடல் பகுதி. இங்கு தோன்றிய லட்சுமிதேவிக்கு தெற்க ஈராக்தான் முதல் பிறந்த இடம் என்று கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளார்கள்.

(ரிக் 5-63-5-ஆதாரதுதி)

Thursday, 26 September 2013

கே.எஃப்.சி, மெக்டொனால்ட் அபாயம்!!!

      

      துரித உணவுகள் என்பவை நவீன வாழ்க்கையில் தற்போது தவிர்க்க முடியாத ஒரு அம்சமாக மாறி வருகிறது!

        மெக்டொனால்ட்ஸ், கேஎஃப்சி, பர்கர் கிங், சப்வே, டாமினோஸ், பீட்சா ஹட், பீட்சா கார்னர், டாகோ பெல் என்று துரித உணவகங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது
இவற்றில் அதிக அளவு

 
 1.கலோரி
2.கொழுப்பு
3.இனிப்பு
4.உப்பு சோடியம்
5.மாவுச்சத்து
6.புரதம்
காணப்படுவதே இவற்றை நாம் உண்ணக்கூடாது என்பதற்கான காரணங்கள்.
மெக்டொனால்டின்- டீலக்ஸ் பிரேக்ஃபாஸ்ட்:.
1220 கலோரி சத்து இதில் கொழுப்பு 550 கலோரி அடக்கம்!!
K F C -உருளைக்கிழங்கு மசித்த உணவு the mashed potato Bowl with Gravy- கலோரி சத்து 690 ,31 கிராம் கொழுப்புச்சத்து.
பிசா ஹட்-Stuffed Crust Meat over'spie- இதில் இரண்டு ஸ்லைசில் 1000 கலோரி சத்து,82கிராம் கொழுப்பு உள்ளது.
இத்தகைய உணவுகளால் என்ன ஏற்படுகிறது?
1.உடல் எடை அதிகரிப்பு
2.சர்க்கரை நோய்
3.மார்பகப்புற்று நோய்
4.இதய நோய்கள்
5.இடத்த அழுத்தம்
கடந்த 30 வருடங்களில்
1. எடை அதிகமான குழந்தைகள் 30% அதிகரித்துள்ளனர்.
2.60% அமெரிக்கர்கள்,13% குழந்தை,இளைஞர்கள் எடை அதிகம் ஆகியுள்ளனர்.
3.கடந்த வருடம் 115 பில்லியன் டாலர்கள் துரித உணவுக்காக அமெரிக்கர்கள் செலவிட்டுள்ளனர். இது அவர்கள் கார் வாங்க,கம்புயூட்டர் வாங்க,உயர்படிப்புக்கு செலவு செய்த தொகையைவிட அதிகம்!!
கற்றுக்கொள்ளும் திறன் குறைவு
புத்திசாலித்தனம்
1கிலோ கிரில் இறைச்சி =600 சிகரெட்டுகள்
1 கிரில் ட்ரம்ஸ்டிக்= 80 சிகரெட்டுகள்
இந்த துரித உணவுகள் மூளையைத் தூண்டி எண்டார்பின்,என்கெபலின் களின் சுரப்பை அதிகரிப்பதால் அந்த உணவுகளிம் மேல் அதிக விருப்பமும், அதை உண்ண அதிகத்தூண்டுதலும் ஏற்படுகிறதாம்.
இதற்கெல்லாம் யார் காரணம்?
1.பெற்றோர் இருவரும் வேலைக்குச்செல்வதால் சமைக்க இயலாமை.
என்ன செய்ய வேண்டும்?
1.உணவகங்கள் சமுதாய சிந்தனையுடன் தங்கள் உணவுகளைச் சமைக்க வேண்டும்.
2.கொழுப்பு குறைந்த மாமிசம்,
2.முழுதானிய கோதுமை ரொட்டி,
3.கொழுப்பு குறைந்த வறுவல்கள்,
4.இனிப்பு குறைவான பானங்கள்,
5.அதிக காய்கறிகள் கொண்ட உணவுகள்
ஆகியவற்றை துரித உணவகங்கள் செய்ய வேண்டும்..

கெண்டகி வறுகோழி- ஒரு அதிர்ச்சி தகவல்!!

      கெண்டகி வறுகோழி உண்ணாதவர்கள் இருக்க முடியாது. மேலை நாடுகளில் இது மிகவும் பிரபலமானது.தற்போது நம் ஊரிலும் அதிகம் கடைவிரிக்க ஆரம்பித்து விட்டார்கள் இந்நிறுவனத்தார்.
     புது ஹாம்ப்சயர் பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வில் கனவிலும் நினைக்கமுடியாத முடிவுகள் வந்துள்ளன!
     என்னவெனில் அவர்கள் சாதாரண கோழிகளை உபயோகிப்பதில்லை.
அவர்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உயிரிகளையே உபயோகிக்கிறார்கள். ஆதலால் அவற்றை கோழி என்று இனி அழைக்கப்போவதில்லை.
      இவர்கள் உருவாக்கும் கோழிகளுக்கு அலகு,இறகுகள்,கால்கள் கொஞ்சம்தான் இருக்கும். கறி அதிகம் கொடுக்கவேண்டும் என்பதற்காக எலும்பும் மிக மெலிவாக இருக்கும்.
   அவற்றின் உடலில் பொருத்தப்பட்டுள்ள குழாய்களின் வழியே அவற்றுக்குத்தேவையான சத்து அளிக்கப்படுகிறதாம். இவ்வகை உயிர் உருவாக்கும் சிலவும் குறைவாம்!!

அந்தவகைக்கோழிகளின் சில படங்கள் கீழே...

இந்த வகைக்கோழிகள் இனப்பெருக்கம் செய்யாது. இறகுகள் இல்லாததால் சூரிய வெளிச்சத்தில் பாதிக்கப்படும். மேலும் தொற்று நோய்களும் எளிதில் தாக்கும் என்று கூறுகிறார்கள்.

    அமெரிக்க உணவு கட்டுப்பாட்டுக்கழகம் இதைகோழிஎன்று அழைக்கக்கூடாது என்று கூறியுள்ளது!!

நல்லா யோசிங்க... கெண்டகி வறுவல் உண்ணும்முன்...