Wednesday 21 January 2015

தை மாதத்தின் சிறப்புகள்.....

 தை மாதம் 1ம் தேதி வியாழன் கிழமை உத்தராயண புண்ணிய காலம். இன்று பொங்கல் பண்டிகை. பொங்கல் வைக்க உகந்த நேரம் காலை 10-00 மணி முதல் 11-00 மணி வரை. இன்று கரிநாள் சுபகாரியங்களை தவிர்க்கவும்.

தை மாதம் 2ம் தேதி வெள்ளி கிழமை திருவள்ளுவர் தினம். மாட்டுப் பொங்கல் கோபூஜை செய்ய உகந்த நேரம் காலை 06-00 மணி முதல் 07-00 மணி வரை. இன்று கரிநாள் சுபகாரியங்களை தவிர்க்கவும். இன்று ஏகாதசி எனவே பெருமாளை வழிபடுவது வாழ்க்கையில் வளத்தைத் தரும்.

தை மாதம் 3ம் தேதி சனி கிழமை. காணும் பொங்கல். இன்று கரிநாள் சுபகாரியங்களை தவிர்க்கவும்.

தை மாதம் 4ம் தேதி ஞாயிறு கிழமை. இன்று பிரதோஷம். இன்று பிரதோஷ காலத்தில் நந்தி பகவானையும் சிவ பெருமானையும் வழிபடுவது வாழ்க்கையில் சிறப்பைத் தரும். இன்று ஞாயிறு பிரதோஷம் மிருத்யுஞ்சய பிரதோஷம், இப்பிரதோஷ வழிபாடு மரண பயத்தை நீக்கும்

தை மாதம் 7ம் தேதி புதன் கிழமை மாக ஸ்நானம் ஆரம்பம். இன்று முதல் முப்பது நாட்கள் புனித நதிகளில் நீராடி தோஷ பரிகாரங்கள் செய்தால் சகல தோஷங்களும் நீங்கும்.

தை மாதம் 10ம் தேதி சனி கிழமை வசந்த பஞ்சமி. இன்று லட்சுமி பூஜை செய்தால் வாழ்க்கையில் வசந்தம் என்னும் சந்தோஷம் நிலைத்து நிற்கும்.

தை மாதம் 12ம் தேதி  திங்கள் கிழமை ரத சப்தமி. இன்று பெருமாள் கோயில்களில் சூரிய பிரபையுடன் கூடிய ரதத்தில் திருமால் வலம் வருவார். ரதத்தில் வீற்றிருக்கும் திருமாலை தரிசித்தால் நம் முன்னோர்கள் மகிழ்ச்சியடைவார்கள். நம் வாழ்க்கை வளம் பெறும். தை

மாதம் 12ம் தேதி திங்கள் கிழமைஇன்று வைவஸ்வத மன்வாதி. இன்று இறந்த முன்னோர்களுக்கு தில ஹோமம், பித்ரு பூஜை, தர்ப்பணம் செய்ய உகந்தது. 

தை மாதம் 12ம் தேதி திங்கள் கிழமை. இன்று ரத சப்தமி, விசோக சப்தமி. இன்று சூரிய அவதாரம் நிகழ்ந்த நாளாகும். இன்று சூரியன் சூரிய நாராயணனாக காட்சி அளிக்கிறார். இன்று பெருமாள் கோயில்களில் ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட சூரிய பிரபையில் பெருமாள் திருவீதி வருவார். சூரிய பிரபையில் பெருமாளை வழிபடுபவர்களுக்கு பித்ரு தோஷம் நீங்கும். இன்று சூரிய பூஜை செய்தால் சகல கஷ்டங்களும் விலகும்.

தை மாதம் 13ம் தேதி செவ்வாய் கிழமை. இன்று பீஷ்மாஷ்டமி. மகாபாரத காலத்தில் பீஷ்மர் கிருஷ்ணருக்கு பூஜை செய்த நாள். இன்று கிருஷ்ணருக்கு பூஜை செய்தால் ஞானமும, பலமும் பெறலாம்.

