Saturday, 31 August 2013

பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா?


சிவசொரூபமாக பார்க்கப்படுகிறது ருத்ராட்சம் சிவனின் கண்ணில் இருந்து தோன்றியதாக சிவஆகமம் சொல்கிறது.
ருத்திராட்ச மாலையின் பெருமை என்று சொன்னால், ஏக முக ருத்திராட்சத்தின் அதி தேவதையாக தத் பரமசிவனைக் கூறுவார்கள். இந்த ஏக முக ருத்திராட்சத்தை அணிவதால் சிவபெருமான் ப்ரீத்தி அடைந்து பிரம்மஹத்தி தோஷம் விலகும்.

இரண்டு முக ருத்திராட்சத்தின் அதிதேவதை ஸ்ரீகண்ட பரமசிவம். இந்த இரண்டு முக ருத்திராட்சத்தை அணிவதால் சிவசக்தி ப்ரீதி ஏற்பட்டு பசுவைக் கொன்ற தோஷம் விலகும்.

மூன்று முக ருத்திராட்சத்தின் அதிதேவதை அக்னி தேவனாகும். இதை அணிவதால் மும்மூர்த்திகளும் சந்தோஷம் அடைகிறார்கள். ஸ்திரீகளுக்குச் செய்த தோஷம் விலகும்.

நான்கு முக ருத்திராட்சத்தின் அதிதேவதை பிரம்மாவாகும். இதை அணிவதால் பிரம்மா ப்ரீதி அடைவதுடன், மனிதர்களுக்கு இழைத்த பாவம் விலகும்.

ஐந்து முக ருத்திராட்சத்தின் அதிதேவதை காலாக்னி ருத்ரன். இதை அணிவதால் சதாசிவம் சந்தோஷம் அடைகிறார். செய்யக்கூடாத செயல் களைச் செய்வதால் உண்டாகும் தோஷம் விலகும்.
ஆறு முக ருத்திராட்சத்தின் அதிதேவதை சுப்ரமணியராகும். இதை அணிவதால் ஆறுமுகன் சந்தோஷம் அடைவதுடன், பிரம்மஹத்தி தோஷம் விலகும்.

ஏழு முக ருத்திராட்சத்தின் அதிதேவதையாக ஆதிசேஷன் சொல்லப்படுகிறது. இதை அணிவதால் சப்தமாதர்கள் சந்தோஷம் அடைவதுடன் களவு தோஷமும் கோபத் தீயும் விலகும்.

எட்டு முக ருத்திராட்சத்தின் அதிதேவதை விநாயகப் பெருமானாகச் சொல்லப்படுகிறது. இதை அணிவதால் அட்டவித்யேச்வரர் சந்தோஷம் அடைவதுடன், செய்யக்கூடாத பாவங்களைச் செய்த தோஷம் விலகுகிறது.

ஒன்பது முக ருத்திராட் சத்தின் அதிதேவதை பைரவர். இதை அணிவதால் நவதீர்த்தங் களில் குளித்தால் என்ன புண்ணியமோ அந்தப் புண்ணியம் கிட்டும்; பைசாச உபாதைகளும் துஷ்டப் பிரயோகங்களும் விலகும்.

பத்து முக ருத்திராட்சத் தின் அதிதேவதை விஷ்ணு. இதை அணிவதால் அஷ்டதிக் பாலகர்களும் சந்தோஷம் அடைவதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஜோதிடத் தில் வரும் நாக தோஷமும்; பூத- பிரேத- பைசாச தோஷங் களும் விலகும்.

பதினோரு முக ருத்திராட் சத்தின் அதிதேவதை பதினோரு ருத்ரர்களாகச் சொல்லப்பட்டுள் ளது. இதை அணிவதால் 11 ருத்திரர்களும் ப்ரீதி அடைகிறார்கள். பல அஸ்வமேத யாகம் செய்த பலன் களும் பல வாஜபேய யாகம் செய்த பலனும் கிட்டும்.

