Friday, 23 August 2013

கிளிமஞ்சாரோ மலை



கிளிமஞ்சாரோ மலை டான்சானியா நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மிக உயரமான எரிமலைவகையைச் சேர்ந்த மலை. இதுவே ஆப்பிரிக்காக் கண்டத்தில் உள்ள மலைகள் யாவற்றினும் மிக உயர்ந்த மலை. இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 5895 மீட்டர் (19,340 அடி) ஆகும். இம்மலையின் மிக உயரமான முகட்டுக்கு 'உகுரு' என்று பெயர். கிளிமஞ்சாரோ மலையில் கிபோ, மாவென்சி, இழ்சிரா ( Kibo, Mawensi, Shira) என மூன்று எரிமலை முகடுகள் உள்ளன. இம்மலை, பல உள்ளடுக்கு கொண்ட எரிமலை வகையைச் சேர்ந்த எரிமலை (பல்லுள்ளடுக்கு எரிமலை, stratovolcano). கிளிமஞ்சாரோ எந்தவொரு மலைத்தொடரையும் சாராத தனிமலை.இமயமலைத் தொடர்களில் உள்ள மலைகளை ஒப்பிடும் பொழுது கிளிமஞ்சாரோவின் உயரம் அதிகம் இல்லை. ஆனால் கிளிமஞ்சாரோதான் உலகில் உள்ள தனிமலைகள் யாவற்றினும் மிக உயரமான மலை ஆகும்.

