ஆண்களின் ‘ஒய்’ குரோமோசோம் பாதிக்கப்பட்டுள்ளது,
எனவே எதிர்காலத்தில் ஆண்குலமே அழிந்துபோகும் என்று அதிர்ச்சியூட்டுகிறார்கள் விஞ்ஞானிகள்.
பூமியில் எக்காலத்திலும், ஆண்களுக்கும் பெண்களுக்கும்
இடையிலான போட்டி, ஆதிக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கடைசியில் இதில் வெல்லப்போவது
பெண்கள்தான், புவியில் நிலைத்திருக்கப்போவது பெண்களே என்கிறார், ஆஸ்திரேலியாவின் முன்னணி
பெண் விஞ்ஞானிகளில் ஒருவரான பேராசிரியை கிரேவ்ஸ்.
ஆண் குரோமோசோம் எனப்படும் ‘ஒய்’ குரோமோசோம்களுக்குள்
உள்ளேயே உள்ள அழியும் தன்மையால் ஆண்கள் நிரந்தர அழிவை நோக்கிச் சரிந்து கொண்டிருக்கிறார்கள்
என்கிறார் கிரேவ்ஸ்.
அதற்கு இவர், பெண் குரோமோசோமான ‘எக்ஸ்’ குரோமோசோமிலும்,
ஆண் குரோமோசோமான ‘ஒய்’ குரோமோசோமிலும் உள்ள ஜீன்களின் எண்ணிக்கையை ஆதாரமாகச் சுட்டிக்
காட்டிகிறார். எக்ஸ் குரோமோசோமில் சுமார் 1000 ஆரோக்கியமான ஜீன்கள் உள்ளன.
பெண்களிடம் இரண்டு ‘எக்ஸ்’ குரோமோசோம்கள் இருக்கின்றன. ஆண்களிடம் இருப்பது ஓர் ஒற்றை எக்ஸ் குரோமோசோமும், ‘பலவீனமான’ ஒரு ‘ஒய்’ குரோமோசோமும்தான்.
நவீன ஆணிடம் உள்ள ‘ஒய்’ குரோமோசோமில் சுமார்
100 ஜீன்கள்தான் உள்ளன. ஆண்களும் ‘ஒய்’ குரோமோசோமில் பெண்களைப் போல ஆயிரத்துக்கும்
அதிகமான ஜீன்களைக் கொண்டிருந்தார்கள்தான்.
ஆனால் லட்சக்கணக்கான ஆண்டுகளில் ஆண்களிடம்
ஜீன்களின் என்ணிக்கை படிப்படியாக குறைந்து தற்போது இந்த நிலையில் நிற்கிறது. ஆண் குரோமோசோமில்
உள்ள ஜீன்களில், கரு ஆணா, பெண்ணா என்பதைத் தீர்மானிக்கும் ‘மேல் மாஸ்டர் ஸ்விட்ச்’
எனப்படும் ‘எஸ்.ஆர்.ஒய்’ ஜீனும்
அடக்கம்.
பெண்களின் எக்ஸ் குரோமோசோம் ஜோடியாக உள்ளதால்
அதனால் பழுதுகளைச் சரிசெய்துகொள்ள முடிகிறது. ஆனால் ஜோடியில்லாத ஆணின் ‘எக்ஸ்’ குரோமோசோம் பழுதுகள், குறைகளை சரிசெய்யத் தவிக்கறிது.
கடைசியில் அழிகிறது.
ஆண்களின் ஒய் குரோமோசோமில் தற்போது எஞ்சியுள்ள
ஜீன்களும் ‘குப்பைகள்’ தான் என்கிறார்,
பேராசிரியை கிரேவ்ஸ்.
“இது ஒரு மோசமான சூழ்நிலை. பரிமாண விபத்து.
ஆண்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள்!” என்று அனுதாபம் காட்டுகிறார் கிரேவ்ஸ்.
ஆனால் ராபின் லாவல் பாட்ஜ் போன்ற வேறு சில
விஞ்ஞானிகள், ஆண்கள் அப்படியொன்றும் பீதியடையத்தேவையில்லை என்று தெம்பூட்டுகிறார்கள்.
ஆம், ஆண் குழந்தைக்குக காரணமான ‘ஒய்’ குரோமோசோம் முற்றிலுமாக அழிந்து போவது என்றாலும்
50 லட்சம் ஆண்டுகள் ஆகுமாம். ஆக ஆண்கள் இப்போதைக்கு நிம்மதி கொள்ளலாம்!
No comments:
Post a Comment