Saturday, 14 December 2013

லஞ்சம், ஊழலை ஒழிக்க விருப்பமா! !

பொதுவாகவே நாம் எங்கு சென்றாலும் அங்கு முதலில் இருப்பது லஞ்சம் தான் இதை ஓழிக்க முடியாத! ஏன் முடியாது! என்று பேசுபவர்கள் இருக்கதான் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் வீட்டில் மின்கம்பம் அறுந்து விட்டால் முதலில் லஞ்சம் கொடுப்பது அவர்களாகவே இருக்கிறார்கள். இதை மாற்ற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு இந்த பதிவை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன் இதை அனைவரும் பின்பற்றினால் நாமுமம், நம் ஊரும், நாடும் வளமுள்ள நாடாக மாறும். அனைவரும் பின்பற்றுக…. நன்றி வணக்கம்.

லஞ்சம், ஊழல் குறித்து, மொபைல் போன், கணினி மூலம் பொதுமக்கள் எஸ்.எம்.எஸ்., புகைப்படம், வீடியோக்களை அனுப்பும், விஜிலென்ஸ் திட்டத்தை, மத்திய கண்காணிப்பு ஆணையம், தமிழகத்தில் அறிமுகம் செய்துள்ளது.
லஞ்சம், ஊழல் குறித்து கடிதம் மூலம் புகார் அனுப்புவதில், பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இதைக் கருத்தில் கொண்டு, மொபைல் போன், கணினி மூலம், எஸ்.எம்.எஸ்., போட்டோ, வீடியோ ஆதாரங்களையும் அனுப்பும் வகையில், “விஜ்என்ற புதிய திட்டத்தை, மத்திய கண்காணிப்பு ஆணையம், கொண்டு வந்துள்ளது.


ஊழலை ஒழிக்க, 92231 74440 அல்லது, 51964 என்ற எண்ணிற்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பினால், மொபைல் போனுக்கு, விஜ்- மென்பொருள் அனுப்பப்படும். அதை பதிவு செய்தால், யூசர் நேம், .டி., கிடைக்கும். மொபைல் போன், கணினி மூலம், லஞ்சம், ஊழல் குறித்த, எஸ்.எம்.எஸ்., புகைப்பட, வீடியோ ஆதாரங்களையும் அனுப்பலாம். இது, ஆவணமாக்கப்பட்டு உடனடி விசாரணை துவங்கும். தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்க இது உதவியாக இருக்கும்.

No comments:

Post a Comment