Wednesday, 28 December 2016
Thursday, 17 November 2016
Tuesday, 10 May 2016
முருக பக்தர்களுகு ஓர் அரிய வாய்ப்பு!!!
சென்னையில் இருந்து ஆறுபடை மற்றும் சுற்றுலா வரும் மே 20 அன்று மாலை 3 மணி அளவில் புறப்படுகிறது.
6 நாட்கள் பேருந்து பயணம், உணவு, தங்கும் வசதி உட்பட ஒரு நபருக்கு ரூ.4100 மட்டுமே, இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
முருக பக்தர்கள், குழுவாக வருபவர்கள், ஆன்மிக அமைப்புகளின் சார்பில் வருபவர்களுக்கு
சிறப்பு சலுகை உண்டு.
Monday, 4 April 2016
அன்பின் வாசல்: ஓம் சிவசக்தி ஆன்மிக பக்த சபை
அன்பின் வாசல்: ஓம் சிவசக்தி ஆன்மிக பக்த சபை: ஓம் சிவசக்தி ஆன்மிக பக்த சபை என்பது, “அன்பே சிவசக்தி, சிவசக்தியே பஞ்சபூதம், பஞ்சபூதமே பிரபஞ்சம்” என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட...
Monday, 21 March 2016
ஓம் சிவசக்தி ஆன்மிக பக்த சபை
ஓம்
சிவசக்தி ஆன்மிக பக்த சபை என்பது, “அன்பே சிவசக்தி, சிவசக்தியே பஞ்சபூதம், பஞ்சபூதமே
பிரபஞ்சம்” என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டும், “ஆன்மிகத்துடன் அறப்பணி” என்பதை
நோக்கமாகக் கொண்டும் செயல்பட்டு வரும் ஓர் ஆன்மிக இயக்கமாகும். சிவன் மற்றும் சக்தி,
இவர்களின் மொத்த உருவமாக உள்ள முருகன் ஆகியோரின் மகாமித்யங்களை, புகழை, தத்துவங்களை,
வழிபாட்டு நெறிகளை பின்பற்றும் அனைத்து பக்தர்களும் தங்களை இந்த அமைப்பில் இணைத்துக்
கொண்டு, ஆன்மிகத்துடன் அறச்சேவைகளை செய்து பிறப்பின் நோக்கத்தை நிறைவேற்றும் விதமாக,
வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளலாம்.
ஓம் சிவசக்தி ஆன்மிக பக்த சபை, அறக்கட்டளையாக
தமிழக அரசின் பதிவு பெற்று இயங்கி வருகிறது. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பதற்கேற்ப
ஏழைகள், ஆதரவற்றோர், ஊனமுற்றோர் உள்ளிட்ட நலிந்த நிலையில் வாழ்பவர்களின் நிலை மாறி,
ஆன்மிக, சமூக, கல்வி நிலைகளில் மேம்பட்ட வாழ்க்கை வாழ, நிழல் தரும் ஆல விருட்சமாக ஓம்
சிவசக்தி ஆன்மிக பக்த சபை துணை நிற்கும். ஆன்மிகத்துடன் கூடிய சமூக, அறச் சேவை என்கிற
உயரிய நோக்கத்துடன் எங்களின் பணியை செய்து வருகிறோம்.
முழுமுதற் கடவுள் ஆணைமுகன், ஏறுமுகம் காட்டி
வரும் ஆறுமுகனாம் ஆறுபடையப்பன், எங்கும் நீக்கமற நிறைந்து உலக உயிர்களுக்கெல்லாம் அம்மையும்
அப்பனுமாய் விளங்குகின்ற சிவன் சக்தியின் அருட் பார்வையினாலும், சூட்சுமமாய் வலம் வந்து
மனித குல மேன்மைக்கு உதவி வரும் சித்தர் பெருமக்களின் ஆசீர்வாதத்தினாலும், மனித இனத்திற்கே
உரித்தான இரக்கமும், கொடைத்தன்மையும் கொண்ட வெள்ளை உள்ளங்களுக்கு சொந்தமான ஆன்றோர்,
சான்றோர், அடியார்கள், சாமானிய மக்களின் கருணையாலும்
இத்தகைய சேவைகளை செய்து வருகிறோம். ஆன்மிகத்திலும், இந்து மதத்திலும் நம்பிக்கை கொண்ட
நல்ல உள்ளங்கள், இந்த இறைப் பணியில் எங்களுடன் இணைந்து செயல்பட அன்புடன் அழைக்கின்றோம்.
ஓம் சிவசக்தி ஆன்மிக பக்த சபையில் உறுப்பினராக ஆன்மிக சேவையில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள்
தங்களைப் பற்றிய விபரங்களை தெரிவிக்கலாம். ஓம் சிவசக்தி ஆன்மிக பக்த சபையின் நோக்கங்கள்
செயல்பாடுகள் பற்றி கீழே கொடுத்துள்ளோம். உதவி செய்ய விருப்பமுள்ளவர்கள் அறக்கட்டளை
மூலம் உதவலாம்.
சிவசக்தி துணையிருக்க எல்லாம் சாத்தியமாகும்
என்ற நம்பிக்கையுடன் ஆன்மிக சேவைப் பணியில்…..
எம்.
சுசிலா
தலைவர்,
ஓம் சிவசக்தி ஆன்மிக பக்த சபை.
எம்.
ஐயப்பன்,
பொதுச்செயலாளர்,
ஓம் சிவசக்தி ஆன்மிக பக்த சபை.
மற்றும்
நிர்வாகிகள், உறுப்பினர்கள்.
ஓம் சிவசக்தியே
நமஹ…
ஓம் சிவ
சிவ ஓம்
தொடர்பு கொள்ள: 9677211371, 8190932481 – WhatsApp.
Email : omsivasakthispritualbakthasaba@gmail.comSunday, 20 March 2016
Monday, 11 January 2016
Subscribe to:
Posts (Atom)