Wednesday, 28 May 2014

பஞ்சபூதங்களின் ஆளுமை நேரம்!!!

பஞ்சபூதங்களின் ஆளுமை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காலமாக நமக்கு வரும். அதனை தெரிந்துக்கொண்டு நாம் பல்வேறு விசயங்களுக்கு பயன்படுத்தலாம். அந்த விபரங்களை வரும் பதிவுகளில் நான் தருகிறேன்.

ஒவ்வொரு நாளும் பஞ்சபூத ஆளுமை பகல் நேரத்தில்

காலை 6 -  8:24 ஆகாயம்

காலை 8:25 - 10.48 வாயு

காலை 10:49 - 1:12 நெருப்பு

பிற்பகல் 1:13 - 3:36 நீர்

பிற்பகல் 3:37 - 6:00 நிலம்

ஒவ்வொரு நாளும் பஞ்சபூத ஆளுமை இரவு நேரத்தில்

மாலை 6.00 - 8:24 நிலம்

இரவு 8:25 - 10:48 நீர்

இரவு 10:49 - 1:12 நெருப்பு

நள்ளிரவு 1:13 - 3:36 வாயு

நள்ளிரவு 3:37 - 6:00 ஆகாயம்

அதிகாலை 3:37 மணி முதல் 6:00 மணி வரை

இது மிகவும் சாத்வீகமான நேரம். யாகம் செய்வதற்க்கு மற்றும் காயத்ரி மந்திரம் செய்வதற்க்கு உகந்த நேரம். பஞ்சபூதத்தில் ஆகாயத்தை குறிக்கும் நேரம் இது. ஆகாயம் என்பது வெட்டவெளி. இந்த வெட்டவெளியைப் பற்றி சிவமே பகுதியல் நாம் நிறைய பார்த்திருக்கிறோம். அமுதம் போன்ற நேரம் இது. ஆத்மாவிற்க்கு பலத்தை அதிகப்படுத்தும் நேரம் இது. கண்டிப்பாக இந்த நேரத்தில் நீங்கள் தூங்ககூடாது. தியானம செய்வதற்க்கு நல்ல நேரம் இதுதான். உங்களுக்கு நல்ல குழந்தைகள் கிடைக்க வேண்டும் என்றால் இந்த நேரத்தில் உடல்உறவை வைத்துக்கொண்டால் நல்லது.

காலை 6:01 மணி முதல் 8:24 மணி வரை

காலை 6:00 மணிக்கு குளிர்ச்சியான நேரம். அஸ்திவாரக்கல் நாட்ட சிறப்பான நேரம். வீடு கட்ட அடிக்கல் நாட்டினால் குடியிருப்பவரின் மனம் குளிர்ந்து இருக்கும். இந்த நேரத்தில் நட்சத்திர தோஷம், திதி தோஷம், கிழமை தோஷம் எதுவும் கிடையாது, தியானம் ,காயத்ரி ஜபம், ஆசனம், பிரணாயாமம் ஆகியன செய்ய உத்தம நேரம்.

காலை 8:25 மணி முதல் 10:48 மணி வரை

தான தர்மம் செய்வதற்க்கு இந்த நேரம் உகந்தது. இந்த நேரத்தில் தானதர்மம் செய்யும்பொழுது உங்களுக்கு புண்ணியம் அதிகமாக வரும். இந்த நேரத்தில் நீங்கள் எப்படியாவது பிறர்க்கு தானம் செய்திடவேண்டும். இந்த நேரத்தில் தானம் செய்யும்பொழுது புண்ணியம் இருமடங்காக உயரும்.

காலை 10:49 மணி முதல் மதியம் 1:12 மணி வரை

இந்த நேரத்தில் கண்டிப்பாக ஒவ்வொரு மனிதனும் உழைக்க வேண்டிய நேரம் இது. உழைத்து அதில் இருந்து வரும் வருமானத்தில் சாப்பிடவேண்டும். முதியோர் கூட இந்த நேரத்தில் சின்ன வேலையாவது செய்ய வேண்டும்வேலை செய்யாமல் இருத்தல் கூடாது.

மதியம் 1:13 மணி முதல் மாலை 3:36 மணி வரை

இறந்துபோனவர்கள் மூதாதையர் பூமியில் உலவும் நேரம். இந்த நேரத்தில் பித்ருக்களுக்குத் திவசம் திதி தர்ப்பணம் முதலியவைகளைச் செய்தல் வேண்டும். இறந்துபோன ஆத்மாக்கள் உலவும் நேரம் என்பதால் அதிகப்பட்சமாக வெளியில் செல்லகூடாது என்பார்கள். அவசர உலகத்தில் யார் இது எல்லாம் பார்க்கிறார்கள். இந்த நேரத்தில் இறந்தவர்களை வீட்டில் இருந்து எடுக்ககூடாது. அப்படி எடுத்துச்சென்று எரித்தல் அல்லது புதைத்தல் செய்தால் அந்த வீட்டில் மீண்டும் மரணம் ஏற்படும்.

மாலை 3:37 மணி முதல் மாலை 6:00 மணி வரை

இந்த நேரத்தில் நீங்கள் ஆன்மீக விசயங்களை பற்றி சொற்பொழிவை கேட்கலாம்இந்த நேரத்தில்  ஞானத்தைப்பற்றி பேச்சை கேட்டால் உங்களுக்கு நல்ல ஆன்மீக அனுபவங்கள் ஏற்படும்.

மாலை 6:00 மணி முதல் இரவு 8:24 மணி வரை

இந்த நேரத்தில் எல்லாக் கோயில்களிலும் வழிபாடு நடக்கும். பிரம்மமுகூர்த்த நேரம் என்றும் இதனை சொல்லுவார்கள். தியானம் செய்ய இந்த நேரத்தை பயன்படுத்தலாம். உங்களின் வீட்டில் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

இரவு 8:25 மணி முதல் 1:12 மணி வரை

வடநாட்டில் இந்த நேரத்தில் திருமணம் செய்வார்கள். மந்திரத்தை கற்றுக்கொள்ள உகந்த நேரம். கூடுவிட்டுக் கூடு பாய்தல் போன்ற வித்தைகளை செய்யகூடிய நேரம் இது.

இரவு 10:49 மணி முதல் 1:12 மணி வரை

சித்து விளையாட்டுக்களை கற்றுக்கொள்ள கூடிய நேரம் இது. மாந்தீரிக மந்திரங்கள் செய்யகூடிய நேரம் இது. தொலைவில் உள்ள பொருட்களை அருகில் வரச்செய்தல். விரும்புகிற போகங்களை இருக்கும் இடத்திற்கே வரவழைத்து அனுபவித்தல் ஆகிய சித்துகளை கற்றுக்கொள்ளவும் இந்த நேரத்தில் செய்யலாம். பகைவர்களை தன் வசப்படுத்துதல் வயது ஏறாமல் எப்பொழுதும் இளமையாக இருக்குமாறு செய்தல் போன்றவற்றிற்க்கு இந்த நேரம் உகந்தது.

நள்ளிரவு 1:13 மணி முதல் 3:36 மணி வரை


மனிதன் பலவீனமாக இருக்கின்ற நேரம் இது. துர்சக்திகள் அதிகமாக நடமாட்டம் உள்ள நேரம் இது. இந்த நேரத்தில் நாய்கள் குழைத்தால் அது துர்சக்திகள் வருகின்றன என்று அர்த்தம்.