பல்வேறு பாவங்கள், கணக்கில்லாத தோஷங்களை விலக்கும் ஆற்றல் மிக்கவை. எந்த பூஜை செய்வதாக இருந்தாலும், அந்த பூஜையின் பரிபூரண பலனை பெற வேண்டுமானால் ருத்ராட்சம் அணிந்திருந்தால் மட்டுமே கிட்டும் என்கிறது புராணங்கள்.
அதனால்தான் சிவசொரூப ருத்ராட்சத்திற்கு இவ்வளவு சிறப்பு. வைணவ சித்தாந்தப்படி துளசிமணியே ருத்ரட்சமாக மாறுகிறது. அதனால் துளசி மணி அணிந்தே பூஜைகள் செய்கிறார்கள். இது பாரம்பரிய பழக்கமாக இருந்தாலும் இப்போது ருத்டாட்சம் அணியாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம்.
பிறப்பும் இறப்பும் தெய்வசித்தம். பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்கிறோம். முடிவில் இறைவனின் பதம் அடையவேண்டும். அந்நிலையில் அவர்கள் கழுத்தில் ருத்ராட்சம் இருந்தால் பாவங்கள் நீக்கப்பட்டு, பரலோகம் அடையலாம் என்பது நம்பிக்கை.
ருத்ராட்சம் அணிந்த ஒருவர் ருத்ராட்சம் அணியாத மற்றவரை கைகூப்பி வணங்க கூடாதாம். அவ்வாறு வணங்குதல் பாவம் என்கிறது வேதங்கள்.
பாவம் அணியாதவருக்கு அல்ல. அணிந்தவருக்குதான் என்பதால் வணக்கம் என்று வார்த்தையாக சொல்லலாம்.
ருத்ராட்சத்தை அணிந்து கொண்டு நீராடினால், கங்கையில் புனித நீராடிய புண்ணியம் கிட்டும் என்பது ஆன்றோர் வாக்கு.  ஒருவர் இயற்கையாக மரணம் அடையும்போது ருத்திராட்ச மரத்தின் காற்றுபட்டால் அவர்களுக்கு கைலாச பதவி கிடைக்கும் என்பார்கள். ருத்திராட்ச தானத்திற்கு இணையாக எதுவும் இல்லை என்று சொல்வார்கள்.
புண்ணியம் நிறைந்த ருத்ராட்சத்தை அணிவதில் சில கட்டுப்பாடுகள் இருக்கிறது.
கழுத்தோடு ஒட்டி அணியப்படும் ருத்ராட்சம் விதிவிலக்கு. அதற்கு கண்ட ரட்சை என்று பெயர். மணமானவர்கள் கூட கழுத்தை ஒட்டி அணிவதால் அது புனிதம்.
மாறாக நெஞ்சுக்கு இறக்கி அணிந்திருந்தால் கட்டாயம் இரவில் கழட்டி வைக்க வேண்டும். குறிப்பாக மணமானவர்கள் அணியக்கூடாது..

பெண்கள் அணியலாமா என்பது ஒரு கேள்வி!!
பெண்கள் அணியலாம். ஆனால் பருவம் எய்துவதற்கு முன்பு சிறுமியாக இருக்கும் போதும், அதற்கு பிறகு மாதாந்திர குளியல் அதாவது மென்சஸ் நின்ற பிறகும் பெண்கள் அணியலாம். இடைப்பட்ட காலங்களில் கழுத்தில் அணியக்கூடாது.

பூஜைகள் செய்யும் போதும், ஜபங்கள் செய்யும் காலத்திலும் ருத்ராட்ச மணிமாலைகளை கொண்டு மந்திர உரூ ஜெபிக்கலாம் என்பதே வேத விளக்கங்கள். ருத்திராட்சம் அணிவதைவிட 54 பெரிய ருத்திராட்சம் கொண்ட மாலையை வாங்கி அதில் சிவபஞ்சாட்சரி அல்லது சக்தி பஞ்சாட்சரம், பஞ்சதசீ என ஏதாவது ஒரு ஜெபத்தை உபதேசம் பெற்றுச் செய்து வாருங்கள். ருத்தி ராட்சத்தை தானம் செய்யுங்கள். பவள மாலை அணியுங் கள். ருத்திராட்சத் தால் ஜெபம் செய்தாலும், தானம் செய்தாலும் நீங்கள் எதிர்பார்க்கும் பலன் நிச்சயம் கிடைக்கும்.

