*இருக்கன்குடி மாரியம்மன் சிவாம்சம் கொண்டவள். அதனால் கருவறையில் தேவிக்கு முன் சிங்கத்திற்குப் பதிலாக நந்தி வீற்றருள்கிறார். கண் நோய் உள்ளோர் தேவிக்கு அபிஷேகம் செய்த நீரால் கண்களைக் கழுவ நோய் நீங்குகிறது.
*மதுரை
சோழவந்தானில் உள்ளது ஜெனகை மாரியம்மன். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பிரசாதமான தீர்த்தத்தை அருந்த நோய் மறைகிறது.
*மதுரை-எல்லீஸ்
நகரில் அருளும் தேவி கருமாரியம்மனை அனைத்து மதத்தினரும் வழிபட்டு நலம் பெறுகிறார்கள்.
*புதுக்கோட்டை-நார்த்தாமலையில் முத்து மாரியம்மன் திருவருள் புரிகிறாள். இங்கு அக்கினி காவடி எடுத்தால் தீராத நோய் தீர்கிறது. மழலை வரம் வேண்டுவோர் கரும்புத் தொட்டில் கட்டுகிறார்கள்.
*நீலகிரி, குன்னூரில் தந்திமாரியம்மன் அருளாட்சி புரிகிறாள். தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டால் இந்த மாரியிடம் மனமுருக வேண்டிக்கொள்ள, உடனே பெருமழை பெய்கிறது.
*ஊட்டியில்
மகாமாரி, மகாகாளி இருவரும் ஒரே கருவறையில் அருள்கின்றனர். இங்குள்ள காட்டேரியம்மன் சந்நதியில் மந்திரித்துத் தரும் முடிக்கயிறு, தோஷங்கள், நோய்கள், பில்லி சூனியம் விலக்குகின்றனவாம்.
*நாமக்கல்-ராசிபுரத்தில் நித்யசுமங்கலி மாரியம்மனை தரிசிக்கலாம். வருடம் முழுதும் அம்பிகையின் எதிரே சிவாம்சமான கம்பம் நடப்பட்டிருப்பதால் இப்பெயர். ஐப்பசி மாதம் புதுக் கம்பம் நடும்போது தயிர்சாதம் நிவேதிப்பர். அந்த தயிர்சாத பிரசாதத்தை உண்பவர்களுக்கு அடுத்த வருடமே மழலைப் பேறு கிட்டுகிறது.
*கோவையில்
ஆட்சிபுரியும் தண்டு மாரியம்மன், குடும்ப வளம் பெருகவும் தீராத நோய்கள் தீர்ந்திடவும் அருள்கிறாள்.
*சமயபுரம்
மாரியம்மன், மாசி மாதம் தன் பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சைப்பட்டினி விரதம் இருப்பவள். தாலிவரம் வேண்டும் பெண்கள் தங்கள் தாலியை நேர்த்திக்கடனாகச் செலுத்துகிறார்கள்.
*திருச்சி
மணப்பாறையிலுள்ள மாரியம்மன் கோயிலில் திருமணத்தடை உள்ளவர்கள் மஞ்சள் கயிறு வாங்கி அம்மன் சந்நதியின் பின்னே உள்ள வேப்பமரத்தில் கட்டி நேர்ந்து கொள்ள, விரைவில் மணவாழ்வு கிட்டுகிறது.
*கோடீஸ்வரி
மாரி என்ற கோட்டைமாரி திருப்பூரில் அருள்கிறாள். கருவறையில் அம்மனின் இரு புறங்களிலும் லட்சுமி, சரஸ்வதி இருவரும் அம்மனைப் போலவே சுயம்புவாக எழுந்தருளியிருக்கிறார்கள். இந்த அன்னையிடம் பூவாக்கு கேட்பது இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பு.
*தேனி-பெரிய
குளத்தில் உள்ள கௌமாரியம்மனுக்கு விவசாயம் செழிக்க தானியங்கள், காய்கறிகள், கனிகளைப் படைக்கின்றனர்.
*கரூர்
மகா மாரியம்மன், வழக்கு, வியாபார சிக்கல் நீங்க, காணாமல் போன பொருட்கள் திரும்பக் கிடைக்க அருள்கிறாள்.
*திண்டுக்கல்-கோட்டை மாரியம்மனை பிரார்த்தித்து உப்பையும் மஞ்சளையும் கொடிமரத்தில் சமர்ப்பிக்க, வேண்டுதல் நிறை
வேறுகிறது.
வேறுகிறது.
*தஞ்சை-புன்னைநல்லூர் மாரியம்மன், துளஜா மன்னர் மகளின் கண் நோய் தீர்த்தவள். புற்றுருவாய் இருந்த இந்த அம்மனுக்கு யந்திரப் பிரதிஷ்டை செய்தவர் நெரூர் சதாசிவப் பிரம்மேந்திரர்.
*காரைக்குடி, முத்துப்பட்டினம், மீனாட்சிபுரத்திலுள்ள முத்து மாரியம்மனுக்கு தக்காளிப் பழத்தை காணிக்கையாக்கி, தக்காளி பழச்சாறால் அபிஷேகம் நடத்தப்படுகிறது.
*கோவை-
உடுமலைப்பேட்டை மாரியம்மன் ஆலயத்தில், மார்கழி திருவாதிரையன்று 108 தம்பதியருக்கு மாங்கல்ய பூஜை செய்யப்பட்டு சுமங்கலிகளுக்கு மஞ்சள் கயிறு வழங்கப்படுகிறது.
*
ஈரோடு- பெரிய மாரியம்மன், வெப்பநோய்களை நீக்குகிறாள். அம்மை நோய் கண்டவர்களை அன்னை குணப்படுத்துகிறாள்.
*
கோபிசெட்டிபாளையம் சாரதா மாரியம்மன் ஆலயத்தில் மண் சட்டியில் நெருப்பை ஏந்தி பூசாரி வருவதை தரிசித்தால் வாழ்வு வளம் பெறுவதாக நம்பிக்கை நிலவுகிறது.
*
ஈரோடு-கருங்கல்பாளையம், சின்ன மாரியம்மன் மழலை வரம் அருள்கிறாள். இத்தல விபூதி பிரசாதத்தை நெற்றியில் பூசியும் தண்ணீரில் கரைத்து அருந்தவும் நோய்கள் நீங்குகின்றன.
No comments:
Post a Comment