Thursday, 26 September 2013

கே.எஃப்.சி, மெக்டொனால்ட் அபாயம்!!!

      

      துரித உணவுகள் என்பவை நவீன வாழ்க்கையில் தற்போது தவிர்க்க முடியாத ஒரு அம்சமாக மாறி வருகிறது!

        மெக்டொனால்ட்ஸ், கேஎஃப்சி, பர்கர் கிங், சப்வே, டாமினோஸ், பீட்சா ஹட், பீட்சா கார்னர், டாகோ பெல் என்று துரித உணவகங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது
இவற்றில் அதிக அளவு

 
 1.கலோரி
2.கொழுப்பு
3.இனிப்பு
4.உப்பு சோடியம்
5.மாவுச்சத்து
6.புரதம்
காணப்படுவதே இவற்றை நாம் உண்ணக்கூடாது என்பதற்கான காரணங்கள்.
மெக்டொனால்டின்- டீலக்ஸ் பிரேக்ஃபாஸ்ட்:.
1220 கலோரி சத்து இதில் கொழுப்பு 550 கலோரி அடக்கம்!!
K F C -உருளைக்கிழங்கு மசித்த உணவு the mashed potato Bowl with Gravy- கலோரி சத்து 690 ,31 கிராம் கொழுப்புச்சத்து.
பிசா ஹட்-Stuffed Crust Meat over'spie- இதில் இரண்டு ஸ்லைசில் 1000 கலோரி சத்து,82கிராம் கொழுப்பு உள்ளது.
இத்தகைய உணவுகளால் என்ன ஏற்படுகிறது?
1.உடல் எடை அதிகரிப்பு
2.சர்க்கரை நோய்
3.மார்பகப்புற்று நோய்
4.இதய நோய்கள்
5.இடத்த அழுத்தம்
கடந்த 30 வருடங்களில்
1. எடை அதிகமான குழந்தைகள் 30% அதிகரித்துள்ளனர்.
2.60% அமெரிக்கர்கள்,13% குழந்தை,இளைஞர்கள் எடை அதிகம் ஆகியுள்ளனர்.
3.கடந்த வருடம் 115 பில்லியன் டாலர்கள் துரித உணவுக்காக அமெரிக்கர்கள் செலவிட்டுள்ளனர். இது அவர்கள் கார் வாங்க,கம்புயூட்டர் வாங்க,உயர்படிப்புக்கு செலவு செய்த தொகையைவிட அதிகம்!!
கற்றுக்கொள்ளும் திறன் குறைவு
புத்திசாலித்தனம்
1கிலோ கிரில் இறைச்சி =600 சிகரெட்டுகள்
1 கிரில் ட்ரம்ஸ்டிக்= 80 சிகரெட்டுகள்
இந்த துரித உணவுகள் மூளையைத் தூண்டி எண்டார்பின்,என்கெபலின் களின் சுரப்பை அதிகரிப்பதால் அந்த உணவுகளிம் மேல் அதிக விருப்பமும், அதை உண்ண அதிகத்தூண்டுதலும் ஏற்படுகிறதாம்.
இதற்கெல்லாம் யார் காரணம்?
1.பெற்றோர் இருவரும் வேலைக்குச்செல்வதால் சமைக்க இயலாமை.
என்ன செய்ய வேண்டும்?
1.உணவகங்கள் சமுதாய சிந்தனையுடன் தங்கள் உணவுகளைச் சமைக்க வேண்டும்.
2.கொழுப்பு குறைந்த மாமிசம்,
2.முழுதானிய கோதுமை ரொட்டி,
3.கொழுப்பு குறைந்த வறுவல்கள்,
4.இனிப்பு குறைவான பானங்கள்,
5.அதிக காய்கறிகள் கொண்ட உணவுகள்
ஆகியவற்றை துரித உணவகங்கள் செய்ய வேண்டும்..

கெண்டகி வறுகோழி- ஒரு அதிர்ச்சி தகவல்!!

      கெண்டகி வறுகோழி உண்ணாதவர்கள் இருக்க முடியாது. மேலை நாடுகளில் இது மிகவும் பிரபலமானது.தற்போது நம் ஊரிலும் அதிகம் கடைவிரிக்க ஆரம்பித்து விட்டார்கள் இந்நிறுவனத்தார்.
     புது ஹாம்ப்சயர் பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வில் கனவிலும் நினைக்கமுடியாத முடிவுகள் வந்துள்ளன!
     என்னவெனில் அவர்கள் சாதாரண கோழிகளை உபயோகிப்பதில்லை.
அவர்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உயிரிகளையே உபயோகிக்கிறார்கள். ஆதலால் அவற்றை கோழி என்று இனி அழைக்கப்போவதில்லை.
      இவர்கள் உருவாக்கும் கோழிகளுக்கு அலகு,இறகுகள்,கால்கள் கொஞ்சம்தான் இருக்கும். கறி அதிகம் கொடுக்கவேண்டும் என்பதற்காக எலும்பும் மிக மெலிவாக இருக்கும்.
   அவற்றின் உடலில் பொருத்தப்பட்டுள்ள குழாய்களின் வழியே அவற்றுக்குத்தேவையான சத்து அளிக்கப்படுகிறதாம். இவ்வகை உயிர் உருவாக்கும் சிலவும் குறைவாம்!!

அந்தவகைக்கோழிகளின் சில படங்கள் கீழே...

இந்த வகைக்கோழிகள் இனப்பெருக்கம் செய்யாது. இறகுகள் இல்லாததால் சூரிய வெளிச்சத்தில் பாதிக்கப்படும். மேலும் தொற்று நோய்களும் எளிதில் தாக்கும் என்று கூறுகிறார்கள்.

    அமெரிக்க உணவு கட்டுப்பாட்டுக்கழகம் இதைகோழிஎன்று அழைக்கக்கூடாது என்று கூறியுள்ளது!!

நல்லா யோசிங்க... கெண்டகி வறுவல் உண்ணும்முன்...

No comments:

Post a Comment