Wednesday, 28 August 2013

தனுஷ் படத்தில் சிம்பு நடிக்கிறாராம்


எதிர்நீச்சல் படத்தை தனது வொண்டர்பார் பிலிம்சுக்காக தயாரித்த தனுஷ், இப்போது ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் தான் நடிக்கும் வேலையில்லா பட்டதாரி என்ற படத்தையும் தானே தயாரித்து வருகிறார். 

அதோடு, இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து புதுமுகங்கள் நடிக்கும்  காக்கா முட்டை என்றொரு படத்தையும் தயாரிக்கிறார்.

சேரி மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் அந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் உள்ளதாம். 

அதனால் அதில் ஒரு முன்னணி நடிகர் யாராவது நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று தனுசும், வெற்றிமாறனும் பேசிக்கொண்டார்களாம். 

இந்த விசயம் எப்படியோ சிம்புவின் காதுக்கு செல்ல, தானே தனுசை தொடர்பு கொண்டு அந்த படம் பற்றியும், அதில் உள்ள கதாபாத்திரம் பற்றியும் கேட்டறிந்தாராம்.

அப்போது, அந்த கேரக்டர் சிம்புவை வெகுவாக பாதித்து விட, நானே நடிக்கிறேன் என்று சொன்னாராம். 

அவரிடமிருந்து அப்படியொரு வார்த்தை வரும் என்று சற்றும் எதிர்பார்க்காத தனுஷ், இன்ப அதிர்ச்சியடைந்தாராம். உடனே சிம்புவே முன்வந்து இந்த விசயத்தை வெற்றிமாறனிடமும் சொல்லி, சிம்பு நடிப்பதை உறுதிபடுத்தி விட்டாராம்.


ஆக, இத்தனை நாளும் சிம்பு-தனுசுக்கிடையே தொழில் போட்டி இருந்து வருவதாக வெளியான செய்திகள் அனைத்தையும் பொய்யாக்கும் விதத்தில் நடந்திருக்கும் இந்த நிகழ்வு, அவர்களின் நட்பினை மேலும் வலுப்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது.

ஸ்ரீ ஷிர்டி சாய் பாபா தியானச்செய்யுள்



சாயி நாதர் திருவடியே! 
சங்கடம் தீர்க்கும் திருவடியே! 
நேயம் மிகுந்த திருவடியே! 
நினைத்தளிக்கும் திருவடியே! 
தெய்வ பாபா திருவடியே! 
தீவினை தீர்க்கும் திருவடியே!
உயர்வை அளிக்கும் திருவடியே போற்றி!.

                            "ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி"

