தமிழ்நாட்டில் & சிதம்பரத்தில் இருந்து
இருபது கிலோ மீட்டர் தொலைவில் கடலூருக்கு அருகே அமைந்திருக்கும் கிராமம் மருதூர்.
இந்த ஊரின் கணக்குப்பிள்ளை
யாகவும் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித்தரும் ஆசிரியராகவும் விளங்கியவர் ராமையா.
இவர் மனைவி பெயர் சின்னம்மை.
ராமையா&சின்னம்மை தம்பதிக்கு
ஐந்து குழந்தைகள் பிறந்தன. சபாபதி, பரசுராமர் என்ற ஆண் குழந்தைகளும் உண்ணாமுலை, சுந்தரம்மாள் என்ற பெண் மக்களும் பிறந்து, ஐந்தாவதாக 1823-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 5-ஆம் நாள் ஞாயிறு மாலை 5.54 மணியளவில் ஓர் ஆண்குழந்தை
பிறந்தது. குழந்தைக்கு ராமலிங்கம் எனப் பெயர் சூட்டினர்.
ராமலிங்கம் பிறந்த ஆறாவது
மாதத்தில் தந்தை ராமையா காலமானார். சின்னம்மை, தன் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் கருதி சென்னைக்கு வந்து
சேர்ந்தார்.
மூத்த மகன் சபாபதி, காஞ்சிபுரம் மகாவித்துவான்
சபாபதியிடம் கல்வி பயின்றார். புராணச் சொற்பொழிவில் வல்லவரானார்.
சொற்பொழிவுகளுக்குச் சென்று வருவதன் மூலம் கிடைக்கும் பொருளை வைத்துக் குடும்பம்
நடத்தி வந்தார்.
சபாபதியே, தம்பி ராமலிங்கத்துக்குக் கல்வி கற்பித்தார். பிறகு, தான் பயின்ற காஞ்சிபுரம்
மகாவித்துவான் சபாபதியிடம் கல்வி பயில அனுப்பினார்.
ஒருகட்டத்தில் மீண்டும்
சென்னைக்கே வந்த ராமலிங்கம் அடிக்கடி கந்தசாமி கோயிலுக்குச் சென்றார்.
கந்தகோட்டத்து முருகனை வழிபட்டு மகிழ்ச்சியடைந்தார். இளம்வயதிலேயே இறைவன்மீது
பாடல்கள் இயற்றிப் பாடினார்.
பள்ளிக்கும் போகாமல், வீட்டிலும் தங்காமல்
கோயில்களில் சுற்றிவந்த ராமலிங்கத்தை அண்ணன் சபாபதி கண்டித்தார். ஆனால், ராமலிங்கம் அவருக்குக்
கட்டுப்படவில்லை. எனவே, அண்ணன் தன் மனைவி பாப்பாத்தி அம்மாளிடம் ராமலிங்கத்துக்குச் சாப்பாடு
போடுவதை நிறுத்துமாறு கடுமையாக உத்தரவிட்டார். பாசமான அண்ணியின் வேண்டுகோளுக்கு
இணங்கிய ராமலிங்கம், வீட்டில் தங்கிப் படிப்பதாக உறுதியளித்தார்.
ராமலிங்கத்துக்கு வீட்டில்
மாடியறை ஒதுக்கப்பட்டது. புத்தகங்களோடு அவர் மாடியறைக்குச் சென்றார். சாப்பிடும்
நேரம் தவிர, மற்ற
நேரங்களில் அறையிலேயே தங்கி முருக வழிபாட்டில் தீவிரமாக ஈடுபட்டார். ஒரு நாள்
சுவரிலிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் தணிகை முருகன் தனக்குக்
காட்சியளித்ததாகப் பரவசப்பட்டுப் பாடல்கள் பாடினார்.
புராணச் சொற்பொழிவு
செய்யும் அண்ணன் சபாபதிக்கு, ஒருமுறை உடல்நலம் குன்றியதால் ஒப்புக்கொண்ட சொற்பொழிவுக்குச் செல்ல
முடியவில்லை. எனவே அவர், தம்பி ராமலிங்கத்திடம் சொற்பொழிவு நடக்கவுள்ள இடத்துக்குச் சென்று, சில பாடல்களைப் பாடி, தான் வரமுடியாத குறையைத்
தீர்த்துவிட்டு வருமாறு கூறினார். அதன்படி ராமலிங்கம் அங்கு சென்றார்.
அன்றைய தினம் சபாபதியின்
சொற்பொழிவைக் கேட்க ஏராளமானோர் கூடியிருந்த னர். அண்ணன் சொன்ன படியே சில பாடல்களை
மனமுருகப் பாடினார் ராமலிங்கம். இதன்பின், அவரிடம் ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்த்துமாறு அங்கு கூடியிருந்தோர் வெகுநேரம்
வற்புறுத்தினர். எனவே, ராமலிங்கமும் அதற்கு இசைந்தார்.
அந்தச் சொற்பொழிவு இரவில்
நெடுநேரம் நிகழ்ந்தது. அனைவரும் வியந்து போற்றினர். இதுவே அவருடைய முதல்
சொற்பொழிவு. அப்போது அவருக்கு வயது ஒன்பது.
ராமலிங்கம் தன்
பன்னிரண்டாம் வயதில் திருவொற்றியூர் சென்று வழிபடத் தொடங்கினார். அவர் வசித்துவந்த
ஏழுகிணறு பகுதியிலிருந்து திருவொற்றியூருக்குத் தினமும் நடந்தே சென்று வழிபட்டு
வருவது அவர் வழக்கம்.
பலரது வற்புறுத்தலுக்கு இணங்க, ராமலிங்கம் தன்
இருபத்தேழாவது வயதில் திருமணத்துக்குச் சம்மதித்தார். அவர் சகோதரி உண்ணாமுலையின்
மகள் தனக்கோடியைத் திருமணம் செய்துகொண்டார். ராமலிங்கம் அமைதியை நாடியவர். கடவுள்
என்றால் என்ன என்று அறிய விரும்பியவர். எனவே, 1858&ஆம்
ஆண்டு சென்னையிலிருந்து புறப்பட்டுப் பல தலங்களைத் தரிசித்து சிதம்பரத்தை
அடைந்தார்.
அங்கே அவரைக் கருங்குழி கிராமத்து மணியக்காரரான திருவேங்கடம் என்பவர் சந்தித்துத் தன் ஊரில், தன் இல்லத்தில் வந்து தங்கியிருக்குமாறு வேண்டிக்கொண்டார். அவரது அன்புக்குக் கட்டுப்பட்ட ராமலிங்கம் மணியக்காரரின் இல்லத்தில் ஒன்பது வருடங்கள் தங்கியிருந்தார்.
ராமலிங்கம் தங்கியிருந்த அறையில் விளக்குக்கு
எண்ணெய் வைக்கும் மண்கலயம் ஒரு நாள் உடைந்துவிட, மணியக்காரரின் மனைவி புதுக்கலயம் ஒன்றை வைத்தார். அந்தக் கலயம் பழக்கப்பட
வேண்டுமென்று அதில் நீர் நிரப்பிவைத்த மணியக்காரரின் மனைவி, பின்னர் அதைச்
சுத்தப்படுத்தி எண்ணெய் நிரப்பிவைக்க மறந்துபோனார்.
அன்றிரவு ராமலிங்கம்
வெகுநேரம் எழுதிக் கொண்டிருந் தார். விளக்கில் ஒளி மங்கும்போதெல்லாம் கலயத்தில்
இருந்த நீரை,எண்ணெய் என்று கருதி விளக்கில் ஊற்றிக் கொண்டே இருந்தார். விடியும்வரை
விளக்கு பிரகாசமாகத் தண்ணீரில் எரிந்த அற்புதம் அன்று நிகழ்ந்தது!
கருங்குழியில்
தங்கியிருந்தபோது 1865&ஆம் ஆண்டு ராமலிங்கம் "சமரச வேத சன்மார்க்க சங்கம்" என்ற அமைப்பை
உருவாக்கினார். பிற்காலத்தில் அந்தப் பெயரை "சமரச சுத்த சன்மார்க்க சத்தியச்
சங்கம்" என்று மாற்றியமைத்தார். இந்தப் புதிய சங்கத்தின் கொள்கைகளாக அவர்
அறிவித்தவை, மக்கள்
பின்பற்றக்கூடிய மிக எளிய கொள்கைகள். அவை:
கடவுள் ஒருவரே.
கடவுளை உண்மையான அன்புடன், ஒளி வடிவில் வழிபட
வேண்டும்.
சிறு தெய்வங்களின் பெயரால்
உயிர்ப்பலி கொடுக்கக்கூடாது.
மாமிச உணவை உண்ணக்கூடாது.
ஜாதி, மத வேறுபாடு கூடாது.
பிற உயிர்களையும்
தன்னுயிர் போல் கருத வேண்டும்.
பசித்த உயிர்களுக்கு உணவு
அளித்து ஆதரிப்பதும் உயிர்க்கொலை செய்யாத பண்புமாகிய ஜீவகாருண்ய ஒழுக்கத்தைக்
கடைப்பிடிக்க வேண்டும்.
ஜீவகாருண்ய ஒழுக்கமே
பேரின்ப வீட்டின் திறவுகோல்.
பசித்த உயிர்களுக்கு
உணவளிப்பது எல்லாப் புண்ணியங்களுக்கும் மேலானது என்று உபதேசித்து வந்த ராமலிங்க
அடிகள், அன்னதானச்
சாலை ஒன்றை அமைக்க எண்ணம் கொண்டார்.
No comments:
Post a Comment