மலை அமைப்பு
இம்மலையில் மிக உயரமான முகட்டு உச்சியாகிய உகுரு கிபோ எரிமலையில் உள்ளது. கிபோ மலையின் உச்சியில் காணப்படும் எரிமலைக் குழி 2.4 கி.மீ (1.5 மைல்) விட்டம் உடையது. உகுரு முகடு ஆப்பிரிக்காவிலேயே உயரமான இடமாகையால், உலகின் ஏழு கொடுமுடிகள் (seven summits) என்று கருதப்படும் உயரான முகடுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. கிளிமஞ்சாரோவின் உகரு முகட்டிற்கு முதன்முதலாக அக்டோபர் 61889 அன்று, மராங்கு (Marangu ) படைத்துறையைச் சேர்ந்த யோகானஸ் கின்யாலா லௌவோ (Yohanas Kinyala Lauwo) என்பவரின் துணையோடுடாய்ட்ச் நாட்டைச் சேர்ந்த ஹான்ஸ் மேயர் (Hans Meyer), ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த லூடுவிக் புர்ட்ஷெல்லர் ( Ludwig Purtscheller) ஆக மூவரும் ஏறி வரலாறு படைத்தனர். கிபோவைத் தவிர மற்ற இரு பெரும் எரிமலை முகடுகளாகிய மாவென்சி (5,149 மீ, 16,890 அடி), சிரா (3,962 மீ, 13,000 அடி) ஆகியனவும் அடங்கிவிட்ட எரிமலைகள்தாம். மாவென்சி ஆப்பிரிக்காவிலேயே மூன்றாவது உயரமான மலை (கென்யா மலை இரண்டாவது உயரமான மலை).
மலையின் பெயர்
இம்மலைக்குக் கிளிமஞ்சாரோ என்னும் பெயர் எப்பொழுது யாரால் வழங்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால்ஐரோபியர் இப்பெயரை 1860 ஆம் ஆண்டளவில் பயன்படுத்தத் தொடங்கினார்கள்சுவாகிலி மொழியில் "கிளிமா" (Kilima ) என்றால் குன்று (சிறுமலை) என்று பொருள்[2] என்றும் "ஞ்சாரோ" (Njaro) என்றால் பழைய சுவாகிலி மொழியில் வெள்ளை" "பளபளப்பான" என்று பொருள் என்றும் [3] கூறுகின்றனர். ஆனால் வேறு சிலர் இது சுவாகிலி மொழிச்சொல் அல்ல என்றும்கிச்சகா மொழியில் ஜாரோ (jaro) என்றால் பயணம் செல்லும் தொடர் (caravan) என்றும் பல்வேறு விதமாகக் கூறுகின்றனர். சிறுமலை அல்லது குன்று என்று பொருள்படும் கிளிமா என்னும் பெயர் எப்படி இப்பெரிய மலைக்கு முன்னொட்டாக வந்தது என்று இவ்விளக்கங்கள் தெளிவு படுத்துவதில்லை. கிச்சகா மொழியில் கிளிமஞ்சாரே அல்லது கிளிமஜ்யாரோ (kilemanjaare or kilemajyaro) என்னும் சொற்கள் "பறவையை, சிறுத்தையை, பயணத்தொடர் வரிசையைத் தோற்கடிக்கும்" ("which defeats the bird/leopard/caravan") என்று பொருள்படும் என்கிறார்கள், ஆனால் ஐரோப்பியர்கள் 1850களில் இங்கு வரும் முன்னர், கிச்சகா மொழியினர் அப்பெயரைப் பயன்படுத்தவில்லை என்றும் கூறுகிறார்கள்
1880களில் இம்மலை டாய்ட்ச் மொழியில் கிலிமண்ட்ஷாரோ (Kilimandscharo) என்று அழைக்கப்பட்டது. கார்ல் பீட்டர்ஸ் என்னும் டாய்ட்ச் நாட்டவர் இப்பகுதி மக்களின் தலைவர்களிடம் பேசி இம்மலையை டாய்ட்ச் நாட்டினரின் கிழக்கு ஆப்பிரிக்கக் குடியாட்சியின் (காலனியின்) பகுதியாக ஆவதற்கு ஒப்புக்கொள்ளச் செய்தார்1889இல் கிபோ மலையில் உள்ள உகுரு முகட்டை கெய்சர் வில்ஹெல்ம் ஸ்பிட்ஸெ (Kaiser-Wilhelm-Spitze) [2] என்று பெயரிட்டுடாய்ட்ச் பேரரசின் ஆவணங்களில் 1918 ஆம் ஆண்டுவரை பயன்படுத்தி வந்தனர். 1918 இல் பிரித்தானியர் இப்பகுதியை டாய்ட்ச்சு நாட்டினரிடம் இருந்து வென்று கைமாறிய பின் அப்பெயர் கைவிடப்பட்டது
இயற்பியல் அம்சங்கள்
கிளிமஞ்சாரோ மலை உலகின் மிக]பெரிய பல்லடுக்கு எரிமலை வகையைச் சேர்ந்த மலை. இது எரிமலைக் குழம்புஎரிமலைத் தூசிப் படிவுஎரிமலைச் சாம்பல்ஆகியவற்றின் பல படைகளால் அமைந்தது. எரிமலைத் தூசிப் படிவுகள் எரிமலை வெடிப்பின்போது வளிமண்டலத்தில் கலந்து பின்னர் படிவுற்றவை. எனவே இது காணப்படுவது ஒருகாலத்தில் கிளிமஞ்சாரோவில் எரிமலை இயக்கமுள்ளதாக இருந்ததைக் காட்டுகிறது. இருந்தாலும், அறியக்கூடிய அண்மைக் காலத்தில்எரிமலை வெடிப்பு ஏற்படவில்லை என அறிவியலாளர்கள் கருதுகின்றனர். இதனால் பல மில்லியன் ஆண்டுகளாக இம்மலை செயலற்ற நிலையிலேயே இருப்பதாகக் கருதலாம்.
