· 100-கிராம் கொள்ளை
சுத்தம் செய்து ரசம் வைத்து அதனுடன் இந்துப்பு கலந்து குடித்துவர சொல்லிக்கொள்ளும்படி
உடல் மெலியும். உடல் பலமும் கிடைக்கும்.
· இலந்தை இலைகளை எடுத்து
சுத்தம் செய்து மைபோல அரைத்து, அரிசி களைந்த நீரில் கலந்து கஞ்சி போல காய்ச்சி உள்ளுக்கு
அருந்தி வரவும்.
· கல்யாண முருங்கை
இலைச் சாறு இரண்டு டீஸ்பூன் காலை மாலை சாப்பிட உடல் எடை குறையும்.
· 25-கிராம் சோம்பு,
5-கிராம் கடுக்காய் தூள் சேர்த்து மண் சட்டியில் கால் லிட்டர் தண்ணீர் விட்டு 50-மில்லியாகும்
வரை காய்ச்சி வடிகட்டி 50-மில்லி சுத்தமான தேன் கலந்து காலை மாலை குடித்துவர ஊளைச்
சதை குறையும்.
· நில ஆவரை இலையை
நிழலில் உலர்த்தி இடித்துத் தூளாக்கி துணியில் சலித்து ஒரு ஜாடியில் போட்டு வைத்துக்கொண்டு
தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் எடை குறையும்.
No comments:
Post a Comment