Friday 6 September 2013

தொப்பையை குறைக்க…


வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய வாழ்க்கை முறையை யாரும் கட்டாயப்படுத்தி வாழ வேண்டும் என்று சொல்வதில்லை. நாமே தான் அத்தகைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை வெளியுலகத்திற்காக தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகிறோம். 

மேலும் பலர் ஆரோக்கியமற்றது என்று தெரிந்தும் இன்றும் அதனைப் பின்பற்றுகின்றனர். இவ்வாறு தேர்ந்தெடுத்து பின்பற்றிவிட்டு, பின்னர் குத்துதே குடையுதே என்று பெரிதும் அவஸ்தைப்படுவோர் அதிகம். ஆனால் இத்தகைய தொப்பையை குறைப்பது என்பது மிகவும் எளிது தான்.


எலுமிச்சை  சாறு
தொப்பையை குறைக்க எளிய ஒரு வழியென்றால், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை விட்டு, சிறிது உப்பு சேர்த்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புக்கள் கரைத்து, நாளடைவில் தொப்பை மறைந்துவிடும்.


தண்ணீர்: தினமும் குறைந்தது 78 டம்ளர் தண்ணீர் குடித்தால், உடல் வறட்சியில்லாமல் இருப்பதோடு, உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். மேலும் அவ்வப்போது சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்தால், உடலின் மெட்டபாலிசமானது அதிகரிக்கும். இதனால் வயிற்றைச் சுற்றி காணப்படும் தொப்பையும் குறைந்துவிடும்.  க்ரீன் டீ: அனைவருக்குமே க்ரீன் டீ குடித்தால், உடல் எடை குறையும் என்பது தெரியும். மேலும் பலரும் இந்த க்ரீன் டீயின் பலனைப் பெற்றுள்ளனர். எனவே தினமும் ஒரு டம்ளர் க்ரீன் டீ குடித்து வாருங்கள். 

பூண்டு: எலுமிச்சை சாற்றினை விட இரண்டு மடங்கு அதிகமான சக்தியானது பூண்டில் உள்ளது. எனவே காலையில் 1 பல் பூண்டு சாப்பிட்டால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, உடலில் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும். 


தேன்: வயிற்றைச் சுற்றி தொப்பையை ஏற்படுவதற்கு, சர்க்கரையும் ஒரு காரணம். எனவே உண்ணும் உணவுப் பொருளில் சர்க்கரைக்கு பதிலாக தேனை சேர்த்துக் கொண்டால், தொப்பையை குறைவதோடு, உடல் எடையும் குறையும். 

No comments:

Post a Comment