Sunday 22 September 2013

திருப்பதி - ஸ்ரீநிவாசனா ? முருகனா?


குன்று இருக்குமிடமெல்லாம் குமரனிருக்கும் இடம்.
"
தமிழகத்தின் வடஎல்லையாக இருந்த திருவெங்கடமும் குமரனின் குன்றே. அது முருகன் ஆலயமே". என்று படிக்க நேர்ந்தது.

வாதங்களை பார்ப்போம்.

1.
குன்று இருக்கும் இடமெல்லாம் குறிஞ்சிக் கடவுள் முருகனே இருக்கிறான். தமிழக பரப்பில் இருந்த திருப்பதி கோவில் தமிழ் மன்னன் ஒரவனால் கட்டப்பட்ட முருகன் கோவிலே. கோவில் கட்டியது குறித்த வரலாறு தெளிவாக இல்லை.

2.
திரு + வேல் + இடம் = திருவேங்கடம்.

3.
வேல் + உடைய + ஈஸ்வரன் = வெங்கடேஸ்வரன்.
வைணவ இறைவனின் பெயரில் ஈஸ்வரன் என்ற சைவப் பெயர் எப்படி வந்து ஒட்டியிருக்க முடியும்.

4.
கோவிலின் அமைப்பு ஆகம முறைப்படி சைவ கோவிலாகவே அமைந்திருக்கிறது. கோவில் மதில்களில் வைணவக்கோவில்களில் இருப்பது போல் கருடாழ்வார் இல்லை.

5.
மூலவர் என்றும் அலங்கரித்த நிலையிலேயே பார்வைக்கு வைக்கப்படுகிறார்.
நெற்றியில் நாமம் சார்த்தி கவசங்களாலும் ஆடை அணிகளாலும் மறைக்கப்பட்டு "பாலாஜி" ஆக்கப்பட்ட இறைவன் பதினாறுப் பிராயம் கொண்ட பாலானான முருகனே.

6.
மூலவரின் இடது கை மேல் நோக்கிய வாகில் வேல் பிடிப்பதற்கு ஏதுவானதாக உள்ளது. (பார்க்க படம்). முருகனின் கை வேல் பறிக்கப்பட்டு கவசம் அணியப்பெற்று மாலவனாக மாற்றப்பட்டுள்ளது.

நான்கு கரமுடைய விஷ்ணு இரண்டு கரங்களோடு இருப்பதாக காட்டப்படுவதால். சங்கும் சக்கரமும் பிடிப்பதற்கு இரண்டு கரங்கள் இல்லாததால் தோளில் நிறுத்தப்பட்டுள்ளது.
7. கவசங்களோ, நாமமோ இல்லாத சிலையை அபிஷேகம் செய்வது திரையிட்டே செய்யப்படுவதால் உண்மையான மூலவர் வடிவத்தை யாரும் பாராதது.
அலங்கரிக்கப்பட்ட இறைவனையே நாம் பார்க்கிறோம். அதுவும் ஒரு நிமிடத்திற்குள் "ஜருகண்டி" செய்யப்படுகிறொம்.

8.
கோவில் மதில்களில் உள்ள தமிழ் எழுத்துக்கள். இவை வட்டெழுத்துக்களாக உள்ளன. பெரும்பாலான இடங்களில் சுண்ணம் பூசப்பட்டு மறைந்தே உள்ளன. இவற்றை ஆராய்ந்து அறிய நேர்ந்தால் கோவிலின் வரலாறு கிடைக்கலாம்.

9.
பாலாஜி என்ற பெயரில் அலர்மேலு, பத்மாவதி என்ற இரண்டு மனைவிகளோடு இருப்பதாக உள்ள இறைவன் உண்மையில் வள்ளி, தெய்வானையோடு உள்ள முருகனே. (பார்க்க படம்)





10. துவாபரயுகத்தோடு ஒன்பதாவது அவதாரமான "கண்ணன்" அவதாரம் முடிந்து விட்ட நிலையில், கலியுகத்தில் கல்கி அவதாரம் மட்டுமே பாக்கியுள்ள நிலையில் இறைவன் "சீனுவாசனாக" பூமியில் இறங்கி வந்தது என்ன அவதாரம்.
இந்த அவதாரம் ஏன் கணக்கில் வரவில்லை.

11.
தல வரலாற்றுப் புத்தகம் இராமாயணத்தையே மாறுபட்ட வடிவில் சொல்கிறது. சீதைக்கு பதிலாக பூமாதேவி (சத்யவதி என்ற பெயரில்) தானே இராவணனிடத்தில் இருந்ததாகவும் அவளே தீயில் இறங்கியதாகவும் சீதை பத்திரமாக இருந்ததாகவும்.
தீயில் இறங்கிய பின் இரண்டு சீதைகள் இருக்க.. பூமாதேவியாகிய சீதையை இராமன் தான் ஏக பத்தினி விரதன் என்பதால் மணக்க முடியாது என்று சொல்லி விட. அவளே பத்மாவதியாய் ஆகாச ராஜனுக்கு தோன்ற "சீனுவாசனாக" வந்து அவரை இறைவன் மணந்தார். லட்சுமியே தன் கணவனுக்கு பத்மாவதியை மணம் செய்வித்தார் என்பதாக போகிறது கதை. தல வரலாறு இதிகாச புராணங்களில் இருந்து பெருமளவில் திரிந்திரக்கிறது. இது கடவுளை மாற்றிய பிறகு இட்டுக் கட்டப் பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தை கிளப்புவது.

(
படிக்க தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழியிலும் கிடைக்கும் திருப்பதி தல வரலாறு).

12.
திருமுருக கிருபானந்த வாரியாரும் தமது கந்த புராண சொற்பொழிவுகளில் திருப்பதி குமரன் கோயிலாக இருக்கக் கூடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

        முருகன்தான் "சீனுவாசனாக" அவதாரம் எடுக்க வைக்கப்பட்டான் என்று தோன்றுகிறது. திருப்பதி ரகசியத்தை அந்த கால ஆழ்வார்கள் முதல் அன்னமாச்சார்யாக்கள வரை கட்டி காப்பாற்றி வருகிறார்கள்.

No comments:

Post a Comment