Friday 24 January 2014

செல்போன் மூலம் ரயில் நேரம், இடம், இருக்கை பற்றிய அறியலாம் !

உங்கள் செல்போன் மூலம் இந்தியாவில் எந்த பகுதியில் இருந்தும் ரயில் வரும் நேரம் , இடம், இருக்கை வசதி ஆகியவற்றை அறிய கொள்ள ரயில்வே நிர்வாகம் எளிய முறையில் வசதியை அளித்துள்ளது.
பேருந்து பயணங்களை விட ரயில் பயணம் என்பது எளிதானது. நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து இன்டர்நெட் வழியே எங்கே ரயில் வருகிறது ? அடுத்து என்ன ஸ்டேஷன் வரும் ? எவ்வளவு நேரம் தாமதம் போன்ற விவரங்கள் கிடைத்துவிடும்.
உங்கள் செல் போன் மூலம் , இந்தியாவில், ரயில் வரும் நேரம் , இடம், இருக்கை வசதி ஆகியவற்றை அறிய கொள்ள ரயில்வே நிர்வாகம் எளிய முறையில் வசதியை அளித்துள்ளது.
1. ரயில் வரும் நேரம், இடம் , புறப்படும் நேரம், ஆகியவற்றை அறிந்து கொள்ள : -
ரயில் வரும் நேரம், தற்போது ரயில் வந்து கொண்டு இருக்கும் இடம், புறப்படும் நேரம் , சென்றடையும் நேரத்தை அறிய உங்களது செல் போனில் spot என டைப் செய்து, சிறிது இடைவெளி விட்டு வண்டி எண் XXXXX செய்து 139 -க்கு அனுப்பினால், உடனே அறிந்து கொள்ளலாம். மேலும், தாமதமாக வரும் ரயில் குறித்த விவரங்களையும் கூட அறியலாம்.
2. முன் பதிவு நிலையை அறிந்து கொள்ள :- 
உங்களது செல் போனில் PNR என டைப் செய்து 10 இலக்க PNR எண்ணை குறிப்பிட்டு, 139 -க்கு அனுப்பினால், முன் பதிவு குறித்த அனைத்து தகவல்களும் கிடைக்கும்.
3. இட வசதி நிலையை அறிந்து கொள்ள :- 
உங்களது செல் போனில் SEAT , வண்டி எண், பயண தேதி, புறப்படும் இடம், STD கோட் எண், ரயில் பயணம் செல்லும் வகுப்பு, கோட்டா , ஆகியவற்றை டைப் செய்து 139 -க்கு அனுப்பினால் இருக்கை குறித்த விவரங்கள் கிடைக்கும்.
4. பயண கட்டணம் குறித்த விவரம் அறிந்து கொள்ள :- 
உங்களது செல் போனில் FARE என டைப் செய்து, ரயில் புறப்படும் இடம்தேதி, சேரும் இடம், வகுப்பு ஆகியவற்றை குறிப்பிட்டால் கட்டண விவரம் உடனே கிடைத்துவிடும்.

No comments:

Post a Comment