Monday 4 November 2013

கண் பார்வையை எப்படி பாதுகாப்பது-?


      
     உடலில் முக்கிய பாகங்களில் ஒன்று கண்கள். அந்த கண்களை சரியாக பராமரிக்க வேண்டும். கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்க தினமும் குறைந்தது 8 மணிநேரம் தூங்க வேண்டும். மேலும் கண்களுக்கு குளிர்ச்சி தரக்கூடிய கீரை, காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

* போதிய வெளிச்சத்தில் எழுதுதல் மற்றும் படித்தல் வேண்டும். 

* கண்களில் தூசி விழுந்தால் கைகளால் கசக்க கூடாது. தண்ணீரால் கண்களை சுத்தம் செய்ய வேண்டும். 

* கம்ப்யூட்டரில் பணி செய்யும் போதும், டிவி பார்க்கும் போதும் அடிக்கடி கண்களை மூடி திறக்கவும். அதாவது கண்களை சிமிட்டவும். இவ்வாறு செய்வதால் கண்களுக்கு ஏற்படும் சோர்வு நீங்கும். 

* பால், முட்டை, கீரை, பழங்கள் போதுமான அளவு சாப்பிடவும். 

* வாகனம் ஓட்டும் போது (கண்ணாடி அணியாதவர்கள்) பவர்லெஸ் கண்ணாடி அணியுங்கள். 



* 40 வயதுக்கு உட்பட்டவர்கள் ஓராண்டுக்கு ஒரு முறையும், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆறு மாதத்துக்கு ஒரு முறையும் கண்களை பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம். 

* நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் ஆறு மாதத்துக்கு ஒரு முறை கட்டாயம் கண்களை பரிசோதனை செய்யவும்.

No comments:

Post a Comment