Wednesday 26 February 2014

'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்'

கோயிலுக்குச் செல்கிறபோது  இறைவனின் அருளை வேண்டுகிறோம். அங்குள்ள சிற்பங்களின் அழகில் மயங்குகிறோம். ஆனால் ஆலய அமைப்பு முறையில் ஓர் அற்புதமான தத்துவம் இருப்பதை எல்லோரும் அறிவதில்லை.


ஆலயம் என்பதில் ஆ என்பது பசுவையும், லயம் என்பது லயிப்பதையும் குறிக்கும். பசு என்பது ஆன்மா, ஆன்மா தன் மும்மலங்களை நீக்கி இறைவனிடம் ஒடுங்குவதற்கு உரிய இடமாக அமைவது ஆலயம்.

'
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்று ஒளவையார் கூறினார். மனிதன் தன் எண்ணங்களை ஒருமுகப்படுத்தவும் ஆலயங்கள் மனிதனின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றாகக் கலந்துவிட்ட ஒன்று.

'
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' என்பர்.  கோவிலுக்குள் வர இயலாதவர்களும் கோபுரத்தையே தெய்வமாக எண்ணி வழிபடவே வானளாவிய கோபுரங்கள் கட்டப்பட்டன. கோபுரம் ஸ்தூல லிங்கமாகக் கருதப்படுகிறது. 

திருமூலர் திருமந்திரத்தில் நமது உடம்பினையே ஆலயமாக கருதி, 'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்' எனப் பாடியுள்ளார்.

                 
கர்ப்பகிரகம்    - தலை

                 
அர்த்தமண்டபம்  - முகம்

                 
அந்தரான மண்டபம் - கழுத்து

                 
மகா மண்டபம்  - மார்பு

                 
மணிமண்டபம்  - வயிறு

                 
உள்சுற்று   - தோள்கள்

                 
வெளிச்சுற்று   - கைகள்

                 
மூர்த்தம்   - ஆன்மா

                 
கருவறைத் தூண்கள் - கண்கள்

                 
சுவர்க் கற்கள்  - எலும்புகள்

                 
தூண்கள்   - நரம்புகள்
           

இத்தகைய சிறப்பினை உடைய கோயில்களை நம் முன்னோர்கள் நமக்குக் கலைப் பொக்கிஷமாக அளித்து உள்ளனர். ஒவ்வொரு கோயிலும் மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் என்ற வகையில் சிறப்புற்று விளங்குகிறது.

4 comments:

  1. பயனுள்ள தகவல்கள். தொடரட்டும் உங்கள் பணி....

    ReplyDelete
  2. விளக்கம் நன்று... நன்றி...

    ReplyDelete
  3. நன்றி --> கருத்துரை பெட்டி மாற்றியதற்கு...

    சிரமம் பாராமல் இதையும் :-

    சின்ன வேண்டுகோள் : Comment Approval (Comment Moderation) வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த Word verification-யை எடுத்து விடுங்கள்... வயதானவர்கள் கருத்திட சிரமப்படுவார்கள்... பல பேர் விரும்புவதும் இல்லை... வாசகர்கள் வருவதும் குறைந்து விடும்... (Word verification image-இரண்டு அல்லது மூன்று முறை முயற்சித்து பிறகு தான் கருத்துரை Publish செய்ய முடிந்தது...)

    (Settings--->Posts and Comments--->Show Word Verification---> select 'No')

    ReplyDelete
    Replies
    1. ஆலோசனைக்கு நன்றி... மேலும் பிளாக்கை மேம்படுத்த ஆலோசனை வழங்குங்கள் நன்றி...

      Delete