பூர்ண கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்




மஹா விஷ்ணு கிருஷ்ணாவதாரம் எடுத்த தினமே கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி) பண்டிகையாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இவ்வாண்டு ஆவணி 12ம் நாள்(28.8.2013) புதன் கிழமை அன்று கிருஷ்ண ஜயந்தி பூர்ணமாக வருகிறது. ஃ யாதெனில் அஷ்டமி திதி, ரோகினி நட்சத்திரம், ஹர்ஷண யோகம், நள்ளிரவு, சந்திர உதயம், ரிஷப லக்னம் என அனைத்து அம்ஸங்களுடன்  சேர்ந்து வருவது மிகவும் சரியான ஸ்ரீஜயந்தி நாளாகும். இது பல ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே அரிதாக ஏற்படும். இதுவே கிருஷ்ணர் பிறப்பின் காலசூழலுடன் ஒத்துப்போகும் நிலையாகும்.  இந்நாள் பூர்ண கிருஷ்ண ஸ்ரீஜயந்தி , கோகுலாஷ்டமி, வைகானஸ ஜயந்தி என அழைக்கப்படும்
கிருஷ்ணர் இந்திய மனங்களில் பல்வேறுவிதங்களில் குடிகொண்டிருப்பவன்.மீராவுக்கோ காதலன், ராதாவுக்கும்அவ்வாறே. அர்ஜுனனுக்கோ நண்பன், தத்துவஞானி, வழிகாட்டி.
நாம் என்னவாக இருக்கிறோமோ அதன்படியே நமக்கு காட்சி தருபவர்தான்கிருஷ்ணர்.  பீஷ்மர் அம்புப் படுக்கையில் கிடந்த போது அவருக்கும் ஒருதரிசனம் கொடுக்கிறார்.  ஆனால் முழு ஆயுதபாணியாகக் காட்சி தருகிறார்.ஏனெனில் பீஷ்மர் ஒரு போர் வீரர்.  அவருக்கு போர் வீரராகவேகாட்சியளிக்கிறார்.
விஷ்ணு
 சகஸ்ரநாமத்தில் வரும் வனமாலி கதீ சாங்கி சங்கீ சக்ரீச்சநந்தகீ என்ற ஸ்லோகம் பீஷ்மருக்கு கிருஷ்ணர் கொடுத்த போர்வீரன்தரிசனத்தைக் குறிப்பதாகும்.
இந்துக்
 கடவுளர்களில் பக்தர்கள் மனதில் தனது தீராத விளையாட்டுத்தனத்தினால்  அதிகம் குடிகொண்டிருப்பவர் கிருஷ்ண பகவான்தான்.
இந்தியா முழுவதிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
கிருஷ்ணர்
 பிறந்த தினம் அஷ்டமி. ராமர் பிறந்த தினம் நவமி.
கிருஷ்ண அவதாரம் இந்துக்களுக்கு மிக முக்கியமானதாகும். ஏனெனில் போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு, கிருஷ்ணர் கொடுக்கும் உபதேசங்களே
 இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையானது. பகவத் கீதையில் அர்ச்சுனனுக்கு அருளிய உபதேசங்களுடன் இந்திய தத்துவ சாரங்களின் அடிப்படைகளை ஒன்று கலந்து கொடுக்கப்பட்டுள்ள நூல் பகவத் கீதையாகும். 
    
        இந்த நாளில் கிருஷ்ணருக்குப் பிடித்த உணவுப் பொருட்களை செய்தும், கிருஷ்ணரின் சிலைகளை நன்றாக அலங்கரித்தும் கிருஷ்ணரை தங்கள் இல்லங்களுக்கு வரவழைக்கும் விதமாக, குழந்தையின் கால் பாதங்களை வரைந்தும் இந்துக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

கிருஷ்ணருக்குப் பிடித்த அவல் லட்டு

கிருஷ்ணருக்குப் பிடித்தமானவற்றில் அவலும் ஒன்று. அந்த அவல் லட்டை செய்வது எப்படி என்று பார்ப்போம்...

தேவையானப் பொருட்கள்

அவல் - 1 கப்
பொட்டுக் கடலை (உடைத்தக் கடலை) - 1/2 கப்
முந்திரி - 6
திராட்சை - 6
ஏலப்பொடி
 
பால் - அரை கப்
சர்க்கரை - 1 கப்
நெய்
தேங்காய் துருவல் - 2 கப்

செய்முறை

அவல், பொட்டுக்கடலை இரண்டையும் சுத்தம் செய்து தனித்தனியே வெறுமனே வறுத்து பொடித்து வைத்தக் கொள்ளவும். வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி, தேங்காய் துருவல், காய்ந்த திராட்சையை வறுத்து பொடித்துக் கொள்ளவும். சர்க்கரையையும் பொடித்து வைத்துக் கொள்ளவும்.

அகலமான பாத்திரத்தில் எல்லாவற்றையும் போட்டு ஏலப்பொடி, பால், நெய் சேர்த்து நன்கு கிளறி தேவையான அளவில் லட்டுக்களை செய்து கொள்ளுங்கள்.



Monday, 26 August 2013

மாபெரும் சக்தி உடைய மூலிகை ஆகாச கருடன் கிழங்கு


கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், கொல்லன் கோவை என வேறு பல பெயர்களும் உண்டு. இருப்பினும் "ஆகாச கருடன் கிழங்கு" என்ற பெயர்தான் முன்பு அனைவருக்கும் தெரிந்தபெயராக இருந்து வந்துள்ளது.