தை மாதம் 16ம் தேதி  வெள்ளி கிழமை. இன்று பீஷ்ம ஏகாதசி, ஜெயாஏகாதசி. இன்று பீஷ்மர் ஏகாதசி விரதம் இருந்து முக்தியடைந்த நாள். இன்று விரதம் இருந்து பெருமாளை வழிபடுபவர்களுக்கு முக்தி கிடைக்கும்.

தை மாதம் 17ம் தேதி சனி கிழமை. பீஷ்ம துவாதசி, பீம துவாதசி விரதம். இன்று பீமர் விரதம் இருந்து துவாதசி படையல் வைத்து அன்னதானம் செய்தார், இதனால் உடல் பலமும் வைகுண்ட பிராப்தியும் அடைந்தார்.

தை மாதம் 18ம் தேதி  ஞாயிறு கிழமை. உத்தம, வராஹ கல்பாதி. இன்று கல்பாதி புண்ணிய தினம். இன்று முன்னோர்களை வழிபடுவதற்க்கும், தில தர்ப்பணம், பித்ரு ஹோமம், தில ஹோமம் போன்றவை செய்வதன் மூலம் முன்னோர்கள் திருப்தியடைவார்கள். இன்று மிருத்யுஞ்ஜய பிரதோஷம் நந்தி பகவானையும் சிவ பெருமானையும் வழிபடுவது வாழ்க்கையில் வளம் சேர்க்கும்.

தை மாதம் 20ம் தேதி செவ்வாய் கிழமை ஆகாமாவை. இன்று சூரிய உதயத்தில் புனித நீராடுவது சிறப்பு. சகல தோஷங்களும் நிவர்த்தியாகும்.

தை மாதம் 20ம் தேதி செவ்வாய் கிழமை. இன்று தைபூசம். பௌர்ணமி பூஜை சத்தியநாராயண பூஜை செய்வது வாழ்க்கையில் வளம் சேர்க்கும். வடலூர் ஜோதி தரிசனம்.
தை மாதம் 24ம் தேதி (07-02-2015) சனி கிழமை. இன்று சங்கடஹர சதுர்த்தி. விநாயகரை வழிபடுவது வாழ்க்கையில் உண்டாகும் சங்கடங்களை நீக்கி வாழ்க்கையில் வளம் பெற உதவும்.

தை மாதம் 29ம் தேதி வியாழன் கிழமை. இன்று காலாஷ்டமி - தேய்பிறை அஷ்டமி. கிருஷ்ணருக்கும் காலபைரவருக்கும் உகந்த நாள். இன்று இவர்களை வழிபட சகல தடைகளும் நீங்கி செல்வச் செழிப்பு ஏற்படும். இன்று முன்னோர்களுக்கு திதி செய்ய விடுபட்டிருந்தால் இன்று செய்யலாம்.

வாஸ்து நாள்
தைமாதம் 12ம் தேதி  திங்கள் கிழமை வாஸ்து நாள் ஆகும். இன்று காலை 09-12 மணி முதல் 10-42 மணி வரை வாஸ்து பூஜை செய்வது சிறப்பு. இந்த ஒன்றரை மணி நேரத்தில் வாஸ்து பகவான் எழுந்திருந்து பல்துலக்கி, குளித்து, பூஜை செய்து, உணவு உண்டுவிட்டு, தாம்பூலம் மென்றுவிட்டு மீண்டும் சயனித்துவிடுவார். மேற்கண்ட ஐந்து செயல்களையும் பதினெட்டு நிமிடம் வீதமாக செய்வார். இவற்றில் கடைசி செயல்களான உணவு உண்பது தாம்பூலம் மெல்லுதல் ஆகிய காரியங்களை செய்யும் 36 நிமிடங்களில் வாஸ்து பூஜை செய்வது நன்மையை பயக்கும். அதாவது 10-06 மணி முதல் 10-42 மணிக்குள் வீடு கட்டக் கூடிய நிலத்தில் வாஸ்து பூஜை செய்வது சிறப்பு எவ்வித சிரமுமின்றி வீடு கட்டி முடிக்கலாம். புதிதாக வீடு கட்டுபவர்கள் மட்டுமல்லாமல் நம் இல்லத்திலும் மஞ்சள் மற்றும் உப்பு கலந்த நீரை வீடு முழுவதும் தெளித்து வாஸ்து பூஜை செய்வது வீட்டில் உள்ள வாஸ்து தோஷங்களை நீக்கி வாழ்க்கையில் வளங்களை சேர்க்கும்.

