Google+ Badge

Friday, 15 November 2013

பேய்


பேய்களை (ஆவி) பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்
.
1] பேய்கள் உறங்குவதில்லை.. தங்கள் சாவுக்கான நீதி கிடைக்கும்வரை அலைந்தபடி இருக்கும்.
.
2] பேய்கள் அல்லது ஆவிகள் தங்களை வெளிக்காட்டிக்க கொள்ளவே விரும்பும்..எனவே தான் அறைகளில் நறுமணம் அல்ல்து வெளிர் நிற
புகைகளை பனிமூட்டங்களை பரப்புகின்றன.
.
3] பூனைகளால் தெளிவாக பேய்கள் அல்லது ஆவிகளை காணமுடியும்.. உங்கள் வீட்டு பூனை வானத்தையே அசையாமல் பார்த்துக்கொண்டு இருந்தால் ஏதோ ஒரு ஆவியை காண்கிறது என்று அர்த்தம்.
.
4] பேய்கள் அல்லது ஆவிகள் கூடுமானவரை ஆபத்தானவை அல்ல..
தங்களை வெளிக்காட்டிக்க கொள்ளவே முயற்சி செய்யும்.


5] விபத்து அல்லது கொலைகளினால் உண்டான பேய்கள் அல்லது ஆவிகளின் தோற்றம் மட்டும் தான் பயங்கரமானதாக இருக்கும்.
.
6] பூமியை விட்டு உறவுகளை விட்டு செல்ல விரும்பாதவ்ரகள் தான்
கூடுமானவரை பேய்கள் அல்லது ஆவிகளாக சுற்றுவார்கள்.
.
7] பேய்கள் அல்லது ஆவிகள் குளிர்மையானவை. அதனால் தான்
அவைகளை நீங்கள் சந்திக்கின்ற பொழுது மிக குளிர்மையை உணர்வீர்கள்.
.
8] பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உங்கள் எதிர்காலம் நன்றாகவே தெரியும்.. சில நேரங்களில் அவை கனவுகளின் மூலம் வெளிப்ப்படுத்த முயற்சி செய்யும்.
.
9] நல்ல பேய்கள் அல்லது ஆவிகள் பயங்கரமான தோற்றம் அற்றவை. கெட்ட பேய்கள் அல்லது ஆவிகள் தோற்றம் மிக கொடூரமானதாக இருக்கும்.
.
10] பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோன உடல்களை சுற்றியோ அல்லது சுடுகாட்டிலோ இருக்காது..எப்பவுமே கோவில்கள்/
சர்ச்சுகளை வழிபாடு தலங்களை அண்டியே சுற்றியபடி இருக்கும்.
.
11] பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உணர்ச்சிகள் (feelings)உண்டு..ஆனால் உணர (sense) முடியாது.
.
12] பேய்கள் அல்லது ஆவிகள் தனக்கு நெருக்கமானவர்களுக்கு அல்லது தன் சாவுக்கு காரணமானவர்களுக்கு மட்டுமே தன்னை வெளிக்காட்டிக்கொள்ள முயற்சிக்கும்.
.
13] பேய்கள் அல்லது ஆவிகளால் [கெட்ட] கொலைசெய்ய முடியாது.. ஆனால் ஒருவன் தன்னை தானே கொலைசெய்யும் அளவுக்கு தூண்டிவிடும் சக்தி உண்டு.
.
14] பேய்கள் அல்லது ஆவிகளால் தரையை கால்களால் தொட முடியும்.
கைகளாலோ அல்லது உடலின் வேறு பகுதிகளாலோ அல்ல..எனவே தான் உங்களால் அவைகளின் காலடி ஓசையை கேட்க முடியும்.
.
15] பேய்கள் அல்லது ஆவிகளால் ஒரு மனித உடலில் புகுந்து மற்றொருவருடன் தகவல் தொடர்பு கொள்ள முடியும். 


.
16] பேய்கள் அல்லது ஆவிகளால் 12 நாட்கள் மட்டுமே [இறந்த நாள்முதல்] அவர்கள் வீட்டில் அருகில் இருக்க முடியும்.
.
17] பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோனவரின் உடலை அடக்கம் செய்யும் வரை அவர்களை பற்றி யார் பேசிக்கொண்டு இருந்தாலும் அருகில் நின்று கேட்கும் குணம் உண்டு.


.
18] பேய்கள் அல்லது ஆவிகளை சாதாரணமாக் காணக்கூடியவர்களின் இரத்த பிரிவு (Blood Group) 'O' + or - ஆக இருக்கும்.. மற்றவகை இரத்த
பிரிவு உள்ளவர்களின் கண்களுக்கு தெரிவது அபூர்வம்.