இம்மூலிகை காடுகள்,வனம் , மலை சார்ந்த பகுதிகளில் தன்னிச்சையாக வளரும் கொடி இனமாகும்.சுமார் 40 - 50 வருடங்களுக்கு முன்பு குருவிக்காரர்கள் காடு, மலைகளுக்கு சென்று இக்கிழங்கை சேகரித்துகொண்டு வந்து நாடு , நகரங்களில் கூவி கூவி விற்பார்கள்.

நிலத்தில் பூமியின்அடியில் விளையும் கிழங்குவகையான இம் மூலிகைகிழங்கிற்கு ஏன் ஆகாயத்தில் பறக்கும் கருடனின் பெயரை நம்முன்னோர்கள் சூட்டினார்கள்.?

பொதுவாக பூமியில் ஊர்ந்துசெல்லும் பாம்பு வகைகள்  ஆகாயத்தில் கருடன் பறந்துசெல்வதை பார்த்தால் ஓடி ஒளிந்துகொள்ளும். அதே போன்று இக்கிழங்கின் வாசனை அறிந்தாலும் அந்த இடத்தைவிட்டு உடனே அகன்றுவிடும், ஓடிவிடும்.

இம் மூலிகை கிழங்கை கயிற்றில்கட்டி வீட்டில் தொங்கவிட்டால் ஆகாயத்தில் பறக்கும் கருடனைப்போலவே தோற்றம் தரும்.

உண்மையில் ஆகாசகருடன் என்ற இம் மூலிகைக்கு மாபெரும் சக்தி உண்டு. "சாகா மூலி" என பெயரும் இதற்குண்டு. ஆம் இம் மூலிகை கிழங்கு சாகாது . இக்கிழங்கை ஒரு கயிற்றில்கட்டி தொங்கவிட்டால் காற்றில் உள்ள ஈரத்தை மட்டும் ஈர்த்து வாங்கி உயிர்வாழும் சக்திகொண்டது.முளைவிட்டு கொடியாக படர்ந்துவிடும்.

இம் மூலிகைகிழங்கிற்கு சில அமானுஷ்யசக்திகள் உண்டு. அதாவது வீட்டிற்கு ஏற்படும் திருஷ்டி, தோஷங்களை போக்கும்தன்மை கொண்டது. மேலும் எதிரிகளால் ஏவப்படும் பில்லி, சூன்யம், போன்ற மாந்திரீக எதிர்வினைகளை ஈர்த்து தன்னைத்தானே அழித்து கொள்ளும் தன்மைகொண்டது.இதனால் வீட்டில் உள்ளவர்கள் மாந்திரீக தீயவிளைவுகளில் இருந்து காக்கப்படுவர்.

ஆகாச கருடன் கிழங்கின் மருத்துவ பயன் :-

இதன் முக்கியகுணம் விஷத்தை முறிக்கும் ஆற்றல்கொண்டது. அத்துடன் இளைத்த உடலைத்தேற்றவும், உடலை உரமாக்கி சூட்டை தணிக்கும்குணம் கொண்டது. ஆனால் சித்தமருத்துவரின் மேற்பார்வையில் உண்ணுதல் வேண்டும். இது அதிக கசப்புசுவை கொண்டது.

சிறப்பாக பாம்புவிஷங்கள், தேள், பூரான் விஷங்கள் எளிதில்முறியும். பாம்பு கடித்தவருக்கு இந்த ஆகாசகருடன் கிழங்கை ஒரு எலுமிச்சை காயளவு தின்னகொடுக்க 2தடவை வாந்தியும், மலம்கழியும் உடனே விஷமும் முறிந்துவிடும்.

Saturday, 24 August 2013

வென்றார் நடிகை குத்து ரம்யா!


