Wednesday 21 January 2015

தை மாதத்தின் சிறப்புகள்.....

 தை மாதம் 1ம் தேதி வியாழன் கிழமை உத்தராயண புண்ணிய காலம். இன்று பொங்கல் பண்டிகை. பொங்கல் வைக்க உகந்த நேரம் காலை 10-00 மணி முதல் 11-00 மணி வரை. இன்று கரிநாள் சுபகாரியங்களை தவிர்க்கவும்.

தை மாதம் 2ம் தேதி வெள்ளி கிழமை திருவள்ளுவர் தினம். மாட்டுப் பொங்கல் கோபூஜை செய்ய உகந்த நேரம் காலை 06-00 மணி முதல் 07-00 மணி வரை. இன்று கரிநாள் சுபகாரியங்களை தவிர்க்கவும். இன்று ஏகாதசி எனவே பெருமாளை வழிபடுவது வாழ்க்கையில் வளத்தைத் தரும்.

தை மாதம் 3ம் தேதி சனி கிழமை. காணும் பொங்கல். இன்று கரிநாள் சுபகாரியங்களை தவிர்க்கவும்.

தை மாதம் 4ம் தேதி ஞாயிறு கிழமை. இன்று பிரதோஷம். இன்று பிரதோஷ காலத்தில் நந்தி பகவானையும் சிவ பெருமானையும் வழிபடுவது வாழ்க்கையில் சிறப்பைத் தரும். இன்று ஞாயிறு பிரதோஷம் மிருத்யுஞ்சய பிரதோஷம், இப்பிரதோஷ வழிபாடு மரண பயத்தை நீக்கும்

தை மாதம் 7ம் தேதி புதன் கிழமை மாக ஸ்நானம் ஆரம்பம். இன்று முதல் முப்பது நாட்கள் புனித நதிகளில் நீராடி தோஷ பரிகாரங்கள் செய்தால் சகல தோஷங்களும் நீங்கும்.

தை மாதம் 10ம் தேதி சனி கிழமை வசந்த பஞ்சமி. இன்று லட்சுமி பூஜை செய்தால் வாழ்க்கையில் வசந்தம் என்னும் சந்தோஷம் நிலைத்து நிற்கும்.

தை மாதம் 12ம் தேதி  திங்கள் கிழமை ரத சப்தமி. இன்று பெருமாள் கோயில்களில் சூரிய பிரபையுடன் கூடிய ரதத்தில் திருமால் வலம் வருவார். ரதத்தில் வீற்றிருக்கும் திருமாலை தரிசித்தால் நம் முன்னோர்கள் மகிழ்ச்சியடைவார்கள். நம் வாழ்க்கை வளம் பெறும். தை

மாதம் 12ம் தேதி திங்கள் கிழமைஇன்று வைவஸ்வத மன்வாதி. இன்று இறந்த முன்னோர்களுக்கு தில ஹோமம், பித்ரு பூஜை, தர்ப்பணம் செய்ய உகந்தது. 

தை மாதம் 12ம் தேதி திங்கள் கிழமை. இன்று ரத சப்தமி, விசோக சப்தமி. இன்று சூரிய அவதாரம் நிகழ்ந்த நாளாகும். இன்று சூரியன் சூரிய நாராயணனாக காட்சி அளிக்கிறார். இன்று பெருமாள் கோயில்களில் ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட சூரிய பிரபையில் பெருமாள் திருவீதி வருவார். சூரிய பிரபையில் பெருமாளை வழிபடுபவர்களுக்கு பித்ரு தோஷம் நீங்கும். இன்று சூரிய பூஜை செய்தால் சகல கஷ்டங்களும் விலகும்.

தை மாதம் 13ம் தேதி செவ்வாய் கிழமை. இன்று பீஷ்மாஷ்டமி. மகாபாரத காலத்தில் பீஷ்மர் கிருஷ்ணருக்கு பூஜை செய்த நாள். இன்று கிருஷ்ணருக்கு பூஜை செய்தால் ஞானமும, பலமும் பெறலாம்.

தை மாதம் 16ம் தேதி  வெள்ளி கிழமை. இன்று பீஷ்ம ஏகாதசி, ஜெயாஏகாதசி. இன்று பீஷ்மர் ஏகாதசி விரதம் இருந்து முக்தியடைந்த நாள். இன்று விரதம் இருந்து பெருமாளை வழிபடுபவர்களுக்கு முக்தி கிடைக்கும்.

