சிவசொரூபமாக பார்க்கப்படுகிறது ருத்ராட்சம் சிவனின் கண்ணில் இருந்து
தோன்றியதாக சிவஆகமம் சொல்கிறது.
ருத்திராட்ச மாலையின் பெருமை என்று
சொன்னால், ஏக முக
ருத்திராட்சத்தின் அதி தேவதையாக தத் பரமசிவனைக் கூறுவார்கள். இந்த ஏக முக
ருத்திராட்சத்தை அணிவதால் சிவபெருமான் ப்ரீத்தி அடைந்து பிரம்மஹத்தி தோஷம் விலகும்.
இரண்டு முக ருத்திராட்சத்தின் அதிதேவதை ஸ்ரீகண்ட பரமசிவம். இந்த இரண்டு முக ருத்திராட்சத்தை அணிவதால் சிவசக்தி ப்ரீதி ஏற்பட்டு பசுவைக் கொன்ற தோஷம் விலகும்.
மூன்று முக ருத்திராட்சத்தின் அதிதேவதை அக்னி தேவனாகும். இதை அணிவதால் மும்மூர்த்திகளும் சந்தோஷம் அடைகிறார்கள். ஸ்திரீகளுக்குச் செய்த தோஷம் விலகும்.
நான்கு முக ருத்திராட்சத்தின் அதிதேவதை பிரம்மாவாகும். இதை அணிவதால் பிரம்மா ப்ரீதி அடைவதுடன், மனிதர்களுக்கு இழைத்த பாவம் விலகும்.
ஐந்து முக ருத்திராட்சத்தின் அதிதேவதை காலாக்னி ருத்ரன். இதை அணிவதால் சதாசிவம் சந்தோஷம் அடைகிறார். செய்யக்கூடாத செயல் களைச் செய்வதால் உண்டாகும் தோஷம் விலகும்.
ஆறு முக ருத்திராட்சத்தின் அதிதேவதை சுப்ரமணியராகும். இதை அணிவதால் ஆறுமுகன் சந்தோஷம் அடைவதுடன், பிரம்மஹத்தி தோஷம் விலகும்.
ஏழு முக ருத்திராட்சத்தின் அதிதேவதையாக ஆதிசேஷன் சொல்லப்படுகிறது. இதை அணிவதால் சப்தமாதர்கள் சந்தோஷம் அடைவதுடன் களவு தோஷமும் கோபத் தீயும் விலகும்.
எட்டு முக ருத்திராட்சத்தின் அதிதேவதை விநாயகப் பெருமானாகச் சொல்லப்படுகிறது. இதை அணிவதால் அட்டவித்யேச்வரர் சந்தோஷம் அடைவதுடன், செய்யக்கூடாத பாவங்களைச் செய்த தோஷம் விலகுகிறது.
ஒன்பது முக ருத்திராட் சத்தின் அதிதேவதை பைரவர். இதை அணிவதால் நவதீர்த்தங் களில் குளித்தால் என்ன புண்ணியமோ அந்தப் புண்ணியம் கிட்டும்; பைசாச உபாதைகளும் துஷ்டப் பிரயோகங்களும் விலகும்.
பத்து முக ருத்திராட்சத் தின் அதிதேவதை விஷ்ணு. இதை அணிவதால் அஷ்டதிக் பாலகர்களும் சந்தோஷம் அடைவதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஜோதிடத் தில் வரும் நாக தோஷமும்; பூத- பிரேத- பைசாச தோஷங் களும் விலகும்.
பதினோரு முக ருத்திராட் சத்தின் அதிதேவதை பதினோரு ருத்ரர்களாகச் சொல்லப்பட்டுள் ளது. இதை அணிவதால் 11 ருத்திரர்களும் ப்ரீதி அடைகிறார்கள். பல அஸ்வமேத யாகம் செய்த பலன் களும் பல வாஜபேய யாகம் செய்த பலனும் கிட்டும்.

பல்வேறு பாவங்கள், கணக்கில்லாத தோஷங்களை விலக்கும் ஆற்றல் மிக்கவை. எந்த
பூஜை செய்வதாக இருந்தாலும், அந்த
பூஜையின் பரிபூரண பலனை பெற வேண்டுமானால் ருத்ராட்சம் அணிந்திருந்தால் மட்டுமே
கிட்டும் என்கிறது புராணங்கள்.
