Thursday, 22 August 2013

முதல் ஆதி மனிதன் ஒரு பெண்




முதல் ஆதி மனிதன் ஒரு பெண் என்பது விஞ்ஞானபூர்வமான உம்மை.சுருக்கமாக சென்னால் முதல் மனிதன் ‘ஆதாம் அல்ல ‘ஏவாள்’ தான்.அதுவும் ஜரோப்பிய வெள்ளைக்கார ஏவாள் இல்லை.ஆப்பிரிக்கக் கறுப்பு ஏவாள்.

 சுமார் மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பெண் ஆப்பிரிக்காவிக் தென் பகுதியில் ஒரு மலைச்சரிவில் நடந்து சென்றாள். மலைக்கு அடிவாரத்தில் கடல்; கடற்கரையை நோக்கி அவள் நடந்து சென்றிருக்க வேண்டும்.கடலோரமாக செத்துக் கிடந்த ஏதோ பிராணி அவள் பார்வையில் பட்டிருக்க வேண்டும்.அதை சாப்பிடுவதற்காக அவள் மலைச்சரிவில் இருந்து இறங்கியிருக்கலாம்.அல்லது அங்கே சிறிது நேரம் அமர்ந்து இளைப்பாறி கடலை வெறித்து பார்த்து கொண்டிருந்திருக்கலாம்.அவள் மனதில் என்ன ஓடியதோ யாருக்கு தெரியும்?

 ஒரு நல்ல விஷயம் நடந்து சென்ற அவள் தன் காலடிச்சுவடுகள் விட்டுப் போயிருக்கிறாள்.சில ஆண்டுகளுக்கு முன்புதான் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அந்த காலடிச் சுவடுகளை கண்டு பிடித்தார்கள்.ஆராய்ச்சிகள் நடத்தியதில் அந்த சுவடுகள் சுமார் மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று தெரிய வந்து விஞ்ஞான உலகம் பிரமிப்பில் ஆழ்ந்தது.

 நம்மை போலவே கைகளை வீசி சர்வசாதரனமாக நடந்த அந்த முதல் பெண்ணிடம் ஒரு விசேஷ ஜீன் இருந்தது என்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள்.மீட்டோ காண்ட்ரியல் டி.என்.ஏ என்கிற ஜீன் அது.உலகில் உள்ள அத்தனை மனிதர்களும் உருவாக அடிப்படைக் காரணமான ஆதார சக்தி அந்த ஜுன் தான் என்று விஞ்ஞானிகள் பிற்பாடு அறிவித்தார்கள்.
  
ஆண் உதவி இல்லாமல் தாங்களாகவே வம்சவிருத்தி செய்து கொள்ளகூடிய பெண் உயிரினங்கள் உண்டு.அஃபிட்ஸ் என்கிற ஈ வகை ஓர் உதாரணம்.இந்த வகை உயிரினங்களில் பெண் தானாக உள்ளுக்குள் கருத்தரித்து ஒரு மகளை பெற்றெடுக்கும்.
  
வம்ச வம்சமாக தாய் மகள் தாய் மகள் தான்.ஆணே கிடையாது ஆனால் அத்தனையும் ஒரே மாதிரி க்ளோன்கள் என்பதால் இதில் பரிணாம வளர்ச்சி என்பதே இல்லாமல் போய்விடுகின்றது.இறைவன் சில உயிரினங்களை மட்டும் ஒரு சோதனை முயற்சியாக இப்படி படைத்திருக்க வேண்டும்.மனித இனத்திலும் பெண் இந்த வகையில் ஆண் உதவியில்லாமல் கருத்தரித்து பெண்களாகப் பெற்றிருந்தால்???

No comments:

Post a Comment