Monday, 4 April 2016
அன்பின் வாசல்: ஓம் சிவசக்தி ஆன்மிக பக்த சபை
அன்பின் வாசல்: ஓம் சிவசக்தி ஆன்மிக பக்த சபை: ஓம் சிவசக்தி ஆன்மிக பக்த சபை என்பது, “அன்பே சிவசக்தி, சிவசக்தியே பஞ்சபூதம், பஞ்சபூதமே பிரபஞ்சம்” என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட...
Monday, 21 March 2016
ஓம் சிவசக்தி ஆன்மிக பக்த சபை
ஓம்
சிவசக்தி ஆன்மிக பக்த சபை என்பது, “அன்பே சிவசக்தி, சிவசக்தியே பஞ்சபூதம், பஞ்சபூதமே
பிரபஞ்சம்” என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டும், “ஆன்மிகத்துடன் அறப்பணி” என்பதை
நோக்கமாகக் கொண்டும் செயல்பட்டு வரும் ஓர் ஆன்மிக இயக்கமாகும். சிவன் மற்றும் சக்தி,
இவர்களின் மொத்த உருவமாக உள்ள முருகன் ஆகியோரின் மகாமித்யங்களை, புகழை, தத்துவங்களை,
வழிபாட்டு நெறிகளை பின்பற்றும் அனைத்து பக்தர்களும் தங்களை இந்த அமைப்பில் இணைத்துக்
கொண்டு, ஆன்மிகத்துடன் அறச்சேவைகளை செய்து பிறப்பின் நோக்கத்தை நிறைவேற்றும் விதமாக,
வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளலாம்.
ஓம் சிவசக்தி ஆன்மிக பக்த சபை, அறக்கட்டளையாக
தமிழக அரசின் பதிவு பெற்று இயங்கி வருகிறது. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பதற்கேற்ப
ஏழைகள், ஆதரவற்றோர், ஊனமுற்றோர் உள்ளிட்ட நலிந்த நிலையில் வாழ்பவர்களின் நிலை மாறி,
ஆன்மிக, சமூக, கல்வி நிலைகளில் மேம்பட்ட வாழ்க்கை வாழ, நிழல் தரும் ஆல விருட்சமாக ஓம்
சிவசக்தி ஆன்மிக பக்த சபை துணை நிற்கும். ஆன்மிகத்துடன் கூடிய சமூக, அறச் சேவை என்கிற
உயரிய நோக்கத்துடன் எங்களின் பணியை செய்து வருகிறோம்.
முழுமுதற் கடவுள் ஆணைமுகன், ஏறுமுகம் காட்டி
வரும் ஆறுமுகனாம் ஆறுபடையப்பன், எங்கும் நீக்கமற நிறைந்து உலக உயிர்களுக்கெல்லாம் அம்மையும்
அப்பனுமாய் விளங்குகின்ற சிவன் சக்தியின் அருட் பார்வையினாலும், சூட்சுமமாய் வலம் வந்து
மனித குல மேன்மைக்கு உதவி வரும் சித்தர் பெருமக்களின் ஆசீர்வாதத்தினாலும், மனித இனத்திற்கே
உரித்தான இரக்கமும், கொடைத்தன்மையும் கொண்ட வெள்ளை உள்ளங்களுக்கு சொந்தமான ஆன்றோர்,
சான்றோர், அடியார்கள், சாமானிய மக்களின் கருணையாலும்
இத்தகைய சேவைகளை செய்து வருகிறோம். ஆன்மிகத்திலும், இந்து மதத்திலும் நம்பிக்கை கொண்ட
நல்ல உள்ளங்கள், இந்த இறைப் பணியில் எங்களுடன் இணைந்து செயல்பட அன்புடன் அழைக்கின்றோம்.
ஓம் சிவசக்தி ஆன்மிக பக்த சபையில் உறுப்பினராக ஆன்மிக சேவையில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள்
தங்களைப் பற்றிய விபரங்களை தெரிவிக்கலாம். ஓம் சிவசக்தி ஆன்மிக பக்த சபையின் நோக்கங்கள்
செயல்பாடுகள் பற்றி கீழே கொடுத்துள்ளோம். உதவி செய்ய விருப்பமுள்ளவர்கள் அறக்கட்டளை
மூலம் உதவலாம்.
சிவசக்தி துணையிருக்க எல்லாம் சாத்தியமாகும்
என்ற நம்பிக்கையுடன் ஆன்மிக சேவைப் பணியில்…..
