Saturday 5 October 2013

பூனைக்குட்டிகளை ஈன்றதா தெருநாய்?


     சென்னை அருகே பூந்தமல்லியில்  தெரு நாய் ஒன்று, நான்கு பூனைக்குட்டிகளை ஈன்றதாக பரவிய தகவலால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    பூந்தமல்லியை அடுத்த குமணன்சாவடியில், தெரு நாய் ஒன்று, நேற்று முன்தினம் இரவு, எட்டு குட்டிகளை ஈன்றது.அவற்றில், நான்கு, நாய் குட்டிகளாகவும், நான்கு, பூனைக்குட்டிகளாகவும் இருந்தன. எட்டு குட்டி களின் வாலும் ஒரே மாதிரியாக இருந்தது.நேற்று காலை இந்த தகவல்சுற்றுப்புறப் பகுதி முழுவதும் காட்டுத் தீ போல் பரவியது. இதையடுத்து, பொதுமக்கள் கூட்டம்கூட்டமாக வந்து, பூனைக் குட்டிகளை பார்த்து சென்றனர்.இதுகுறித்து, பகுதிவாசிகளிடம் விசாரித்தபோது, குட்டி ஈன்ற நாயை, வியாசர்பாடியை சேர்ந்த கணேசன், 40, என்பவர், வளர்த்து வருவதும், அவர், பிளாட்பாரத்தில் தங்கி, பேப்பர் சேகரித்து வருவதும் தெரியவந்தது.மேலும், அந்த நாய்க்கு ரோசம்மாள் என பெயர் சூட்டிய கணேசன், தினசரி பிஸ்கெட் வாங்கி போட்டு வந்ததும் தெரியவந்தது.

   கணேசனிடம் விசாரித்தபோது,''ரோசம்மாள் நேற்று முன்தினம் இரவு குட்டிகளை ஈன்றது. அதனால், ஒரு அட்டை பெட்டியை எடுத்து, நாயை சுற்றி மறைத்து வைத்துவிட்டு, நான் துாங்கிவிட்டேன். நேற்று காலை எழுந்து பார்த்தபோது, எட்டு குட்டிகள் இருந்தன. அவற்றை நன்றாக உற்று பார்த்தபோது, நான்கு குட்டிகள் பூனைக்குட்டிகள் போல் காணப்பட்டன. பின், அருகே சென்று பார்த்தபோது, பூனைக்குட்டிகள் தான் என்பது தெரியவந்தது,'' எனறார்.

    ஒரு நாய், நான்கு பூனைக்குட்டிகளை ஈன்ற தகவல் அந்தபகுதியில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.பூனைக்குட்டிகளை நாய் தான் ஈன்றதா அல்லது யாராவது பூனைக்குட்டிகளை துாக்கி வந்து, நாய் குட்டிகளுடன் ஒன்றாக போட்டு விட்டார்களா என்று பொதுமக்கள் மத்தியில் பெரும் சந்தேகம் எழுந்துஉள்ளது.

No comments:

Post a Comment