Thursday, 27 February 2014

அகத்திக் கீரையீன் நன்மைகள்.....

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு மருந்திடுதல் எனும் ஒரு பலக்கம் தமிழ் மக்களை ஆட்டி வந்திருக்கிறது, கணவனின் அன்பு தொடர மனைவியும், மனைவியின் அன்பு தொடர கணவனும்இந்த மருந்திடுதலை பயன் படுத்தினர். உள்ளுக்குல் ஒரு சில கூட்டு மருந்துகளை சேர்த்து கொடுத்து விட்டால் அதை அருந்தியவர் கொடுத்தவரிடம் தொடர்ந்து அன்புடன் இருப்பார் என்பது ஒரு நம்பிக்கை .அத்தகைய மருந்திடுதல் எனும் தோஷத்தை நீக்கும் சத்தி அகத்திக்கு உண்டு .
அகத்திக் கீரையை உண்டால் உணவு எளிதில் ஜீரணமாகும். பித்த தொடர்பான நோய்கள் நீங்குகும், வாரத்துக்கு ஒரு முறையேனும் தவறாமல் அகத்தி கீரையை சமைத்து சாப்பிடடால் தேகத்தில் உஷ்ணம் தணியும் கண்கள் குளிர்ச்சி பெறும். குடல் புண் ஆறும் சிறு நீர் மற்றும் மலம் தாரளமாக கழியும். பித்து எனும் மனக் கோளாறும் நீங்கும்,
அகத்தி கீரை வயிற்றுப் புண் (அல்சர்) என்னும் நோயைக் குணப்படுத்தும் . இதற்கு அகத்திக்கீரையை நன்றாக சுத்தம் செய்து நான்குபங்கு சின்ன வெங்காயம் சேர்த்து அகத்திக்கீரை சூப் தயாரித்து தினசரி ஒரு வேளை குடிக்கலாம்.
அகத்தி கீரையையும் மருதாணி இலையையும் சம அளவில் எடுத்து நன்கு அரைத்து கால் வெடிப்புகளில் பற்றுப்போட்டால் வெடிப்புகள் மறையும்.
அகத்தி கீரை சாற்றை சேற்று புண்களில் தடவி வர சேற்று புண்கள் விரைவில் ஆறிவிடும். உடம்பில் காண படும் தேமலுக்கு அகத்தி கீரையீன் இலையை தேங்கா எண்ணெய்யில் வதக்கி, அதை விழுதாக அரைத்து பூசி வந்தால் தேமல் முற்றிலுமாக மறையும்.
 அகத்தி கீரையை சாம்பாரில் இட்டும், துவட்டல் கறியாக சமைத்தும் சாப்பிடலாம்.

     அகத்தி கீரையை ஏகாதசி அன்று விரதமிருந்த பிறகு துவாதசியன்று உணவில் அகத்தி கீரைஉடன் நெல்லிக்காயையும் சேர்த்துக் கொள்வது சிறப்பு, எதையும் அர்த்ததுடன் தான் நம் முன்னோர்கள் வகை படுத்தியுள்ளனர். நாம் அதை மதித்து நடக்க வேண்டும்,
அகத்தி கீரைக்கு எல்லா மருந்துகளின் வீரியத்தையும் முறிக்கும் சக்தி உண்டு .எனவே சித்த மருந்துகள் சாப்பிடும்போது இதைச் சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும்.
வாரம் ஒரு முறை மட்டுமே அகத்தியை உபயோகிக்க வேண்டும் .அதிகம் உபயோகித்தால் சொறி சிரங்கு வரும் .
அகத்தி ஆயிரம் காய்த்தாலும் புறத்தி புறத்தியேஎன்று ஒரு பழமொழி அகத்தியைப் பற்றிக் கூறப்படுகிறது.
மருந்திடுதல் போகுங்காண் வங்கிரந்தி வாய்வாம்
திருந்த அசனம் செரிக்கும்- வருந்தச்
சகத்திலெழு பித்தமது சாந்தியாம்
நாளும் அகத்தியிலை தின்னு மவர்க்கு."      அகத்தியை போற்றும் பாடல்
            அகத்தியை அகத்தீஸ்வரனாகவே காணுங்கள். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அகத்தீஸ்வரம் எனும் ஊரில் அருள்பாலித்து கொண்டிருக்கும் அகத்தீஸ்வரன் மற்றும் அமுதவல்லித் தாயாரை ஒரு முறை தரிசித்து வாருங்கள்.

அகத்தியமுனிவர் தன் மனைவியுடன் (லோகமுத்திரை) இந்த ஆலயத்துகு வந்து எம்பெருமானை தரிசித்து பாக்கியம் பெற்றார் .

1 comment: