Thursday, 12 December 2013

தூண் இடிந்து விழுந்தால் உலகம் அழியுமாம்..!!

காராஷ்டிராவின் மால்ஷேஜ் காட் ஸ்தலத்தின் முக்கியமான வரலாற்று சின்னமான ஹரிஷ்சந்திரகட் கோட்டை 6-ஆம் நூற்றாண்டில் கலாசூரி பேரசசால் கட்டப்பட்டது. ஹரிஷ்சந்திரகட் கோட்டை கலாச்சூரி பேரரசின் காலத்தில் 6-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

இதற்கு ஆதராமாக கோட்டையில் இடைக்கற்கால மனிதர்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இந்த கோட்டைக்கு அருகில் உள்ள ஹரிஷ் சந்திரேஷ்வர் கோயிலுக்கு வலது புறமாக சென்றால்  கேதாரேஷ்வர் குகை ஆகியவற்றில் காணப்படும் சிற்ப வேலைப்பாடுகள் இடைக்காலத்தை சேர்ந்தவை.
ஹரிஷ்சந்திரேஷ்வர் கோயிலுக்கு வலது புறமாக சென்றால் கேதாரேஷ்வர் குகை என்ற மிகப்பெரிய குகையை அடையலாம். இங்கு முழுவதுமாக நீரால் சூழப்பட்ட பெரிய சிவலங்கம் ஒன்று அமைந்திருக்கிறது.

5 அடி உயரமுள்ள இந்த லிங்கத்தை சுற்றி இடுப்பளவு நீர் சூழ்ந்துள்ளது. அதோடு இந்த நீர் மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால் இதை கடந்து லிங்கத்தை அடைவது சற்று கடினமானது. அதுமட்டுமல்லாமல் மிகப்பெரிய நீர் பிரவாகமே இங்கு ஓடும் என்பதால் மழைக்காலத்தில் இந்தக் குகையை அடைவது முடியாத காரியம். மேலும் சிவலிங்கத்தை சுற்றி நான்கு தூண்கள் அமையப்பெற்றுள்ளன.
இந்தத் தூண்கள் சத்ய யுகம், த்ரேத யுகம், த்வாபர யுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களை குறிப்பதாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு யுகம் முடிவடையும் போதும் ஒவ்வொரு தூணாக இடிந்து விழும். அதன்படி தற்போது 3 தூண்கள் இடிந்துவிட்ட நிலையில் கலியுகத்தின் முடிவில் நான்காவது தூணும் இடிந்துவிடும் என்று நம்பப்படுகிறது. அந்த நாளில் இந்த உலகமும் அழிந்துவிடும் என்று ஒரு நம்பிக்கை நிலவுகிறது….!

No comments:

Post a Comment