Saturday 19 October 2013

பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி???

     

   தீபாவளி கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக பட்டாசு வெடிக்கும் போது, காயமடையாமல் பாதுகாப்பாக இருப்பதற்கு, என்னென்ன செய்ய வேண்டும்? என்னென்ன செய்யக் கூடாது? என்பதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளன.
தரமான பட்டாசுகளை பெரியவரின் கண்காணிப்போடு பயன்படுத்த வேண்டும்.


* பட்டாசு கொளுத்துவதற்கு நீளமான வத்திக்குச்சியை பயன்படுத்த வேண்டும். பருத்தி ஆடைகளை அணிந்திருக்க வேண்டும்.

* திறந்த வெளிகளில் பட்டாசு கொளுத்த வேண்டும்.

* அருகில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை வைத்துக் கொண்டு ஒவ்வொரு பட்டாசாக வெடிக்க வேண்டும்.

* வெடிக்காத உதிரி பட்டாசுகளை கையில் எடுக்கக் கூடாது. வெடிகளை கையில் வைத்து வெடிக்கக் கூடாது.

* நாட்டு வெடிகளை பயன்படுத்தக் கூடாது. குழந்தைகள் தனியாக பட்டாசுகளை கொளுத்தக் கூடாது.

* குடிசைப் பகுதி, மொட்டை மாடிகளில் வெடிகளை வெடிக்க வேண்டாம். எளிதாக தீ பற்றும் பொருட்கள் இருக்கும் இடங்களில் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்.

* வெடிக்காத பட்டாசுகளையும், வெடிகளையும் ஒன்றாக சேர்த்து வெடிக்க வேண்டாம். பட்டாசுகளை கொளுத்தி மற்றவர்கள் மீதோ, தெருவிலோ வீசி விளையாடுவதை தவிர்க்க வேண்டும்.

* பட்டாசு வெடிக்கும்போது ஏற்படும் காயங்களை தண்ணீரில் கழுவி, பின்னர் சுத்தமான துணியால் காயத்தை மூட வேண்டும். கையில் அடிபட்டால் அந்த கையை உயர்த்தி வைக்க வேண்டும்.

* காயத்தின் மீது மை, மஞ்சள் அல்லது வீட்டில் உள்ள சமையல் பொருட்களை பயன்படுத்த கூடாது.

* காயம்பட்ட பின்பு குறிப்பிட்ட நேரத்துக்கு எதுவும் சாப்பிடக் கூடாது.   அருகில் உள்ள மரு‌த்துவமனைக்கு சென்று உடனே சிகிச்சை பெற வேண்டும்.



கையில் அடிபட்டால் அவசர ஆலோசனைக்கு 105901 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

அதிக மருந்து கொண்ட பட்டாசு வெடிக்க, பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது

இரவு, 10:00 முதல் காலை, 6:00 மணி வரை, பட்டாசு வெடிக்கக் கூடாது. 

No comments:

Post a Comment