Sunday 11 January 2015

அம்மன் கோயில்கள் :-


அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில், பெருங்களத்தூர், சென்னை
அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோயில், பெசன்ட் நகர், சென்னை
அருள்மிகு முண்டககண்ணியம்மன் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை
அருள்மிகு அரைக்காசு அம்மன் திருக்கோயில், ரத்னமங்கலம், சென்னை
அருள்மிகு ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி திருக்கோயில், நங்கநல்லூர், சென்னை
அருள்மிகு திருப்பதி கங்கையம்மன் திருக்கோயில், வண்ணாந்துறை, சென்னை
அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில், சிங்காநல்லூர், கோயம்புத்தூர்
அருள்மிகு மகாலெட்சுமி திருக்கோயில், ஈச்சனாரி, கோயம்புத்தூர்
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், கொழுமம், கோயம்புத்தூர்
அருள்மிகு மலையாள தேவி துர்காபகவதி திருக்கோயில், நவகரை, கோயம்புத்தூர்
அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில், சுண்டக்காமுத்தூர், கோயம்புத்தூர்
அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோயில், பெருமாநல்லூர், கோயம்புத்தூர்
அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில், கோயம்புத்தூர், கோயம்புத்தூர்
அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில், கோயம்புத்தூர், கோயம்புத்தூர்
அருள்மிகு சூலக்கல் மாரியம்மன் திருக்கோயில், சூலக்கல், கோயம்புத்தூர்
அருள்மிகு மந்தை முத்தாலம்மன் திருக்கோயில், சிறுகுடி, திண்டுக்கல்
அருள்மிகு மூங்கிலடி அன்னகாமு திருக்கோயில், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்
அருள்மிகு ராஜகாளியம்மன் திருக்கோயில், தெத்துப்பட்டி, திண்டுக்கல்
அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோயில், அகரம், திண்டுக்கல்
அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில், திண்டுக்கல், திண்டுக்கல்
அருள்மிகு கொண்டத்து காளியம்மன் திருக்கோயில், பாரியூர், ஈரோடு
அருள்மிகு பத்ரகாளி அம்மன் திருக்கோயில், அந்தியூர், ஈரோடு
அருள்மிகு ராமலிங்க சவுடேஸ்வரி திருக்கோயில், தாசப்பக்கவுடர்புதூர், ஈரோடு
அருள்மிகு சாரதா மாரியம்மன் திருக்கோயில், கோபிசெட்டிப்பாளையம், ஈரோடு
அருள்மிகு சீதேவி அம்மன் திருக்கோயில், காஞ்சிக்கோயில், ஈரோடு
அருள்மிகு சின்ன மாரியம்மன் திருக்கோயில், கருங்கல்பாளையம், ஈரோடு
அருள்மிகு மலையாள பகவதிஅம்மன் திருக்கோயில், கணக்கன்பாளையம், ஈரோடு
அருள்மிகு கொங்காலம்மன் திருக்கோயில், ஈரோடு, ஈரோடு
அருள்மிகு பெரிய மாரியம்மன் திருக்கோயில், பிரப் ரோடு, ஈரோடு
அருள்மிகு விஜய ஜெய சாமுண்டீஸ்வரி திருக்கோயில், புதுப்பட்டினம், காஞ்சிபுரம்
அருள்மிகு திரிசக்தி அம்மன் திருக்கோயில், தாழம்பூர், காஞ்சிபுரம்
அருள்மிகு ஆதிகாமாட்சி திருக்கோயில், காஞ்சிபுரம், காஞ்சிபுரம்
அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், காஞ்சிபுரம், காஞ்சிபுரம்