எம்.
சுசிலா
தலைவர்,
ஓம் சிவசக்தி ஆன்மிக பக்த சபை.
எம்.
ஐயப்பன்,
பொதுச்செயலாளர்,
ஓம் சிவசக்தி ஆன்மிக பக்த சபை.
மற்றும்
நிர்வாகிகள், உறுப்பினர்கள்.
ஓம் சிவசக்தியே
நமஹ…
ஓம் சிவ
சிவ ஓம்
தொடர்பு கொள்ள: 9677211371, 8190932481 – WhatsApp.
Email : omsivasakthispritualbakthasaba@gmail.comSunday, 20 March 2016
Monday, 11 January 2016
Monday, 21 September 2015
மொட்டைப் பிள்ளையார்!!!
![]() |
| மூலவர் செல்வ விநாயகர் |
![]() |
| மொட்டைப் பிள்ளையார் |
நமது பாரத நாட்டில் பண்பாடு,
கலாச்சாரம், சமூக அமைப்பு, மக்கள் வாழ்க்கை முறை போன்றவற்றை வெளிப்படுத்தும் விதமாக
அமையப் பெற்றவை இந்துக் கோவில்கள். பெரும்பாலான கோவில்கள் கலாச்சார அடையாளங்களாகவும்,
பண்பாட்டு புகலிடமாகவும் விளங்குபவை. அப்படிப்பட்ட கோவில்கள் பல அந்நியர்களான மொகலாயர்கள்,
ஆங்கிலேயர்களின் படையெடுப்பின் போது சேதப்படுத்தப்பட்டும், அழிக்கப்பட்டும் உள்ளன.
இதன் மூலம் நமது தொன்மையும், வரலாறும் அழிக்கப்பட்டுள்ளன. இதையெல்லாம் மீறி பல கோவில்கள்
இன்னமும் உயிர்ப்புடன் நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும், தொன்மையையும், வரலாற்றையும்,
மக்களின் வாழ்க்கையையும், இறையுணர்வையும் உலகத்திற்கு பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.
![]() |
| மொட்டைப் பிள்ளையாருடன் செல்வ விநாயகர் |
![]() |
| மொட்டைப் பிள்ளையார் கோவில் |
![]() |
| நாகர் |
அந்த வகையில் அந்நியர்களின்
படையெடுப்பின் போது தாக்குதலுக்கு ஆளாகி, சேதமுற்ற விநாயகர் கோவில் சென்னை அனகாபுத்தூரில்
இன்றும் உள்ளது. மொட்டைப் பிள்ளையார் அல்லது செல்வ விநாயகர் கோவில் என்று தற்போது அழைக்கப்பட்டு
வருகிறது. அனகாபுத்தூர், கன்னியம்மன் கோவில் தெரு, தண்டுக்கரை பகுதியில் இராமலிங்க
சுவாமி மடத்தின் அருகே(இந்த மடத்தில் உள்ள குகையில் வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் தவம்
செய்ததாகக் கூறப்படுகிறது.) மொட்டைப் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. அங்குள்ள சிறு
குன்றின் மீது பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்டிருந்த கோவிலில் விநாயகர் அருள்பாலித்து
வந்தார்.
![]() |
| மூஞ்சூறுவுடன் மொட்டை பிள்ளையார் |
ஆங்கிலேய படையெடுப்பின் போது இந்தக்
கோவில் தகர்க்கப்பட்டதாகவும், அப்போது மூலவராக இருந்த விநாயகர் சிலை தலையின் ஒரு பகுதி
உடைக்கப்பட்டதாகவும், அப்போதிருந்து இந்த விநாயகர் மொட்டைப் பிள்ளையார் என்று அழைக்கப்படுவதாகவும்,
இந்தக் கோவிலை தற்போது நிர்வகித்து வரும் திருமதி.
