Tuesday, 17 September 2013

காடு அழிந்தால்….

ஒரு வனப்பகுதியில் 40 ஏக்கர் நிலம் அழிகிறது என்றால் ஆயிரத்து 500 வகை பூக்கும் தாவர இனங்களும், 700 மர வகைகளும், 400 பறவை இனங்களும், 150 வகை பூச்சிகளும், 100 வகை ஊர்வனவும், 60 வகை நீர் நிலவாழ் உயிரினங்களும் அழிந்து விடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் மிகப் பெரிய அளவில் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறதாம்.

     இத்தகைய அழிவால் மனித சமூகத்திற்கு ஈடு செய்ய முடியாத அளவுக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்படும். எனவே வள்ளல் போல் வாரி வழங்கும் இயற்கையின் வளங்களை, வனங்களை அழிக்காமல் காப்பது அனைவருடைய கடமையாகும். இயற்கையை பாதுகாப்போம். எதிர்காலத் தலைமுறையும் வாழ வகை செய்வோம்.



No comments:

Post a Comment