Wednesday 25 September 2013

விசுவல் கம்யூனிகேஷன் துறையில் வேலை வாய்ப்பு தரும் படிப்புகள்...


      பிரிண்ட் மீடியா(செய்தித்தாள், பத்திரிக்கை), விசுவல் மீடியா(டி.வி) ஊடகத்துறை உள்ளிட்ட இந்தத்துறை மிகவும் இன்றியமையாத துறையாகும். சமூக அவலங்களையும் அரசு அதிகாரிகளின் நேர்மையின்மையையும் மக்கள் மன்றத்தில் எடுத்துரைக்கும் மிகச் சிறந்த வேலையை இந்தத் துறையில் மட்டுமே செய்ய முடியும். மக்களின் வாழ்க்கைத்தரம் உயர, எடுக்கப்படும் பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களின் வாழ்க்கையை உயர்த்த முடியும். ஆசிரியத் தொழிலும் பத்திரி்க்கைத் தொழிலும் மட்டுமே சமூகத்தில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும் சிறந்த பணியாகும்

மனிதன் நாகரீகம் அடைய தொடங்கிய காலத்திலிருந்தே, படம் மற்றும் உருவங்களை வைத்து, தகவல் பரிமாற்றம் செய்வதென்பது, ஒரு பழமையான செயலாகவே இருந்துள்ளது. அந்த செயல்பாட்டின் பரிணாமம்தான் விசுவல் கம்யூனிகேஷன் என்ற படிப்பாக இன்று உள்ளது. ஆர்ட்ஸ், குறியீடுகள், போட்டோகிராபி, டைப்போகிராபி, வரைதல் அடிப்படைகள், வண்ணம் மற்றும் எலக்ட்ரானிக் மூலங்கள் போன்றவை முக்கியமானவை.

இந்த விசுவல் கம்யூனிகேஷன் துறையில் ஏற்பட்டிருக்கும் சமீபத்திய ஆய்வானது, வெப் டிசைன் மற்றும் Graphically-oriented usability ஆகியவை தொடர்பானது. Designers மற்றும் Creative professionals குறைவான இருக்கும் ஒரு நாட்டில், அத்தகைய மனிதவளத்தைப் பெருக்க, விசுவல் கம்யூனிகேஷன் பட்டப்படிப்பு ஒரு முக்கியமான அம்சம்.
சேர்க்கை மற்றும் தன்மை
ஒருவர் தனது பள்ளிப் படிப்பை எந்தப் பிரிவில் முடித்திருந்தாலும், தனது இளநிலைப் பட்டப் படிப்பில் இந்த விசுவல் கம்யூனிகேஷன் பிரிவை தேர்வு செய்யலாம். பல கல்லூரிகள் இந்தப் படிப்பில் மாணவர்களை சேர்க்க, தங்களுக்கென சொந்த நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு செயல்முறைகளைக் கொண்டுள்ளன. இந்தப் படிப்பானது, மனித தகவல்தொடர்பு, மேம்பாட்டு தகவல்தொடர்பு, மீடியா கலாச்சாரம் மற்றும் சமூகத்தைப் பற்றிய தியரி புரிந்துணர்வையும், விளம்பரம், போட்டோகிராபி, டெலிவிஷன் ப்ரொடக்ஷன், பிலிம் மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் ஆகியவைப் பற்றி அடிப்படை பிராக்டிகல் அறிவையும் வழங்குகின்றன.
சென்னையிலுள்ள லயோலா கல்லூரியானது, கடந்த 1989ம் ஆண்டே இந்தப் படிப்பைத் துவங்கிவிட்டது. அந்த காலகட்டங்களில்தான் இந்தியாவிலுள்ள கல்வி நிறுவனங்கள் அந்தப் படிப்பைத் துவங்கின. தற்போதைய நிலையில், சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் சுமார் 30 கல்லூரிகள் இந்த விஸ்காம்(VISCOM) படிப்பை வழங்குகின்றன.



வேலை வாய்ப்பு
மீடியா மற்றும் விளம்பரத் தொழில்துறையில், Art directors, Copy writers மற்றும் Account executives ஆகிய பணி வாய்ப்புகளையும், தொலைக்காட்சித் துறையில், Programme executive, Camera man மற்றும் Editor பணி வாய்ப்புகளையும், சினிமாத் துறையில் இயக்குநர்களாகவும், நடிகர்களாகவும், ஆர்ட் டைரக்டர்களாகவும், ஐடி துறையில் Web designer, Computer graphics artists, Animation personnel மற்றும் Interface designers ஆகிய பணி வாய்ப்புகளையும், போட்டோகிராபி துறையில், Photo journalists, Advertising photographers, Fashion photographer, Industrial photographer மற்றும் Wildlife photographer ஆகிய பணி வாய்ப்புகளையும், மாணவர்களுக்கு இந்தப் படிப்பு வழங்குகிறது.

இத்துறையில் இளநிலைப் பட்டப்படிப்பை முடித்த மாணவர்கள், தங்களுக்குப் பிடித்தமான பிரிவில் specialise செய்யலாம். (உதாரணம்: ஒருவருக்கு எழுத்தில் ஆர்வமிருந்தால், பத்திரிக்கை துறையில் செல்லலாம்.) இதுபோன்று ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. எனவே, பரந்தளவிலான வாய்ப்புகளைக் கொண்ட விஸ்காம் படிப்பை மேற்கொள்ள மாணவர்கள் தயங்க வேண்டாம்.


No comments:

Post a Comment