அருள்மிகு காமாட்சி திருக்கோயில், மாங்காடு, காஞ்சிபுரம்
அருள்மிகு ஞான சரஸ்வதி திருக்கோயில், பஸாரா, ஆதிலாபாத்
அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில், கிருஷ்ணராயபுரம், மகாதானபுரம், கரூர்
அருள்மிகு முத்துக்குழி அம்மன் திருக்கோயில், பேரையூர், மதுரை
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், வண்டியூர், மதுரை
அருள்மிகு நாகம்மாள் திருக்கோயில், பாலமேடு, கெங்கமுத்தூர், மதுரை
அருள்மிகு முத்துநாயகியம்மன் திருக்கோயில், பரவை, மதுரை
அருள்மிகு ஸ்ரீ வித்யா பரமேஸ்வரி திருக்கோயில், மதுரை, மதுரை
அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், மதுரை எல்லீஸ் நகர், மதுரை
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், கரூர், கரூர்
அருள்மிகு திரவுபதி அம்மன் திருக்கோயில், தவிட்டு சந்தை, மதுரை
அருள்மிகு காளியம்மன் திருக்கோயில், காளியூர், நாகப்பட்டினம்
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், கொன்னையூர், புதுக்கோட்டை
அருள்மிகு காதமறவர் காளி திருக்கோயில், துரையசபுரம், புதுக்கோட்டை
அருள்மிகு புவனேஸ்வரி திருக்கோயில், கீழ ஏழாம் வீதி, புதுக்கோட்டை
அருள்மிகு உலகநாயகி அம்மன் திருக்கோயில், தேவிபட்டினம், ராமநாதபுரம்
அருள்மிகு முத்தால பரமேஸ்வரியம்மன் திருக்கோயில், பரமக்குடி, ராமநாதபுரம்
அருள்மிகு நம்புநாயகி அம்மன் திருக்கோயில், தனுஷ்கோடி, ராமநாதபுரம்
அருள்மிகு கண்ணனூர் மாரியம்மன் திருக்கோயில், கண்ணனூர், சேலம்
அருள்மிகு பத்திர காளியம்மன் திருக்கோயில், மடப்புரம், சிவகங்கை
அருள்மிகு பொன்னழகியம்மன் திருக்கோயில், .சிறுவயல், சிவகங்கை
அருள்மிகு கொப்புடை நாயகி அம்மன் திருக்கோயில், காரைக்குடி, சிவகங்கை
அருள்மிகு பிள்ளைவயல் காளி திருக்கோயில், பையூர் பிள்ளைவயல், சிவகங்கை
அருள்மிகு கண்ணுடைய நாயகி திருக்கோயில், நாட்டரசன்கோட்டை, சிவகங்கை
அருள்மிகு வயநாச்சி மற்றும் பெரியநாயகி திருக்கோயில், வேலங்குடி, சிவகங்கை
அருள்மிகு புல்வாநாயகி திருக்கோயில், பாகனேரி, சிவகங்கை
அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், தாயமங்கலம், சிவகங்கை
அருள்மிகு சந்தோஷிமாதா திருக்கோயில், பாதரகுடி-காரைக்குடி, சிவகங்கை
அருள்மிகு விஷ்ணுதுர்கை திருக்கோயில், பாலதள்ளி, தஞ்சாவூர்
அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், மணலூர், தஞ்சாவூர்
அருள்மிகு ஏகவுரி அம்மன் திருக்கோயில், வல்லம், தஞ்சாவூர்
அருள்மிகு வனதுர்கா பரமேஸ்வரி திருக்கோயில், கதிராமங்கலம், தஞ்சாவூர்
அருள்மிகு ஆகாச மாரியம்மன் திருக்கோயில், திருநறையூர், தஞ்சாவூர்
அருள்மிகு காத்யாயனி அம்மன் திருக்கோயில், மரத்துறை, தஞ்சாவூர்
அருள்மிகு கோடியம்மன் திருக்கோயில், தஞ்சாவூர், தஞ்சாவூர்
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், ராசிபுரம், நாமக்கல்
அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில், சிறுவாச்சூர், பெரம்பலூர்
அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில், சத்திரம் கிராமம், புதுக்கோட்டை
அருள்மிகு அஷ்டதசபுஜ மகாலட்சுமி துர்க்கை திருக்கோயில், குறிச்சி, புதுக்கோட்டை
அருள்மிகு பொய்யாளம்மன் திருக்கோயில், ஒக்கூர், புதுக்கோட்டை
அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், திருவப்பூர், புதுக்கோட்டை
அருள்மிகு பிரத்யங்கிராதேவி திருக்கோயில், அய்யாவாடி, தஞ்சாவூர்
அருள்மிகு கவுமாரியம்மன் திருக்கோயில், வீரபாண்டி, தேனி
அருள்மிகு நாககாளியம்மன் திருக்கோயில், முத்துதேவன்பட்டி, தேனி
அருள்மிகு காளியம்மன் திருக்கோயில், ஆண்டிபட்டி, தேனி
அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில், ராமாபுரம் (புட்லூர்), திருவள்ளூர்
அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு, திருவள்ளூர்
அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில், குலசேகரன்பட்டினம், தூத்துக்குடி
அருள்மிகு அலங்கார செல்வி அம்மன் திருக்கோயில், வசவப்புரம், தூத்துக்குடி
அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில், துறையூர், திருச்சி
அருள்மிகு கவுமாரி (சப்தமாதர்) திருக்கோயில், மணக்கால், திருச்சி
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், மணப்பாறை, திருச்சி
அருள்மிகு பூங்காளியம்மன் திருக்கோயில், தென்னூர், திருச்சி
அருள்மிகு உஜ்ஜைனி காளியம்மன் திருக்கோயில், மாகாளிக்குடி, திருச்சி
அருள்மிகு ஆதிமாரியம்மன் திருக்கோயில், எஸ்.கண்ணனூர், திருச்சி
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம், திருச்சி
அருள்மிகு வெக்காளி அம்மன் திருக்கோயில், உறையூர், திருச்சி
அருள்மிகு காவேரிஅம்மன் திருக்கோயில், திருச்சி, திருச்சி
அருள்மிகு பகளாமுகி திருக்கோயில், தெற்கு பாப்பாங்குளம், திருநெல்வேலி
அருள்மிகு சப்தகன்னியர் திருக்கோயில், பெட்டைக்குளம், திருநெல்வேலி
அருள்மிகு செல்லி அம்மன் திருக்கோயில், வடக்கு வாசல், திருநெல்வேலி
அருள்மிகு பேராத்துச்செல்வி திருக்கோயில், வண்ணார்பேட்டை, திருநெல்வேலி
அருள்மிகு தீப்பாச்சியம்மன் திருக்கோயில், திருநெல்வேலி, திருநெல்வேலி
அருள்மிகு கோட்டைமாரியம்மன் திருக்கோயில், திருப்பூர், திருப்பூர்
அருள்மிகு கோவர்த்தனாம்பிகை திருக்கோயில், பெருமாநல்லூர், திருப்பூர்
அருள்மிகு ரேணுகாம்பாள் திருக்கோயில், படவேடு, திருவண்ணாமலை
அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், வந்தவாசி, திருவண்ணாமலை
அருள்மிகு பச்சையம்மன் திருக்கோயில், வாழைப்பந்தல், திருவண்ணாமலை
அருள்மிகு கங்கையம்மன் திருக்கோயில், சந்தவாசல், திருவண்ணாமலை
அருள்மிகு ராஜதுர்க்கை திருக்கோயில், திருவாரூர், திருவாரூர்
அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், மன்னார்குடி, குன்னியூர், திருவாரூர்
அருள்மிகு அங்காள ஈஸ்வரி திருக்கோயில், மாந்தோப்பு, விருதுநகர்
அருள்மிகு நல்லதங்காள் திருக்கோயில், வத்திராயிருப்பு, விருதுநகர்
