Wednesday, 1 January 2014

256 வருடங்கள் உயிர் வாழ்ந்த அதிசய மனிதர்!.


    இந்தியாவைப் பொறுத்தவரை சித்தர்களுக்கென்று தனி மரியாதை உண்டு. முனிவர்களும், சித்தர்களும் மூலிகைகளை மட்டுமே உணவாகக் கொண்டு பல நூற்றாண்டு வாழ்ந்தனர் என்பது செய்தி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரஜினி நடித்து வெளிவந்த பாபா திரைப்படத்தில் கூட பாபாவாக வருபவர் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளாக, இன்றளவும் வாழ்ந்து வருவதாக கூறுபவர்கள் அநேகம். இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியாது. ஆனால் நூற்றாண்டுகளைக் கடந்தவர்களை நாம் பார்த்திருக்கிறோம். ஜப்பானில்தான் தனி மனிதனின் ஆயுள் நூறாண்டுகளுக்கு மேல் உண்டு. அவ்வப்போது சேனல்களிலும், செய்தித் தாள்களிலும் உலகிலேயே அதிக ஆண்டுகள் வாழ்ந்த தாத்தா மரணம், மூதாட்டி காலமானார் என்ற செய்தியை கேள்விப்பட்டிருப்போம். அவர்கள் வயது என்று பார்த்தால் நூற்றுப் பத்து, நூற்று பதினைந்து என்று இருப்பதைக் கண்டு நாம் ஆச்சரியத்தில் வாய் பிளந்திருக்கிறோம்.

ஆனால் சீனாவைச் சேர்ந்த ஒருவர்தான் இந்த நூற்றாண்டின் அதிக வயது வாழ்ந்தவர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார். எத்தனை ஆண்டுகள் தெரியுமா..? நூறல்லஇருநூற்றுச் சொச்சம் ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார். சரியாகச் சொல்வதென்றால் 256 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார். லீ சிங் யூன் என்ற அவர் பிறந்தது 1677ம் ஆண்டு. ஆனால் தான் 1736ம் ஆண்டு பிறந்ததாக லீ எழுதி வைத்துள்ளார். அவர் பிறந்த ஆண்டு சீனாவை சிசுவான் வம்சத்தினர் ஆண்டு வந்துள்ளனர். குயிங் என்பவர் அரசியாக இருந்துள்ளார். சித்த மருத்துவம் படித்திருந்த லீ உணவுக்குப் பதில் மூலிகையே உணவு என்ற கொள்கையுடன் வாழ்ந்தவர். இது தவிர சீனாவின் முக்கிய தற்காப்புக் கலையான ஷாவ்லினை முறைப்படிக் கற்று, அது தொடர்பான விபரங்களை விரல் நுனியில் வைத்திருந்தார் லீ. மேலும் போர் தந்திரங்கள் தெரிந்து வைத்திருந்தவர். இதனால் அவரின் இளமைக்காலத்தில் பல்வேறு இடங்களுக்குச் சென்று போர் தந்திரங்களை கற்றுக் கொடுத்து வந்தார். முறையாக 1749ம் ஆண்டு சீன ராணுவத்தில் சேர்ந்து வீரர்களுக்கு போர் தந்திரங்களையும், தற்காப்பு கலையையும் கற்றுக் கொடுத்துள்ளார் லீ. அப்போது அவருக்கு வயது 71.சீனாவின் கிஜீயாங் மாகாணத்தில் பிறந்த லீ க்கு கடந்த 1827ம் ஆண்டு 150 வது பிறந்தநாள் அவரது கிராம மக்களால் கொண்டாடப்பட்டது. இது தொடர்பான விபரங்களை சாங்தூ பல்கலைக்கழக பேராசிரியர் வூ சுங் சீ என்பவர் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் கட்டுரையாக எழுதியுள்ளார். தொடர்ந்து 1877ம் ஆண்டு லீயின் 200 வது பிறந்ததினம் கொண்டாடப்பட்டது. அந்த சமயத்தில் அண்டை வீட்டுக்காரருடன் தகராறில் ஈடுபட்டதாக லீ மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


இறுதியாக 1933ம் ஆண்டு லீ இறந்தார். அதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னர் அவர் கூறியதாவது, ‘இந்த உலகத்தில் நான் எல்லாவற்றையும் பார்த்து விட்டேன். மீண்டும் எனது இல்லத்துக்குச் (கடவுளிடம்) செல்கிறேன்லீ இறந்ததைக் கேள்விப்பட்ட சீன அரசு இதுபற்றி விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கச் சொன்னது. இதையடுத்து ராணுவ ஜெனரல் யாங் சென் தலைமையிலான குழு விசாரணை நடத்தி இறுதி அறிக்கை தாக்கல் செய்த பின்னரே லீயின் இறப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment