Tuesday, 20 August 2013

ரோட்டோர கடையில் டிபன்... ரசிகர்கள் ஆசை தீர போட்டோ - உச்சி குளிர வைத்த அஜீத்



 பெங்களூருக்கு தனது புதிய பைக்கிலேயே பயணம் செய்த நடிகர் அஜீத், வழியில் தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். பெங்களூரில் ஓய்வெடுக்க நேற்று தனது பிஎம்டபுள்யூ டுகாட்டி பைக்கில் கிளம்பிய அஜீத், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், ஆத்தூர் வழியாக பெங்களூர் போனார். அப்போது ஆத்தூர் அருகே உள்ள காட்டுக்கோட்டை கிராமத்தில் ரோட்டோர உணவகம் ஒன்றைப் பார்த்ததும், தனது பைக்கை நிறுத்தினார்.
                அவருடன் கார் மற்றும் பைக்கில் வந்த 8 நண்பர்கள் மற்றும் உதவியாளர்களும் அங்கேயே வாகனங்களை நிறுத்திவிட்டு, அஜீத்துடன் சாப்பிட அமர்ந்தனர். வந்திருப்பவர் நடிகர் அஜீத் என்பதை அவர் ஹெல்மட் கழட்டியதுமே தெரிந்து கொண்ட கடைக்காரருக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லையாம். அஜீத்துக்கு விருப்பமானதை கேட்டு பரிமாற ஆரம்பித்தபோது, விஷயம் தெரிந்து ரசிகர்கள் குழுமிவிட்டனர். அவர்களை உதவியாளர்கள் விலக்க முயன்றபோது, அஜீத் தடுத்துவிட்டாராம். ரசிகர்களைத் தன்னிடம் அழைத்து அவர்களை நலம் விசாரித்த அஜீத், ரசிகர்கள் விரும்பிய அளவுக்கு போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.
          ரசிகர்களையும் தன்னோடு உணவு அருந்தும்படி கூறினார். ரசிகர்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார்கள். சிறிது நேரத்தில் நிருபர்கள், போட்டோ கிராபர்களும் திரண்டனர். அவர்களிடம் தான் பெங்களூருக்கு ஓய்வுக்காக ஜாலியாக பைக்கில் போவதாகவும், ஓய்வு நேரத்தில் பைக் ரேசில் பங்கேற்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தார். சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் வீரம் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.

Sunday, 18 August 2013

கண்களை காக்க எளிய 5 வழிகள்!




விழித்திரை என்னும் மெல்லிய உறுப்பு உலகின் அதிசயங்களையும் விந்தைகளையும் கண்ணால் காண உதவுகிறது. அத்தகைய பெரும் வேலையை செய்யும் நம் கண்களுக்கு ஆபத்து மிக எளிதில் வந்துவிடுகிறது. அதனை காக்கவோ மிக எளிய வழிமுறைகளை பின்பற்றினாலே போதுமானது.

வழிகள்;

1. டிவி பார்க்கும் போது இருட்டு அறையில் பார்க்காமல் திரைக்கு பின் ஏதேனும் ஒரு ஒலி இருக்கும்படி கவனித்துகொள்ளவும்.

2. படிக்கும் பொழுது கண்களை மிகவும் அலட்டாமல், கண்கள் சோர்வடையும் வரை நீடித்து படிக்காமல் இருக்கவும்.

3. கான்டேக்ட் லென்ஸ் அல்லது கண்ணாடிகளை தேவைக்கு ஏற்ப உபயோகிக்கவும்.

4. கம்ப்யூட்டர் மானிட்டரை கண்பார்வைக் கோட்டிற்கு கீழ் அமையும்படி பார்த்துகொள்ளவும்

5. கம்ப்யூட்டரில் வேலை பார்க்கும்போது சிறு சிறு இடைவேளைகள் எடுத்துகொள்வது அவசியம்

மஞ்சள் காமாலை உருவாகக் காரணம் மற்றும் தீர்வு



பொதுவாக மஞ்சள் காமாலை நோய் பித்தம் அதிகரிப்பதால் வருகிறது. பித்தமானது பல காரணங்களால் மிகுதியாகி ரத்தத்தில் கலந்து விடுவதால் மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது.

உடல் உஷ்ணத்தாலும், இரவில் கண்விழித்து வேலை பார்ப்பதாலும், தூக்கமின்மையாலும், வயிற்றில் புளிப்புத்தன்மை ஏற்பட்டு சளி பிடித்து, ரத்தம் சூடேறி, காமாலைக் கிருமிகள் உண்டாகி, மஞ்சள் காமாலை நோயைத் தோற்றுவிக்கிறது.

இந்த பித்தமானது நஞ்சு போல் உடலில் எங்கும் வியாபிக்கக்கூடிய தன்மையுள்ளது. அதோடு மட்டுமல்லாமல், நவீன உலகத்தில் உணவுப் பழக்கங்களாலும், மிதமிஞ்சிய உணவுகளாலும், பாமாயில் கலக்கப்பட்ட எண்ணெய்களாலும் ஒருதடவை சமைத்த உணவை குளிர்சாதன பெட்டியில் வைத்து தேவைப்படும் போது மாறி மாறி சூடுபண்ணி பல நாட்கள் சாப்பிடுவதாலும், உண்ட உணவானது உடலில் புளிப்புத் தன்மையை உண்டாக்கி செரியாமை ஏற்பட்டு குடலின் பித்தமானது சளியோடு கலந்து ரத்தத்தில் சேர்ந்துவிடுகிறது. இப்படிப்பட்ட உணவுப் பழக்கங்களால், மஞ்சள் காமாலை நோய்த் தொற்று ஏற்படுகிறது.

மேலும், தலையில் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தை மறந்ததாலும் நரம்புகள் சூடாகி பித்தம் அதிகரித்து மஞ்சள் காமாலை நோய் உண்டாகிறது. பித்தமானது அலர்ஜியாகும் போது காமாலை நோய்க்கிருமி தோன்றி, முதலில் கல்லீரலைப் பாதித்து, கண்களில் மஞ்சள் நிறம் தோற்றுவிக்கிறது. சிறுநீர் மஞ்சளாக வெளியேறுகிறது.

மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிறுநீர், மலம் கழித்த இடத்தை மற்றவர்கள் பயன்படுத்தினால் அவர்களையும் நோய்த் தொற்ற வாய்ப்புண்டு. ஆகையால், பாடசாலை முதல், கல்லூரி வரை ஏதேனும் ஒரு மாணவருக்கு மஞ்சள்காமாலை நோய் இருந்தால் அது மற்றவர்களுக்கு எளிதில் பரவி விடுகிறது.

பொதுவாக இப்படிப்பட்ட பித்த அலர்ஜியால் உண்டாகும் மஞ்சள் காமாலைக்கு நாட்டு மருத்துவத்தில் கீழாநெல்லி என்ற மூலிகையை அதிகம் பயன்படுத்துவார்கள்.

கீழாநெல்லி - ஒரு கைப்பிடி
சீரகம் - 1 ஸ்பூன்

இரண்டையும் நீர்விட்டு அரைத்து கஷாயம் செய்து காலை, மாலை இருவேளையும் கொடுத்து வந்தால் பித்தம் தணிந்து, காமாலை நோய்த்தொற்று கிருமிகள் அழியும்.

கீழாநெல்லி, சுக்கு, மிளகு, சீரகம், சோம்பு, மஞ்சள் இவற்றை சம அளவு எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து, சர்க்கரை கலந்து 4 மணி நேரத்திற்கு ஒரு முறை அருந்தி வந்தால் மெல்ல மெல்ல முழுமையாக குணமடையும்.

கீழாநெல்லி, சீரகம், பூவரச பழுத்த இலை, கரிசலாங்கண்ணி (வயல் வெளியில் வெள்ளைப்பூக்கள் நிறைந்து காதில் அணியும் கம்மல் போன்று இருக்கும்) இவை அனைத்தும் 3 கிராம் அளவிற்கு எடுத்துக் கசாயம் செய்து காலை, மாலை வேளைகளில் சாப்பிடும் முன் அருந்தினால் காமாலை நோய் குணமாகும்.

காய்ச்சல், குளிர்சுரம் வந்தால், பித்தத்தை அதிகப்படுத்தும் உணவுகளை தவிர்ப்பது நல்லது.

பித்தத்தைத் தணிக்க, காய்கள், கீரைகள், பழவகைகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.

நாள்பட்ட உணவுகளை சூடாக்கி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

மழைக்காலங்களில் நீரை கொதிக்க வைத்து ஆறிய பின் அருந்தவேண்டும்.

புளி, உப்பு, காரம் குறைத்து சாப்பிட வேண்டும். எண்ணெய்ப் பலகாரங்களையும், அதிக எண்ணெய் சம்பந்தப்பட்ட பொருள்களையும் தவிர்க்க வேண்டும்.

நன்கு ஓய்வு எடுக்க வேண்டும்.

ஒரே தளத்தில் உலகப் பத்திரிகைகள்

உலகின் 82 நாடுகளில் வெளியாகும் 877 பத்திரிக்கைகளை ஒரே இணைய தளத்தில் பெறலாம். இந்த வாய்ப்பினை http://www.newseum. org/todaysfrontpages/flash/ என்ற முகவரியில் உள்ள இணைய தளம் தருகிறது. தளத்தின் செயலுக்கு ஏற்ற வகை யில் இதற்கு நியூசியம் (newseum) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த தளத்தில் நுழைந்தவுடன் அமெரிக்க கண்டத்தின் மேப் காட்டப்பட்டு எந்த நகரங்களிலிருந்து வெளியாகும் தினசரி நாளிதழ்கள் காட்டப்படுகின்றனவோ, அவற்றை அடையாளம் காட்டும் வகையில் புள்ளிகள் மூலம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. மற்ற நாடுகளுக்கு மேலாக அந்த கண்டங்களின் பெயர்களோடு டேப்கள் கிடைக்கின்றன. எனவே நாம் விரும்பும் நாட்டில், நகரம் மேப்பில் உள்ள இடத்தில், மவுஸ் கர்சரைக் கொண்டு சென்றால், என்ன செய்தித்தாள் என முன் பக்கத் தோற்றம் காட்டப்படுகிறது. அந்த செய்தித் தாளின் செய்திகளைப் படிக்க அதனைக் கிளிக் செய்து அதன் மின் பதிப்பைப் பெறலாம். தொடர்ந்து கிளிக் செய்தால், செய்தித்தாள் முழுவதும் படிக்கக் கிடைக்கும்.
ஆங்கிலம் மட்டுமின்றி பிற மொழிகளில் வெளியாகும் செய்தித்தாட்களும் கிடைக்கின்றன. ஒவ்வொரு நாளும் அந்த அந்த நாளுக்குரிய செய்தித்தாள் கிடைக்கிறது. செய்தித்தாள் நிறுவனம் தன் பக்கங்களை மாற்றுகையில், இங்கும் அப்டேட் செய்யப்படுகிறது. எனவே பன்னாட்டு செய்திகளை ஒரே இணையதளம் மூலம் கிடைக்கும் வாய்ப்பு பெறுகிறோம்.
எந்தவிதத் தணிக்கையும் இன்றி காட்டப்படுவதால், சில வேளைகளில் நாட்டுக்கு நாடு பிரச்னைக்குரிய தடை செய்யப்பட்ட செய்திகளும் இங்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.


Wednesday, 14 August 2013

கொண்டாடுவோம்…



பல்சான்றீரே... பல்சான்றீரே
பாரத நிலை கண்டு
பரவசம் கொள்வோம்

கொடியேற்றி இனிப்பு வழங்கி
கொண்டாடுவோம் – மக்களை
கோமாளிகளாக்குவோம்

வேதனைகளை சாதனையாக்கும்
வித்தை கற்போம்

அறியாமை இருளில்
அடைந்து கிடப்பதில்
ஆனந்தம் கொள்வோம்

அந்நியச் சுரண்டலை
அப்புறப் படுத்திய நாம்
சொந்தச் சுரண்டல் கண்டு
சும்மா கிடப்போம்

வறுமையில் வாடுபவனை
மேலும் வருத்தப்பட்டு
பாரம் சுமக்க வைப்போம்

நாளும் இங்கு
நாற்பது கோடி பேர்
பட்டினி கிடப்பினும்
அணுகுண்டு செய்வதில்
ஆர்வம் காட்டுவோம்
 
மனித நேயத்தை கழுவி விட்டு
மதவேஷம் பூசிக் கொள்வோம்
மொழிக்காகவும் இனத்துக்காகவும்
மோதிக் கொள்வோம்

சாதிக்காக
சண்டையிடுவோம்
 
தண்ணீருக்காக
தகராறு செய்வோம்
சத்தியங்களைப் புதைத்து விட்டு
பம்மாத்துகளுக்கு
பாத பூஜை செய்வோம்

பேதங்கள் தாங்கிய
ஜனநாயகச் சட்டங்களை
வேதங்களென்று வணங்குவோம்

வாழ வழி கேட்போருக்கு
கல்லறைப் பக்கம் கை காட்டுவோம்

செங்குருதி தியாகங்களை
சில்லறைகளாக மாற்றுவோம்

எது பற்றியும் கவலையின்றி
போதைக் கனவுகளில்
பூரித்துக் கிடப்போம்

அப்போதும் இப்போதும்
அதிக வேறுபாடில்லை
எப்போதும் நாம்
வெயிலையும் குளிரையும்
போர்த்தி அலைவோம்

ஆனாலும் நாமெல்லாம்
வேற்றுமையில் ஒற்றுமையாய்

வேதனைகளைச்
சாதனைகளாய்.....

பாரத நிலை கண்டு
பரவசம் கொள்வோம்.


-    சாய்சுசிலா மாரீஸ்.
-    படங்கள் : கூகுள் 

ஸ்ரீ பைரவ சித்தர் ஜீவ சமாதி ஆலயம்


சென்னை பூவிருந்தவல்லி (பூந்தமல்லி) யில்  உள்ள ஸ்ரீ வைதீஸ்வரன் கோவில் அருகே  ஆஞ்சநேயர் ஆலயம் ஒன்று அமைந்துள்ளது. அந்த ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு இரு தெருக்கள் தாண்டி அமைந்துள்ளது, ஸ்ரீ பைரவ சித்தர் ஜீவ சமாதி ஆலயம். எளிமையான தோற்றத்தோடு , ஒரு காம்பவுண்டிற்குள் அமைந்துள்ளது ஆலயம். ஆஞ்சநேயர் ஆலயம் அருகே விசாரித்தால் , வழி கூறுவார்கள். 
           வல்லப சக்தியோடு கூடியதான விநாயகர் திருக்கோலம் முதலில் அமைந்துள்ளது.அதனை அடுத்து அமைந்துள்ள அறையில் ஸ்ரீ பைரவ சித்தரின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. மிகவும் சக்திபடைத்ததாக அமைந்துள்ளது. பைரவ உபாசனை செய்பவர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய இடம் ஆகும். 





Vande Mataram