Friday 18 October 2013

மிளகு ரகசியம்

தேரையர் என்கின்ற சித்தர் அருளிய எளிய முறை வைத்திய ரகசியம்.

" மரிசமொவ் வொன்றாரு வார மட்டதிக
வரிசையாய்த் தினமுமோர் மண்டலங் காலமே
யுண்டிடு தேசுடனுரமிகு பசியுங்
கொண்டிடு மதன்பொடி குழைத்து நெய்யுடனெ
யுண்டிடத் தொனிதரும் மோதுபிப் பொருளொடக்
காரமுங் குழைத்துணக் கடும்பசி யழலுறும்
பாரிய நோய்களும் பறக்கும் தொன்றையும்
குடி நீர் ரட்டுணக் குலவுமுத் தோடமுங்
கொடும்பிணி யாவும் குடிகெட்டோடுமே "
   இந்த மிளகை 48 நாட்கள் (ஒரு மண்டலம்) முறையாக உண்டு வந்தால் உடல் கற்பமாகும் என்கின்ற வகையில் தேரையர் கூறுகின்றார். இது நடைமுறையில் சாத்தியமா என்று ஆராய்ந்துப் பார்த்தால் உண்மைதான். அடியேன் பல வருடங்களுக்கு முன்பதாக இதை ஒரு பெரியவர் மூலமாக அறிந்து செய்துப்பார்த்தேன் என் உடலிலேயே பல மாற்றங்கள் நிகழ்ந்தது. ஆனால் இதை பின்பற்றுவதற்கு சில விதிகள் உண்டு அதை முறையாக அனுசரித்தால் பலன் அபாரம். 


   இந்த மிளகை இளம் வறுவலாக வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு நெய்யுடன் ஒரு சிட்டிகை அதாவது உங்களின் பெருவிரல் ஆள்காட்டி விரல் இவற்றால் எடுத்தால் சிட்டிகை எனப்படும் இது சித்த மருத்துவ அளவு வகைகளில் ஒன்றாகும். இப்படி காலை உணவுக்கு முன் சாப்பிட்டு வந்தால் தொண்டையில் ஏற்படும் கரகரப்பு, சளி தொல்லைகள் மறைந்து குரலில் இனிமை உண்டாகும்.
இதை பனக்கற்கண்டு அல்லது வெல்லம் இவைகளுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்பந்தமான நோய்களான தலைவலி, நெஞ்சு எரிச்சல், அஜீரணம்,தோல் நோய்கள் இவைகள் சரியாகும். பொதுவாக மிளகைக் குடி நீராக காய்ச்சிப் பருகி வந்தால் ரத்தம் சுத்தியாகும், த்ரிதோசங்கள் நீங்கும் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் கூடும், ஆரோக்கியமான வாழ்க்கை உண்டாகும்.

சித்தர்கள் வாக்கு பொய்ப்பதில்லை. செய்து பலன் காணுங்கள்.....

No comments:

Post a Comment