Wednesday, 30 October 2013

நத்தை மசாஜ்!

        


    சீனா, ஜப்பானை தொடர்ந்து, தற்போது ரஷ்யாவிலும் மசாஜ் கலாசாரம் கொடி கட்டி பறக்க துவங்கி விட்டது. மசாஜ் செய்வதற்கு, எந்தப் பொருளை பயன்படுத்துவது என்பதில் தான், இந்த நாடுகளுக்குஇடையே, தற்போது கடும் போட்டி.

    பழங்கள், காய்கறிகள், மூலிகைகளை தொடர்ந்து, சிறிய உயிரினங்களையும், மசாஜ் செய்வதற்கு பயன்படுத்த துவங்கியி ருக்கின்றனர். அதிலும், ரஷ்யாவில் ஒரு படி மேலே போய், சிறிய அளவிலான நத்தைகளை, முகத்தில் விட்டு, மசாஜ் செய்கின்றனர்.




    ரஷ்யாவின் கிராசனோயக்ஷா நகரில், இதற்கென்ற பிரத்யேகமான, “நத்தை மசாஜ் கிளப்’ உள்ளது. இங்கு வரும் வாடிக்கையாளர்களை, படுக்க வைத்து, அவர்களின் முகங்களில், சிறிய அளவிலான நத்தைகளை நடக்க விடுகின்றனர். அந்த நத்தைகளும், மூக்கு, கன்னம், கண், நெற்றி என, வீதி உலா போவது போல், முக உலா போகின்றன. இந்த நத்தை மசாஜ் செய்வதற்காக, வாடிக்கையாளர்களிடம், கணிசமான ஒரு தொகையையும் கறந்து விடுகின்றனர்.

    “இந்த நத்தை மசாஜால், முகத்தில் உள்ள தோல்கள் புத்துயிர் பெறுகின்றன. முகச் சுருக்கங்கள், முகத்தில் நீண்ட நாள் வடுக்கள், தழும்புகள் ஆகியவை மறைந்து, முகம் புதுப் பொலிவு பெறுகிறது…’ என்கின்றனர், இந்த கிளப்பை நடத்துவோர்.

No comments:

Post a Comment