பூந்தமல்லி ஊத்துக்காட்டு
எல்லையம்மன் கோவிலில் ஆடித்திருவிழா
ஆயிரக்கணக்கான
பக்தர்கள் தரிசனம்
சென்னையை அடுத்துள்ள பூந்தமல்லி அருகேயுள்ள குமணன்சாவடியில்
அமைந்துள்ள மிகவும் பழமையான, புராதானமிக்க கோவில் ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவில்.
இந்தக் கோவிலில் ஆடி மாத திருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொருநாளும்
சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
ஆடித்திருவிழாவையொட்டி கோவில் பூக்கள் மற்றும்
மங்கலப்பொருட்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மற்றும்
ஆராதனைகளும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.
10ம் நாள் திருவிழாவான இன்று திமுக பொதுக்குழு
உறுப்பினர் பூவை ஜெயக்குமார் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினார். தொடர்ந்து தீமிதித்
திருவிழா, கலை நிகழ்ச்சிகள், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் முன்னாள்
நகர்மன்றத் தலைவர் ஞானம் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.