Tuesday 7 January 2014

இறந்தவர்கள் உயிருடன் எழுப்பப்படுகின்ற அதிசயம்!.

றந்தவர்கள் உயிருடன் எழுப்பப்படுகின்ற அதிசயத்தை நீங்கள் கேள்விப்பட்டு இருக்கின்றீர்களா...?

ஆனால், இது முற்றிலும் உண்மை. நம்புவதும் நம்பாமல் விடுவதும் உங்களை பொறுத்தது.

இந்த நிகழ்வு இந்தோனேஷியாவில் நடக்கிறது. இறந்தவருக்கான சடங்குகளை முறைப்படி செய்ய வேண்டும் என்பதால் இதற்காகவே உயிருடன் எழுப்பப்படுகின்றார்.

உயிருடன் எழுப்பப்படுவரால் சுயமாக நடக்க முடியும் பிறந்த ஊருக்கு நடந்து செல்வார். ஆனால், இவரால் தொடர்ந்து உயிர் வாழ முடியாது. சடங்கு முடிந்த பின்னர் மீண்டும் சடமாகி விடுவார். இறந்தவரை உயிருடன் எழுப்ப மந்திரம் பிரயோகிக்கப்பட்டு ஒரு விசித்திரமான சடங்கு நடத்தப்படுகிறது. இவற்றை மந்திர வைத்தியர் ஒருவர் செய்து வைப்பார்.

ரொரஜா என்கிற இந்த இன மக்கள் (மலைகளின் மனிதர்கள்) மத்தியில் இந் நடைமுறை இன்றும் நிலவி வருகின்றது. மரணம் நிரந்தரம் அல்ல,மரணம் ஒரு நாளைக்கு மாத்திரம் உரிய விஷயமும் அல்ல என்பதாலும் மரணம் நீண்ட கால படிமுறைகளை கொண்டது என்றும் இம்மக்கள் நம்புவதால் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இவர்களது நம்பிக்கையின்படி மரணத்தின் முதலாவது படிமுறை முடிந்ததும் அடுத்த படிமுறை ஆரம்பம் ஆகின்றது.

மரணம் என்கிற நீண்ட கால முன்னெடுப்பு முடிவடைய பல வருடங்கள் கூட ஆகலாம் என்கின்றனர். இறந்தவர் மரணத்தின் பின்னரான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும். இதை பூஜா என்று சொல்கின்றனர். மரணத்துக்கு பின்னரான வாழ்க்கையை நல்லபடியாக அமையவே சடங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன. இறந்தவர் மிகப் பழைமை வாய்ந்த சடங்கு முறை வழியில் உயிர் கொள்ளச் செய்யப்படுகின்றார். உடனே இறந்தவர் எழுந்து நடக்க தொடங்குவார்.


பிறந்த ஊருக்கு செல்லுவார். இறந்தவரை பிறந்த இடத்தில்தான் புதைக்க வேண்டும் என்பதால் இந்த ஏற்பாடு. ஆயினும் இந்த நிகழ்ச்சியில் ஒரு மிக முக்கியமான விஷயம் கவனிக்கபடவேண்டியது என்னவென்றால் எவரேனும் இவருடன் (இறந்தவருடன்) உரையாட முயன்றால் அந்த இடத்திலேயே விழுந்து மீண்டும் சவமாகி விடுவார். எனவே இவருக்கு முன்பாக குடும்ப அங்கத்தினர் ஒருவர் நடந்து சென்று கொண்டே இறந்து உயிர் பெற்று இருப்பவருடன் உரையாட முயல வேண்டாம் என்று எச்சரித்துக்கொண்டே செல்வார்....!

No comments:

Post a Comment