அதனால்தான் சிவசொரூப
ருத்ராட்சத்திற்கு இவ்வளவு சிறப்பு. வைணவ சித்தாந்தப்படி துளசிமணியே ருத்ரட்சமாக
மாறுகிறது. அதனால் துளசி மணி அணிந்தே பூஜைகள் செய்கிறார்கள். இது பாரம்பரிய
பழக்கமாக இருந்தாலும் இப்போது ருத்டாட்சம் அணியாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம்.
பிறப்பும் இறப்பும்
தெய்வசித்தம். பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்கிறோம். முடிவில் இறைவனின் பதம் அடையவேண்டும். அந்நிலையில்
அவர்கள் கழுத்தில் ருத்ராட்சம் இருந்தால் பாவங்கள் நீக்கப்பட்டு, பரலோகம் அடையலாம் என்பது நம்பிக்கை.
ருத்ராட்சம் அணிந்த
ஒருவர் ருத்ராட்சம் அணியாத மற்றவரை கைகூப்பி வணங்க கூடாதாம். அவ்வாறு வணங்குதல்
பாவம் என்கிறது வேதங்கள்.
பாவம் அணியாதவருக்கு
அல்ல. அணிந்தவருக்குதான் என்பதால் வணக்கம் என்று வார்த்தையாக சொல்லலாம்.
ருத்ராட்சத்தை அணிந்து
கொண்டு நீராடினால்,
கங்கையில் புனித
நீராடிய புண்ணியம் கிட்டும் என்பது ஆன்றோர் வாக்கு. ஒருவர்
இயற்கையாக மரணம் அடையும்போது ருத்திராட்ச மரத்தின் காற்றுபட்டால் அவர்களுக்கு
கைலாச பதவி கிடைக்கும் என்பார்கள். ருத்திராட்ச தானத்திற்கு இணையாக எதுவும் இல்லை
என்று சொல்வார்கள்.
புண்ணியம் நிறைந்த
ருத்ராட்சத்தை அணிவதில் சில கட்டுப்பாடுகள் இருக்கிறது.
கழுத்தோடு ஒட்டி
அணியப்படும் ருத்ராட்சம் விதிவிலக்கு. அதற்கு கண்ட ரட்சை என்று பெயர். மணமானவர்கள்
கூட கழுத்தை ஒட்டி அணிவதால் அது புனிதம்.
மாறாக நெஞ்சுக்கு
இறக்கி அணிந்திருந்தால் கட்டாயம் இரவில் கழட்டி வைக்க வேண்டும். குறிப்பாக
மணமானவர்கள் அணியக்கூடாது..
பெண்கள் அணியலாமா
என்பது ஒரு கேள்வி!!
பெண்கள் அணியலாம். ஆனால்
பருவம் எய்துவதற்கு முன்பு சிறுமியாக இருக்கும் போதும், அதற்கு பிறகு மாதாந்திர குளியல் அதாவது மென்சஸ்
நின்ற பிறகும் பெண்கள் அணியலாம். இடைப்பட்ட காலங்களில் கழுத்தில் அணியக்கூடாது.
பூஜைகள் செய்யும் போதும், ஜபங்கள் செய்யும் காலத்திலும் ருத்ராட்ச மணிமாலைகளை
கொண்டு மந்திர உரூ ஜெபிக்கலாம் என்பதே வேத விளக்கங்கள். ருத்திராட்சம் அணிவதைவிட 54 பெரிய ருத்திராட்சம் கொண்ட மாலையை வாங்கி அதில்
சிவபஞ்சாட்சரி அல்லது சக்தி பஞ்சாட்சரம், பஞ்சதசீ என ஏதாவது ஒரு ஜெபத்தை உபதேசம் பெற்றுச் செய்து வாருங்கள். ருத்தி
ராட்சத்தை தானம் செய்யுங்கள். பவள மாலை அணியுங் கள். ருத்திராட்சத் தால் ஜெபம்
செய்தாலும், தானம் செய்தாலும் நீங்கள்
எதிர்பார்க்கும் பலன் நிச்சயம் கிடைக்கும்.
No comments:
Post a Comment