Monday, 5 August 2013

கொஞ்சம் ரிலாக்ஸ் ப்ளீஸ்….!

 மூட்டை மூட்டையாக தவிடு, புண்ணாக்கு போட்டு திமுகவினர் ஆசையாசையாய் மாடுகளை வளர்த்தாலும், அது அம்மா-னுதான் கத்துமே தவிர கலைஞர்-னு கத்தாது. அது தான் வாழ்க்கை.!
 -----------

காகம் கருப்பா இருந்தாலும் அது போடுற முட்டை வெள்ளையாகத்தான் இருக்கும். ஆனா அந்த வெள்ளை முட்டையில இருந்து வெளியே வரும் காகமும் கருப்பாதான் இருக்கும். அதுதான் வாழ்க்கை.!
 -----------
இன்டெர்நெட்டே கதியா கிடக்கிறதைக் கூட சகிச்சுக்கலாம். ஆனா   படிச்ச பசங்க இப்படியெல்லாமா செய்வாங்க…?
ஏன் இப்ப என்னாச்சு…?
அதையேன் கேக்கறீங்க… நம்ம கோகுல் அவன் பெயரை கூகுள்-னு மாத்திக்கிட்டானாம். தியாகு தன்னோட பெயரை யாகூ-னு சொல்லச் சொல்றானாம்.
 -----------
சார் இனிமே அந்த வகுப்பு மாணவர்களுக்கு நான் பாடம் எடுக்க மாட்டேன்.
என்ன சார் பிரச்சனை…?
நீங்களே பாருங்க சார், ஒரிஜினாலிட்டி-க்கு ஸ்பெல்லிங் எழுதச் சொன்னா மொத்த பசங்களும் ஒரு G, நாலு T –னு எழுதி கடுப்பேத்துறாங்க…
-----------
-  ----  புதிய தரிசனம் இதழில் படித்தது.