தை மாதம் 17ம் தேதி சனி கிழமை. பீஷ்ம துவாதசி, பீம துவாதசி விரதம். இன்று பீமர் விரதம் இருந்து துவாதசி படையல் வைத்து அன்னதானம் செய்தார், இதனால் உடல் பலமும் வைகுண்ட பிராப்தியும் அடைந்தார்.

தை மாதம் 18ம் தேதி  ஞாயிறு கிழமை. உத்தம, வராஹ கல்பாதி. இன்று கல்பாதி புண்ணிய தினம். இன்று முன்னோர்களை வழிபடுவதற்க்கும், தில தர்ப்பணம், பித்ரு ஹோமம், தில ஹோமம் போன்றவை செய்வதன் மூலம் முன்னோர்கள் திருப்தியடைவார்கள். இன்று மிருத்யுஞ்ஜய பிரதோஷம் நந்தி பகவானையும் சிவ பெருமானையும் வழிபடுவது வாழ்க்கையில் வளம் சேர்க்கும்.

தை மாதம் 20ம் தேதி செவ்வாய் கிழமை ஆகாமாவை. இன்று சூரிய உதயத்தில் புனித நீராடுவது சிறப்பு. சகல தோஷங்களும் நிவர்த்தியாகும்.

தை மாதம் 20ம் தேதி செவ்வாய் கிழமை. இன்று தைபூசம். பௌர்ணமி பூஜை சத்தியநாராயண பூஜை செய்வது வாழ்க்கையில் வளம் சேர்க்கும். வடலூர் ஜோதி தரிசனம்.
தை மாதம் 24ம் தேதி (07-02-2015) சனி கிழமை. இன்று சங்கடஹர சதுர்த்தி. விநாயகரை வழிபடுவது வாழ்க்கையில் உண்டாகும் சங்கடங்களை நீக்கி வாழ்க்கையில் வளம் பெற உதவும்.

தை மாதம் 29ம் தேதி வியாழன் கிழமை. இன்று காலாஷ்டமி - தேய்பிறை அஷ்டமி. கிருஷ்ணருக்கும் காலபைரவருக்கும் உகந்த நாள். இன்று இவர்களை வழிபட சகல தடைகளும் நீங்கி செல்வச் செழிப்பு ஏற்படும். இன்று முன்னோர்களுக்கு திதி செய்ய விடுபட்டிருந்தால் இன்று செய்யலாம்.

வாஸ்து நாள்
தைமாதம் 12ம் தேதி  திங்கள் கிழமை வாஸ்து நாள் ஆகும். இன்று காலை 09-12 மணி முதல் 10-42 மணி வரை வாஸ்து பூஜை செய்வது சிறப்பு. இந்த ஒன்றரை மணி நேரத்தில் வாஸ்து பகவான் எழுந்திருந்து பல்துலக்கி, குளித்து, பூஜை செய்து, உணவு உண்டுவிட்டு, தாம்பூலம் மென்றுவிட்டு மீண்டும் சயனித்துவிடுவார். மேற்கண்ட ஐந்து செயல்களையும் பதினெட்டு நிமிடம் வீதமாக செய்வார். இவற்றில் கடைசி செயல்களான உணவு உண்பது தாம்பூலம் மெல்லுதல் ஆகிய காரியங்களை செய்யும் 36 நிமிடங்களில் வாஸ்து பூஜை செய்வது நன்மையை பயக்கும். அதாவது 10-06 மணி முதல் 10-42 மணிக்குள் வீடு கட்டக் கூடிய நிலத்தில் வாஸ்து பூஜை செய்வது சிறப்பு எவ்வித சிரமுமின்றி வீடு கட்டி முடிக்கலாம். புதிதாக வீடு கட்டுபவர்கள் மட்டுமல்லாமல் நம் இல்லத்திலும் மஞ்சள் மற்றும் உப்பு கலந்த நீரை வீடு முழுவதும் தெளித்து வாஸ்து பூஜை செய்வது வீட்டில் உள்ள வாஸ்து தோஷங்களை நீக்கி வாழ்க்கையில் வளங்களை சேர்க்கும்.

No comments:

Post a Comment