கிளிமஞ்சாரோ மலை கூம்பு எரிமலை வடிவம் கொண்டது. இது எரிமலைவாயூடாக எறியப்பட்ட பொருள்களினால் உருவானது. இவ்வாறான வெளிப்படு பொருட்கள் எரிமலை வாயைச் சுற்றிக் கூம்பு வடிவில் குவிந்ததன.
மலையேறும்
கிளிமஞ்சாரோ மலைமீது ஏற ஏற்புபெற்ற பல மலைவழிகள் உள்ளன. அவையாவன: There are several routes officially sanctioned for climbing Kilimanjaro. These are:
மச்சாமே (Machame
மாரங்கு (Marangu) 
 ரோங்கை (Rongai) 
 லெமோஷோ அல்லது லண்டோரோசி லெமோஷோ (Londorossi Lemosho)
உம்புவே (Umbwe)
சிரா (Shira) 
இம்வேக்கா (Mweka) (descent only)
இவற்றுள் "மச்சாமே" சிறந்த காட்சியமைப்புக் கொண்டதும் சரிவு கூடியதுமான பாதையாகும். "ரோங்கை", "மராங்கு" ஆகியவை இலகுவான பாதைகள். ஆனால் இப்பாதைகளில் தங்குமிட வசதிகள் குடிசைகளாகும். ஏறுவது இலகுவானதால் இப் பாதைகள் எப்போதும் சுறுசுறுப்பாக உள்ளன. இங்கே ஏறுவதும் இறங்குவதும் ஒரே வழியே.
கிளிமஞ்சாரோ மலையில் ஏற முயல்பவர்கள் இது பற்றி உரிய தகவல்களைச் சேகரித்து, தேவையான வசதிகளைத் தயார்படுத்திக் கொள்வதுடன் உடல் தகுதியையும் கொண்டிருத்தல் அவசியம். நுட்ப நோக்கில் ஏறுவது இலகுவானாலும், உயரத்தினாலும், மிகக் குறைந்த வெப்பநிலை காரணமாகவும் ஏறுவது கடினமானதாகவும், ஆபத்தானதாகவும் உள்ளது. புதுச் சூழலுக்குப் பழக்கப்படுத்திக் கொள்ளல் மிகவும் அவசியமானதாகும். எனினும் பலர் நோய்வாய்ப்படுவது உண்டு. ஒவ்வொரு ஆண்டும் இந் நோயால் மலையேறுவோர் 10 பேர்வரை இறக்கிறார்கள். இவர்களுடன் உதவிக்குச் செல்லும் உள்ளூர் மக்களையும் சேர்த்து 10-20 பேர் வரை இறப்பதாகச் சொல்லப்படுகிறது. மலையேறும் எல்லோருமே ஓரளவு வசதிக்குறைவு, மூச்சுவிடக் கடினமாக இருத்தல், உடல்வெப்பக் குறைவுதலைவலி போன்றவற்றால் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் நல்ல உடற்தகுதி கொண்ட இளையோரே "உகுரு" கொடுமுடியை அடைகிறார்கள். குறிப்பிடத்தக்க அளவிலான மலையேறுவோர் அரை வழியிலேயே தமது முயற்சியைக் கைவிட்டுவிடுகிறார்கள்.
மலையேறுவோர் கிளிமஞ்சாரோ மலையில் செலவுசெய்யும் ஒவ்வொரு நாளுக்கும் கட்டணங்கள் அறவிடுவது தொடர்பாக தான்சானிய அதிகார அமைப்புக்களை உயர் மலைகளில் ஏறுவோர் சங்கங்கள் விமர்சித்துள்ளன. இப்போக்கு, செலவுகளைக் குறைப்பதற்காக மலையேறுவோர், புதுச் சூழலுக்குப் பழக்கப்படுத்திக் கொள்ளுதல் போன்ற அடிப்படைத் தேவைகளைக் குறைத்துக்கொள்ளத் தூண்டுவதாக அவர்கள் கூறுகின்றனர்.
கிளிமஞ்சாரோவில் ஏறுவது இலகு என எண்ணிக்கொண்டு பெருமளவு சுற்றுலாப் பயணிகள் அங்கு வருவதையிட்டு அங்குள்ள தான்சானிய மருத்துவ சேவை அலுவலர்கள் கவலையடைந்துள்ளனர். இவ்வாறு வரும் பலருக்கு குறிப்பிடத்தக்க அளவில் மருத்துவ உதவி தேவைப்படுகிறது. இது குறித்த ஆய்வுகள், தான்சானியாவுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் மலையேறும் குழுக்களுடன் சேர்ந்து கொள்ளத் தூண்டப்படுவதாகவும், அதற்குத் தேவையான உடற்தகுதிகள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்படுவது இல்லை எனவும் தெரிவிக்கின்றன.
தாவர வகைகள்
கிளிமஞ்சாரோவில் நீரைத் தேக்கும் முட்டைக்கோசு வகைத் தாவரங்களை உட்படுத்திய, பல தனித்துவமான தாவர வகைகளை டுசொக் புல்வெளிப் பகுதிகளில் காணலாம். இவையனைத்தும் ஆல்ப்ஸ் காலநிலைக்குப் பழக்கப்பட்டவை. கிளிமஞ்சாரோ பலவிதமான காட்டுவகைகளை 3000 மீட்டர் உயரத்துக்கு மேற்பட்ட பகுதிகளில் கொண்டுள்ளது. இக் காடுகளில் 1200க்கும் மேற்பட்ட இனங்களைச் சேர்ந்த vascular தாவரங்கள் காணப்படுகின்றன.
விலங்குகள்
கிளிமஞ்சாரோ மலைப் பகுதியில் பல்வேறு பறவைகளையும் விலங்குகளையும் காணலாம். இவற்றுள் கட்டைவிரலற்ற கொலோபசுக் குரங்குநால்வரி எலி,குங்குரு எனப்படும் வெண்கழுத்துக் காக்கைஎலும்புண்ணிக் கழுகு, பல்வகை மலைக்குருவிகள் முதலியவற்றைக் குறிப்பிடலாம்.

No comments:

Post a Comment