 கர்நாடகா மாநிலத்தின் மாண்டியா, பெங்களூர் புறநகர் லோக்சபா தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களான நடிகை குத்து ரம்யா, மற்றும் டி.கே. சுரேஷ் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
பெங்களூரு புறநகர் தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் முன்னாள் பிரதமர் தேவகவுடா மருமகளும் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மனைவியுமான அனிதா குமாரசாமி போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சி வேட்பாளராக சுரேஷ் நிறுத்தப்பட்டார்.
மாண்டியா தொகுதியில் காங்‌கிரஸ் வேட்பாளராக திரைப்பட நடிகை குத்து ரம்யாவும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் சார்பில் புட்டராஜூ போட்டியிட்டனர். தேர்தல் பிரசாரத்தின் போது நடிகை ரம்யா மீது எதிர்க்கட்சியினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். அத்துடன் அவரது வளர்ப்பு தந்தையும் திடீரென காலமானார். இதனால் கண்ணீருடனேயே அவர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
இந்த இரு தொகுதிகளிலும் கடந்த 21-ந் தேதி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்றது.
வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. முற்பகல் 11.45 மணியளவில் இரு தொகுதிகளும் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
பெங்களூர் புறநகர் தொகுதியில் சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சுரேஷ் வெற்றி பெற்றிருக்கிறார். மாண்டியா தொகுதியில் நடிகை ரம்யா 47,662 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.பியாகிவிட்டார்.


செவ்வாய் தோஷம் நீக்கும் இறைவன் பூந்தமல்லி வைத்தீஸ்வரன்


நெரிசல் மிகுந்த சென்னை மாநகரத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கும், திருவள்ளூருக்கும் பயணிக்கும் அனைவரும் பூந்தமல்லியைக் கடக்காமல் இருக்க முடியாது. ‘பூவிருந்தவல்லிஎன்ற அழகிய பெயரைத் தாங்கிய இந்தப் புராதன நகரத்தில் உறையும் சிவன், வைத்தீஸ்வரன் என்னும் திருநாமத்தைத் தாங்கியிருக்கிறார்மனதுக்கு இனிமையான சூழலையும், விசாலமான பிரகாரத்தையும் கொண்ட இந்த திருத்தலத்தைஉத்தர வைத்தீஸ்வரன் கோயில்என்று அழைக்கிறார்கள்.

இந்த ஆலயத்தின் மூலவராக வைத்தீஸ்வரனும், தையல்நாயகி அம்மனும் வீற்றிருக்கிறார்கள். இந்த தலத்தில் அங்காரகன் (செவ்வாய்) வருகை தந்து, சிவனை வழிபட்டதாகப் புராணம் உண்டு. இதற்கு அடையாளமாக அங்காரகனின் பாதம் காணப்படுகிறது. இந்த தலத்திற்கு வந்து வழிபட்டால் செவ்வாய் தோஷம் தீரும் என்று நம்பப்படுகிறது. மேலும் செவ்வாய்க்கிழமைகளில் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. சென்னையில் உள்ள நவக்கிரகத் தலங்களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது.
கோயில் கோபுரம் கிழக்கு நோக்கியும், கோயிலும், மூலவரும் வடக்கு நோக்கியும் இருக்கின்றன. ஆலயத்தின் வடக்கு பிரகாரத்தில் பாண லிங்கம் ஒன்று வாசலைப் பார்த்து நிற்கிறது. உள்பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர், துர்க்கை, தக்ஷிணாமூர்த்தி, பிரம்மா, சுப்பிரமணியர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. ஆதி சங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ சக்கரம், சுப்பிரமணிய சக்கரம், சண்முக சக்கரம் ஆகிய மூன்று சக்கரங்களும் காட்சியளிக்கின்றன. 

கோயில் பிரகாரத்தில் உள்ள அழகிய சிற்பங்கள் ஆலயத்தின் ஆயிரம் ஆண்டுப் பழமையைப் பறைசாற்றுகின்றன. இங்கு தாழ பனை மரம் தல விருட்சமாகும். ஆலயத்தின் கிழக்கு வாயிலில் வினை தீர்த்தான் குளம் உள்ளது.

மாசி மாதத்தில் 21 முதல் 25ஆம் தேதி வரை சூரிய வெளிச்சம், வைத்தீஸ்வரன் மீது நேரடியாக விழுவது கண்கொள்ளாக் காட்சியாகும்சிவராத்திரி, பிரதோஷம், மாதப் பிறப்பு ஆகிய நேரங்களிலும் பக்தர்கள் திரண்டு வைத்தீஸ்வரனை வழிபடுகிறார்கள். அமைதியான முறையில் ஆண்டவனை துதித்து அருள்பெற வைத்தீஸ்வரனை வணங்க வாருங்கள்
.