பத்மா தெரிவித்தார். இவரது கணவர் கிருஷ்ணகுமாரின் தந்தை வீரபத்திர செட்டியார் என்பவர்
இதற்கு முன்பு நிர்வகித்து வந்ததாகவும், அவருக்குப் பிறகு, தற்போது இந்த தம்பதியினர்
கோவிலை பராமரித்து நிர்வகித்து வருகின்றனர். சிற்ப சாஸ்திரப் படி உடைந்த அல்லது குறைபாடுள்ள
சிலை வழிபாட்டுக்கு உகந்தது அல்ல என்பதால் புதிதாக விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டு
பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
கேட்டவருக்கு கேட்ட வரும்
அருளும் வண்ணம் செல்வ விநாயகர் என்று பெயர் சூட்டப்பட்டு அப்பகுதி மக்களின் வறுமை நீக்கி
வளமை சேர்க்கும் விதமாக அருள்பாலித்து வருகிறார் செல்வ விநாயகர். மூலவரான செல்வ விநாயகருக்கு
அருகிலேயே மொட்டைப் பிள்ளையாரும் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு
வருகின்றன. கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
![]() |
| இராமலிங்க மடம் ஜோதி |
![]() | |
|
|
இக்கோவிலுக்கு வந்து வேண்டுதல்
நிறைவேறி தாங்கள் தற்போது நல்ல நிலையில் இருப்பதாக இங்கு வரும் பக்தர்கள் கூறுவதை நாமே
கேட்கலாம். அப்படி வேண்டுதல் நிறைவேறிய பக்தர்களின் அன்புள்ளத்தாலும், கொடைத் தன்மையாலும்
கோவில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
இத்தகைய சிறப்பும், பழைமையும், தொன்மையான
வரலாறும் கொண்ட இந்த மொட்டைப் பிள்ளையார் கோவிலை சீரமைக்கவும், பக்தர்களுக்கு மேலும்
பல வசதிகள் செய்து தரவும், பராமரிக்கவும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தினர் வேண்டுகோள்
விடுத்துள்ளனர். அதன்படி, கோவிலுக்கு சுற்றுச் சுவர் கட்டவும், தரை அமைக்கவும், தண்ணீருக்காக
போர்வெல் வசதி அமைத்து தரவும், மேலும் சில வசதிகளை செய்து மேம்படுத்த, பக்தர்கள் உதவி
செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். வரலாற்றோடு நீண்ட தொடர்புடைய மொட்டைப் பிள்ளையார்
கோவிலை பாதுகாக்க வேண்டியது பக்தர்களின் கடமை. இதற்காக கோவில் நிர்வாகம் பக்தர்களிடமிருந்து
உதவியையும், சேவையையும் வேண்டுகின்றனர். விருப்பமுள்ளவர்கள் நிதியாகவோ, பொருளாகவோ,
சேவையாகவோ வழங்கி, மொட்டைப் பிள்ளையார் கோவிலுக்கு உதவி செய்து, விநாயகரின் அருள்பெறுமாறு
அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
உதவி செய்ய அழைக்கவும்:
ஓம் சிவசக்தி ஆன்மிக பக்த
சபை
தலைவர் : திருமதி. சுசிலா
பொதுச் செயலாளர் : திரு. ஐயப்பன்
கோவில் நிர்வாகி : திருமதி. பத்மா
செல் : 9677211371,
7401255908
கொசுறு செய்தி:
அனகாபுத்தூர்.
சென்னை பல்லாவரம் அருகே உள்ள
இதன் தொன்மையான பெயர் ஆனைகா புத்தூர் ஆகும். அதாவது யானைகளை பராமரித்து பாதுகாத்து வந்த இடமாகும். பல்லவர்களின் காலத்தில் இந்த இடத்தில் யானைகள் பாதுகாக்கப்பட்டு வந்ததாகவும், இவ்வூரின் அருகே அடையாறும், அதனை சார்ந்த மடுவும் யானைகளை பாதுகாக்க உகந்ததாய் இருந்துள்ளது. அதனால் யானைப்படை இங்கு நிறுத்தி
பராமரிக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், இவ்வூரில் பாதுகாக்கப்பட்டு வந்த சில யானைகள் அருகிலுள்ள மடுவின் நீரை முகந்து அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் இறைவனுக்கு அபிஷேகம் செய்வித்தும், மடுவின் கரையில் அமைந்த நந்தவன மலர்களை தூவியும் அர்ச்சித்து பெயர் பெற்றதாக தலபுராணம் கூறுகிறது. எனவே, யானை பூஜித்த தலைவன் இறைவன் உறையும் இவ்வூர் ஆனைகாபுத்தூர் என்று அழைக்கப்பட்டு, தற்காலத்தில் அனகாபுத்தூர் என்று மருவி வழங்கப்பட்டு வருகிறது.
Friday, 4 September 2015
Subscribe to:
Posts (Atom)














