Friday 14 March 2014

543 தொகுதிகளிலும் போட்டியிடும் ஒரே வேட்பாளர்!!!


இந்தியத் தேர்தல் வரலாற்றுக்கு இது புதிது. ஒரு வேட்பாளர் மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதியிலும் போட்டியிடுவது இதுவே முதல் முறை. இவருக்கு கொடி இல்லை. சின்னம் இல்லை. ஆனால் வாக்கு உண்டு. இவருக்குக் கிடைக்கும் வாக்குகள் இந்திய அரசியல் கலாசாரத்தை மாற்றும் வல்லமை படைத்தவை, தேர்தல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் துணிவுடையவை.
ஆம் இந்த மக்களவைத் தேர்தலில் முதல் முறையாக களம் காணும் அந்த வேட்பாளர் வேறு யாருமல்ல "நோட்டா' பொத்தான் தான். யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் வாக்களிக்க வேண்டிய பொத்தான் அது. போட்டியிடும் வேட்பாளர்கள் யாரையும் பிடிக்கவில்லை என்றால் நோட்டா பொத்தனை அழுத்த வேண்டும்.
வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும்,ஆனால் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளரும் தகுதியானவர் இல்லையே என நினைப்பவர்கள், களத்தில் இருப்பவர்களில் யாரையாவது தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர்.
அந்த நிலையில் எந்த தீமை குறைந்த தீமை என வகையில் வாக்களித்து நொந்து போகின்றனர். இது போன்ற பலருக்கு நோட்டா பொத்தான் இப்போது வரப்பிரசாதமாக உள்ளது.
இந்த பொத்தானுக்கு கிடைக்கும் வாக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க ஜாதி, மத, ஊழல் அரசியலுக்கு முடிவு கட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை.
ஆனால் நோட்டா குறித்து வாக்காளர்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை. நோட்டா பொத்தான் குறித்து தேர்தல் ஆணையம் மட்டுமின்றி தன்னார்வ அமைப்புகள் பெரிய அளவில் விழிப்புணர்வு பிரசாரம் செய்தால் அது இந்திய தேர்தல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக அமையும்.
நன்றி : தினமணி


No comments:

Post a Comment