அருள்மிகு காமாக்யாதேவி திருக்கோயில், கவுகாத்தி, கவுகாத்தி
அருள்மிகு பம்லேஷ்வரி திருக்கோயில், டோங்கர்கர், ராஜ்நந்தகான்
அருள்மிகு அம்பே மா அம்மன் திருக்கோயில், அம்பாஜி, பனஸ்கந்தா, அகமதாபாத்
அருள்மிகு ரேணுகாதேவி திருக்கோயில், சவுண்டாட்டி, பெல்காம், பெல்காம்
அருள்மிகு சாரதாம்பாள் திருக்கோயில், சிருங்கேரி, சிக்மகளூர்
அருள்மிகு துர்கா பரமேஸ்வரி திருக்கோயில், கட்டீல், மங்களூரு
அருள்மிகு ஜுவாலாமுகியம்மன் திருக்கோயில், உத்தனஹள்ளி, மைசூரு
அருள்மிகு நிமிஷாம்பாள் திருக்கோயில், கஞ்சாம், மைசூரு
அருள்மிகு மூகாம்பிகை திருக்கோயில், கொல்லூர், உடுப்பி
அருள்மிகு மலையாள மகாலட்சுமி திருக்கோயில், பள்ளிப்புரம், ஆலப்புழா
அருள்மிகு சோட்டானிக்கரை பகவதி திருக்கோயில், சோட்டானிக்கரை, எர்ணாகுளம்
அருள்மிகு சரஸ்வதிஅம்மன் திருக்கோயில், பனிசிகாடு, கோட்டயம்
அருள்மிகு குமாரநல்லூர் பகவதி திருக்கோயில், குமாரநல்லூர், கோட்டயம்
அருள்மிகு சக்குளத்துகாவு பகவதி திருக்கோயில், சக்குளத்துக்காவு, கோட்டயம்
அருள்மிகு லோகாம்பிகா அம்மன் திருக்கோயில், லோகனார்காவு, கோழிக்கோடு
அருள்மிகு பகவதி திருக்கோயில், மணப்புள்ளி, பாலக்காடு
அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில், வடக்கன்தரை, பாலக்காடு
அருள்மிகு பழஞ்சிறை தேவி திருக்கோயில், கிழக்குக் கோட்டை, திருவனந்தபுரம்
அருள்மிகு பனமோடு தேவி திருக்கோயில், வள்ளக்கடவு, திருவனந்தபுரம்
அருள்மிகு ஆற்றுக்கால் பகவதி அம்மன் திருக்கோயில், ஆற்றுக்கால், திருவனந்தபுரம்
அருள்மிகு கொடுங்கலூர் பகவதி அம்மன் திருக்கோயில், கொடுங்கலூர், திருச்சூர்
அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில், கோலாப்பூர், கோலாப்பூர்
அருள்மிகு மும்பாதேவி திருக்கோயில், மும்பை, மும்பை
அருள்மிகு செங்கழுநீர் அம்மன் திருக்கோயில், வீராம்பட்டினம், புதுச்சேரி
அருள்மிகு காத்தாயி அம்மன் திருக்கோயில், காட்டுமன்னார் கோவில், கடலூர்
அருள்மிகு தில்லை காளி திருக்கோயில், சிதம்பரம், கடலூர்
அருள்மிகு பச்சைவாழியம்மன் திருக்கோயில், எழுமேடு, கடலூர்
அருள்மிகு காயத்ரி அம்மன் திருக்கோயில், சிதம்பரம், கடலூர்
அருள்மிகு கிளியாளம்மன் திருக்கோயில், பெரியகுமட்டி, கடலூர்
அருள்மிகு கோலவிழி அம்மன் திருக்கோயில், வானமாதேவி, கடலூர்
அருள்மிகு ராஜராஜேஸ்வரி திருக்கோயில், பொலாலி, தட்ஷின கன்னடா
அருள்மிகு சந்தைக் கடை மாரியம்மன் திருக்கோயில், உதகை, நீலகிரி
அருள்மிகு தந்தி மாரியம்மன் திருக்கோயில், குன்னூர், நீலகிரி
அருள்மிகு லட்சுமி நாராயணி திருக்கோயில், ஸ்ரீபுரம் திருமலைக்கோடி, வேலூர்
அருள்மிகு செல்வலலிதாம்பிகை திருக்கோயில், செல்லப்பிராட்டி, செஞ்சி, விழுப்புரம்
அருள்மிகு கவுமாரியம்மன் திருக்கோயில், பெரியகுளம், தேனி
அருள்மிகு சாமாண்டியம்மன் திருக்கோயில், கம்பம் சாமாண்டிபுரம், தேனி
அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில், பொள்ளாச்சி, ஆனைமலை, கோயம்புத்தூர்
அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில், மண்டைக்காடு,
அருள்மிகு கனக துர்கா திருக்கோயில், கனகபுரி, இந்திரகிலபர்வதம், விஜயவாடா
அருள்மிகு செல்லத்தம்மன், கண்ணகி திருக்கோயில், மதுரை, மதுரை
அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில், கன்னியாகுமரி, கன்னியாகுமரி
அருள்மிகு திரவுபதி அம்மன் திருக்கோயில், ஐவர்மலை, திண்டுக்கல்
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், நத்தம், திண்டுக்கல்
அருள்மிகு தம்பிராட்டியம்மன் திருக்கோயில், ஈங்கூர்., ஈரோடு
அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில், பண்ணாரி, ஈரோடு
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், உடுமலைப்பேட்டை, கோயம்புத்தூர்
அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயில், மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர்
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், புன்னைநல்லூர், தஞ்சாவூர்
அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில், சேலம், சேலம்
அருள்மிகு பாகம்பிரியாள் திருக்கோயில், திருவெற்றியூர், சிவகங்கை
அருள்மிகு வெட்டுடையா காளி திருக்கோயில், கொல்லங்குடி, சிவகங்கை
அருள்மிகு பிடாரி செல்லாண்டியம்மன் திருக்கோயில், ஒருவந்தூர், நாமக்கல்
அருள்மிகு அருங்கரை அம்மன் திருக்கோயில், பெரியதிருமங்கலம், கரூர்
அருள்மிகு ஜெனகை மாரியம்மன் திருக்கோயில், சோழவந்தான், மதுரை
அருள்மிகு காமாட்சி, ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், மதுரை, மதுரை
அருள்மிகு பேச்சியம்மன் திருக்கோயில், மதுரை, மதுரை
அருள்மிகு கண்ணகி திருக்கோயில், கூடலூர், தேனி
அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில், மேல்மலையனூர், விழுப்புரம்
அருள்மிகு நாககன்னியம்மன் திருக்கோயில், தும்பூர், விழுப்புரம்
அருள்மிகு இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயில், இருக்கன்குடி, விருதுநகர்
அருள்மிகு வைஷ்ணவிதேவி திருக்கோயில், கட்ரா, கட்ரா
அருள்மிகு பிரத்யங்கிராதேவி திருக்கோயில், மொரட்டாண்டி, புதுச்சேரி
அருள்மிகு முல்லைக்கல் ராஜராஜேஸ்வரி திருக்கோயில், ஆலப்புழை, ஆலப்புழா
அருள்மிகு சரஸ்வதி திருக்கோயில், வடக்கன்பரவூர், எர்ணாகுளம்
அருள்மிகு நல்ல மாரியம்மன் திருக்கோயில், தொழுதூர், திருவாரூர்
அருள்மிகு சரஸ்வதி திருக்கோயில், கூத்தனூர், திருவாரூர்
அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், முத்தனம் பாளையம், திருப்பூர்
அருள்மிகு பிட்டாபுரத்து அம்மன் திருக்கோயில், பிட்டாபுரம், திருநெல்வேலி
அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில், உறையூர், திருச்சி
அருள்மிகு மூங்கிலணை காமாட்சி அம்மன் திருக்கோயில், தேவதானப்பட்டி, தேனி
அருள்மிகு கவுமாரியம்மன் திருக்கோயில், கம்பம், தேனி
அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயில், நார்த்தாமலை, புதுக்கோட்டைBottom of Form