Wednesday, 30 October 2013

தீபாவளி ஏன் கொண்டாடணும்?

        தீபாவளி பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் உற்சாகமாக கொண்டாடுகின்றனர்.

        நரகாசுரன் என்ற அசுரனை கிருஷ்ணர் அழித்த நாள் என்று கூறப்பட்டாலும் ராமர் நாடு திரும்பிய நாள் என்றும்... லட்சுமி பூஜைக்கு உரிய நாள் என்றும் கூறி இறைவனை வணங்குகின்றனர்.

     இந்துக்கள் மட்டுமல்லாது ஜைனர்களும், சீக்கியர்களும் கூட தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடுகின்றனர். பட்டாசு வெடிப்பதும் பலகாரம் சாப்பிடுவது மட்டுமல்ல அன்றைய தினம் என்னென்ன செய்யலாம்... எவ்வாறு பண்டிகையை கொண்டாடலாம் என்றும் கூறியுள்ளனர் முன்னோர்கள். ஏன் தீபாவளி பண்டிகை கொண்டாட வேண்டும் என்றும் பட்டியலிட்டுள்ளனர் .

நரக சதுர்த்தி
     ஐப்பசி மாத அமாவசைக்கு முதல்நாள் நரக சதுர்த்தி தினம் தீபாவளிப் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

லட்சுமி பூஜை
    செல்வத்தின் திருமகளாம் லட்சுமி அமாவாசை தினத்தில் அவதரித்தார் என்கின்றன புராணங்கள் இதனால் அன்றைய தினம் செல்வத்தினை வைத்து லட்சுமி பூஜை செய்கின்றனர்.

கேதார கௌரி விரதம்
    ஸ்கந்த புராணத்தின் படி சக்தியின் 21 நாள் கேதார கௌரி விரதம் முடிவுற்றது இந்த நாளில்தான். விரதம் முடிந்த பின்னர் சிவன் சக்தியை தன்னுள் ஒரு பாதியாக ஏற்று அர்த்த நாரீஸ்வராக உருவமெடுத்தார் என்கின்றன புராணங்கள்.

லட்சுமியை காத்த விஷ்ணு
   வாமன அவதாரத்தின் போது பூமியில் சிறை வைக்கப்பட்டிருந்த மகாலட்சுமியை விஷ்ணு விடுவித்தார் என்கின்றன புராணங்கள்.

நரகாசுர வதம்
     நரகாசுர வதம் கிருஷ்ணாவதாரத்தில் நரகாசுரனை அழித்தார் கிருஷ்ணர். இந்த வெற்றியை புத்தாடை அணிந்து தீபங்கள் ஏற்றி கொண்டாடுகின்றனர்.

பாண்டவர்கள்
       12 ஆண்டுகள் வனவாசம் முடிந்து பாண்டவர்கள் நாடு திரும்பிய நாள். இந்த நாளை தீபம் ஏற்றி பாண்டவர்கள் கொண்டாடினார்களாம்.

ராமயாணத்தில்
      14 ஆண்டுகாலம் வனவாசம் சென்ற ராமன், சீதா, லட்சுமணன் ராவண வதம் முடிந்து நாடு திரும்பிய நாளில் தீபங்கள் ஏற்றி மக்கள் வரவேற்றனராம்.

விக்ரமாதித்தன்
     உஜ்ஜயினியை ஆண்ட மன்னன் விக்ரமாதித்தன் பட்டம் சூட்டிய நாள் தீபாவளியாக கொண்டாடப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

சமணர்கள்
    தீபாவளி மகாவீரர் நிர்வாணம் அடைந்த தினத்தை நினைவு கூறும் வகையில் இத்தினத்தை சமணர்கள் கொண்டாடுகின்றனர்.

சீக்கியர்கள்
    1577ம் ஆண்டு நரக சதுர்த்தி தினத்தன்று பொற்கோவில் கட்டுமானப் பணிகள் துவங்கியதை சீக்கியர்கள் கொண்டாடுகின்றனர்.



No comments:

Post a Comment